26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
02 mangalorean
அசைவ வகைகள்

சுவையான மங்களூரியன் சிக்கன் குழம்பு

இதுவரை எத்தனையோ ஸ்டைல்களில் சிக்கன் குழம்புகளை செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் மங்களூரியன் ஸ்டைலில் சிக்கன் குழம்பை செய்து சுவைத்ததுண்டா? இந்த ஸ்டைல் சிக்கன் குழம்பிற்கு அதிக அளவில் தேங்காய் பால் தேவைப்படும். இதனால் இந்த ஸ்டைல் சிக்கன் குழம்பானது பிரமாதமாக இருக்கும்.

இங்கு அந்த மங்களூரியன் ஸ்டைல் சிக்கன் குழம்பை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து அதன்படி செய்து சுவைத்துப் பாருங்கள். குறிப்பாக இந்த ரெசிபி செய்வதற்கு பொறுமை மிகவும் அவசியம். பொறுமை இருந்தால், ரெசிபியின் உண்மையான சுவையை சுவைக்கலாம்.

Mangalorean Chicken Curry
தேவையான பொருட்கள்:

சிக்கன் – 1/2 கிலோ (நன்கு நீரில் கழுவிக் கொள்ளவும்)
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
தேங்காய் – 3/4 கப் (துருவியது)
தண்ணீர் – 3-4 கப்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிது

மசாலாவிற்கு…

எண்ணெய் – 2 டீஸ்பூன்
தேங்காய் – 1/2 கப் (துருவியது)
வரமிளகாய் – 6-10
மல்லி – 2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
கடுகு – 1/4 டீஸ்பூன்
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
பட்டை – 2 இன்ச்
மிளகு – 1/4 டீஸ்பூன்
கிராம்பு – 3
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
புளி – 1 நெல்லிக்காய் அளவு
இஞ்சி – 1 இன்ச்
பூண்டு – 5 பற்கள்
வெங்காயம் – 1/2 கப் (பொடியாக நறுக்கியது)

செய்முறை:

தேங்காய் பால் எடுக்கும் முறை:

முதலில் 3/4 கப் துருவிய தேங்காயை, 3/4 கப் வெதுவெதுப்பான நீரில் சேர்த்து 30 நிமிடம் ஊற வைத்து, பின் அதனை அரைத்து பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி மீண்டும் அரைத்து பால் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் இரண்டையும் தனித்தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

மசாலாவிற்கு…

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தேங்காயை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அதே வாணலியில் மீண்டும் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மல்லி, வரமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து, அத்துடன் சீரகம், கடுகு, வெந்தயம், பட்டை, கடுகு, கிராம்பு ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து வறுத்து இறக்கி, மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி குளிர வைக்க வேண்டும்.

பின்பு புளியை நீரில் சிறிது நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு மிக்ஸியில் வறுத்த பொருட்களை சேர்த்து, அத்துடன் வெங்காயம், பூண்டு, இஞ்சி, புளி ஆகியவற்றை சேர்த்து, பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும். வேண்டுமானால் அத்துடன் எடுத்து வைத்துள்ள 2 கப் தேங்காய் பாலில் இருந்து 1/2 கப் தேங்காய் பால் சேர்த்துக் கொள்ளலாம்.

கிரேவிக்கு…

ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக 5-7 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும்.

பின் அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி 3 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

பிறகு அதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து 2 நிமிடம் பிரட்டி, பின் அதில் 1 1/2 கப் தேங்காய் பால் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, குறைவான தீயில் சிக்கனை வேக வைக்க வேண்டும்.

சிக்கனானது நன்கு வெந்துவிட்டால், அதில் மீதமுள்ள 3/4 கப் தேங்காய் பால் சேர்த்து, நன்கு பச்சை வாசனைப் போக கொதிக்கவிட்டு இறக்கி, கறிவேப்பிலையை எண்ணெயில் பொரித்து தூவினால், மங்களூரியன் சிக்கன் குழம்பு ரெடி!!!

Related posts

புத்தாண்டு ஸ்பெஷல்: செட்டிநாடு பெப்பர் மட்டன் ரோஸ்ட்

nathan

சுவையான கிராமத்து மீன் குழம்பு

nathan

சுவையான பாரசீக ஸ்டைல் சிக்கன் குழம்பு

nathan

சமையல் குறிப்பு: பொரித்த மீன்! ~ பெட்டகம்

nathan

நெத்திலி மீன் கிரேவி

nathan

சுவையான காந்தாரி சிக்கன் குழம்பு

nathan

தந்தூரி சிக்கன் பிரியாணி : செய்முறைகளுடன்…!

nathan

வான்கோழி வறுவல் -வீடுகளில் செய்து சுவைக்கலாம்.

nathan

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் வான்கோழி பிரியாணி

nathan