காலையில் இட்லி, தோசைக்கு ஒரு அருமையான சட்னி செய்ய நினைத்தால், கேரட் தக்காளி சட்னியை முயற்சித்துப் பாருங்கள். இந்த சட்னியானது செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். மேலும் குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடும் படி இருக்கும்.
சரி, இப்போது அந்த கேரட் தக்காளி சட்னியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
Special Carrot Tomato Chutney
தேவையான பொருட்கள்:
தக்காளி – 4 (நறுக்கியது)
பச்சை மிளகாய் -5-6
கேரட் – 1/2 (பொடியாக நறுக்கியது)
பூண்டு – 3
சீரகம் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
ஊற வைத்த புளி – சிறு துண்டு
கொத்தமல்லி – சிறிது
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, தக்காளி நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
பின்னர் சீரகம், பூண்டு, உப்பு, புளி மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்கு 2 நிமிடம் வதக்கி இறக்கிக் கொள்ள வேண்டும்.
பின்பு அதனை மிக்ஸியில் போட்டு கொரகொரவென்று அரைத்து ஒரு பௌலில் போட்டுக் கொள்ள வேண்டும்.
இறுதியில் அதில் கேரட்டை சேர்த்து பிரட்டினால், கேரட் தக்காளி சட்னி ரெடி!!!