24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
then
இனிப்பு வகைகள்

தேன்குழல் அல்லது ஜிலேபி (50 துண்டுகள்)

தேவையான பொருட்கள்:
1 சுண்டு உழுந்து (கோது நீக்கியது)
3 மேசைக்கரண்டி வெள்ளையரிசி
750 கிராம் சீனி
செம்மஞ்சல் கலரிங் சிறிதளவு
எசென்ஸ் சிறிதளவு
1 லீற்றர் எண்ணை
சிறிதளவு தேசிப்புளி

செய்முறை
முதலில் 750 கிராம் சீனியை எடுத்து அதனுள் 3 dl தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து காச்ச வேண்டும். சீனி கரைந்ததும் பாகினை 1 கிளாஸ் குளிர்தண்ணீரில் ஒரு துளியினை விட்டுப்பார்க்கும் போது பாகு அடியில் உறையும் தன்மை வரும். அப்படி பாகு உறையும் தன்மை வந்ததும் அதனுள் சிறிது கலரிங், எசென்ஸ், தேசிப்புளி என்பவற்றை சேர்த்து பாகினை உடனே இறக்கி வைக்க வேண்டும்.

வேறேர் பாத்திரத்தில் எண்ணையை கொதிக்க விட வேண்டும்.
எண்ணையை கொதிக்க விடும்போதே உழுந்தினை அரைத்துக்கொள்ளலாம். உழுந்தை 3-4 மணித்தியாலங்கள் ஊறவைத்து கெட்டியாக (இட்டலி பதத்திற்கு ) சிறிதளவு உப்பு, சிறிதளவு கலரிங் சேர்த்து மைபோல அரைத்து எடுக்கவும்.

பின்னர் அரைத்த உழுந்தினை இலகுவான முறையில் ஒரு பொலித்தீன் பையினுள் ஊற்றி வாய்ப்பகுதியை மூடி அடைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு மூலையில் சிறு துவாரம் இட்டு அதனூடாக முறுக்கு பிளிவது போல் எண்ணையினுள் 2-3 வட்டமாக பிளிந்து விடவேண்டும்.

பின்னர் இரண்டு பக்கமும் திருப்பி திருப்பி வேக விட வேண்டும். நன்கு வெந்ததும் எடுத்து பாகில் போட்டு கொள்ள வேண்டும். பின்னர் வேறோர் தட்டில் அடுக்கி வைக்கவும். அவ்வாறே எல்லாவற்றையும் சுட்டு எடுக்கவும். ஆறியதும் பரிமாறலாம்.

குறிப்பு:
உழுந்தினை அரைத்து அதிக நேரம் வைத்தால் உழுந்து புளிப்பு தன்மையை அடைந்து விடும். எசென்ஸ்க்கு பதிலாக ஏலக்காய் பவுடரையும் பாவிக்கலாம்.

பாகு மிகுதியாக இருந்தால் அதனை தோய்த்தெடுத்த தேன்குழலின்மேல் ஊற்றிவிடலாம். மறுநாள் சாப்பிடும் போது மிகவும் சுவையாக இருக்கும்.

மிகவும் எளிதானதும் இலகுவானதும் அனைவரும் விரும்பி உண்ணும் சிற்றுண்டி.
தீபாவளி ஸ்பெஷலாக செய்து பரிமாறி உண்டு மகிழலாம்.
then

Related posts

குழந்தைகளுக்கு விருப்பமான பொரி உருண்டை

nathan

கேரட் பாயாசம்

nathan

வேர்க்கடலை பர்ஃபி செய்வது எப்படி..?

nathan

தீபாவளி ஸ்பெஷல்: மைசூர் பாகு

nathan

அதிரசம் தீபாவளி ரெசிபி

nathan

சுவையான வாழைப்பழ அல்வா

nathan

சுவையான ரவா பணியாரம்

nathan

ரவா லட்டு

nathan

தீபாவளி ஸ்பெஷல் அதிரசம் எளிதாக எப்படி செய்வது

nathan