25.3 C
Chennai
Thursday, Jan 29, 2026
Wedding
Other News

தெரிஞ்சிக்கங்க…உங்க காதல் கல்யாணத்தில் முடியுமா?

இன்று எல்லாம் காதல் என்றால் “எத்தனை நாளா காதலிக்கிற..” என்று கேட்கும் அளவிற்கு காதலின் ஆயுள் குறைந்துவிட்டது. இதற்கு காரணம் காதல் என்பது ஃபேஷனாக மாறியது தான். தன் நண்பன் காதலிக்கிறான், தோழி காதலிக்கிறாள் என வராத காதலை, காதல் என்ற பெயர் கூறி வரவழைத்து, மனம் நொந்து பிரிந்துவிடுகிறார்கள்.

இதில் என்ன தவறு நிகழ்கிறது என்றால், இருவரில் ஒருவர் தான் தவறு செய்கிறார்கள், மற்றொருவர் உண்மையாக காதலித்து ஏமார்ந்து போகிறார். எனவே, நீங்கள் காதலிக்கும் நபருக்கு உண்மையிலேயே உங்கள் மீது காதல் உள்ளதா? இல்லை அது வெறும் மாயையா என அவரது சில குணாதிசயங்கள் மற்றும் அவரிடம் வெளிப்படும் அறிகுறிகளை வைத்து அறிந்துக் கொள்ளலாம்…

மகிழ்ச்சி
உங்கள் மகிழ்ச்சியை தன் மகிழ்ச்சியாக எண்ணும் குணம். நீங்கள் வருந்தும் போது அவர்களது வாழ்க்கையில் இருக்கும் தனிப்பட்ட மகிழ்ச்சியை உதறிவிட்டு தன் தோள் கொடுத்து உங்களை அரவணைப்பது.

பயணம்
எங்கு சென்றாலும் உங்களது துணையை நாடுவது. நீங்கள் இன்றி எங்கும் வெளியிடங்களுக்கு செல்ல விருப்பம் இன்றி இருப்பது. உங்களுடன் செல்லும் போது மட்டிலுமே அதீத மகிழ்ச்சி அடைவது.

பணம்
பணம் என்பதை பொருட்படுத்தாமல், உறவை மட்டுமே பொருட்படுத்துவது. தன் பணம், உன் பணம் என்று எந்த வேறுபாடும் இன்றி, நாம் நமது சேமிப்பு என்று சேர்த்து பார்க்கும் பண்பு.

பொறுப்பு
தன் வாழ்க்கை மட்டுமின்றி உங்கள் வாழ்க்கை மீதும், தொழில், வேலைகள் மீதும் கூட பொறுப்பாக செயலாற்ற உதவுவது.

அக்கறை
உங்கள் உடல்நலன், மன நலன் மீது அதிக அக்கறை எடுத்துக் கொள்வது. நீங்கள் சிறிதளவு தவறு செய்தாலும் அதை முழு உரிமையுடன் தட்டிக் கேட்பது.

வீட்டார் மீதான மதிப்பு
உங்கள் வீட்டு ஆட்கள் மீது குறை கூறுவதை குறைத்துக் கொண்டு அவர்கள் மீதும் நல்ல மதிப்பு கொண்டு. அவர்களையும் தன் குடும்பத்தார் போல எண்ணுவது.

எதிர்கால திட்டம்
திருமணத்திற்கு பிறகு நாம் என்ன செய்ய போகிறோம், சேமிப்பு, வாழ்க்கையில் அடுத்தக் கட்டத்திற்கு செல்ல என்ன செய்ய வேண்டும். வீடு, நிலம், வாகனம் வாங்குதல் போன்றவைக்கு சேமிப்பு குறித்து திட்டமிடுதல் என எதிர்கால திட்டங்கள் கொண்டிருப்பது.

Related posts

இந்த ராசிக்காரங்க எப்பவும் பழைய காதல மறக்க முடியாம கஷ்டப்படுவாங்களாம்..

nathan

பெற்றோருக்காக எதையும் செய்யும் ராசியினர் இவர்கள் தான்…

nathan

நான் அவமானம்… பிக்பாஸ் ஐஷூ உருக்கம்

nathan

சென்னையில் இருந்து அயோத்திக்கு ராமர் கோயிலுக்கு நேரடி விமான சேவை

nathan

16 வயசு பையனுடன் உறவு கொண்ட நடிகை சிம்ரன்..ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..!

nathan

தனுஷும் என் கணவரும் ஒரே படுக்கையில்!

nathan

நடிகரை திருமணம் செய்ய ஆசைப்படும் டிடி..!

nathan

ஐக்கிய அரபு அமீரகத்தில் சம்பளம்., வேலை வாய்ப்புகள்

nathan

கார் வாங்கிய பிக் பாஸ் தனலட்சுமி

nathan