28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
21 617fbf9b4d
சரும பராமரிப்பு

உடலில் உள்ள கருமையை உடனே போக்க வேண்டுமா?இதோ அற்புதமான எளிய தீர்வு

பலருக்கும் உடலில் கழுத்து, முழங்கை, முழங்கால் என பகுதிகளில் கருப்பாக இருக்கும். இதற்கு உடலில் ஏற்படும் வறட்சியினால் இறந்த செல்கள் தேங்கி இருப்பது தான். இதை சரிசெய்ய நம் வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களை கொண்டே வெள்ளையாக்க முடியுமாம்.

செய்முறை

முதலில் 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை முழங்கையில் தடவி சிறிது நேரம் மென்மையாக ஸ்கரப் செய்து, பின் கழுவ வேண்டும். இப்படி 2 நாளைக்கு ஒருமுறை செய்யுங்கள். இதனால் முழங்கால் விரவில் வெள்ளையாகும்.

மஞ்சள் தூளை பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். அதன் பின் அதை முழங்கையில் தடவி நன்கு காய்ந்த பின், சோப்பு பயன்படுத்தி கழுவுங்கள். நல்ல பலன் கிடைக்க, வாரத்திற்கு பலமுறை செய்யுங்கள்.

அடுத்ததாக, 1 டேபிள் ஸ்பூன் தேனில், பால் மற்றும் மஞ்சள் தூளை சரிசம அளவில் கலந்து, முழங்கையில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். பின்னர், தேனுடன் கற்றாழை ஜெல்லை சேர்த்து கலந்தும் பயன்படுத்தலாம்.

தினமும் பாலை பஞ்சுருண்டை பயன்படுத்தி முழங்கையில் தடவி ஊற வைத்து கழுவுங்கள். இப்படி ஒரு நாளைக்கு பலமுறை செய்து வந்தால், விரைவில் முழங்கையில் உள்ள கருமை நீங்கி, முழங்கை வெள்ளையாகும்.

தேங்காய் எண்ணெய்யில் எலுமிச்சை சாறு சிறிது முழங்கையில் தடவி 5 நிமிடம் கழித்து கழுவினால் பளபளவென வெள்ளையாக மாறிவிடும். தினமும் என 1-2 வாரம் தொடர்ந்து செய்து வாருங்கள்.

முழங்கையில் இருக்கும் கருமை போய்விடும். எலுமிச்சை சாற்றில் தேன் கலந்து முழங்கையில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் நீரில் கழுவுங்கள். கடைசியாக வினிகருடன் தயிர் சேர்த்து கலந்து, முழங்கையில் தடவி மசாஜ் செய்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ, முழங்கை கருமை மறைந்துபோகுமாம்.

Related posts

பெண்களே உங்க அக்குள் கருப்பா இருக்கா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

சருமத்தில் ஏற்படும் சுருக்கத்தை போக்க வேண்டுமா?

nathan

இந்த கலவையை உங்கள் மூக்கில் தடவி 30 நிமிடங்கள் ஊற வைத்தால் . . .

nathan

ஐஸ்கட்டிகளை கொண்டு சருமத்திற்கு மசாஜ் செய்யலாம்.

nathan

கை முட்டிகளில் உள்ள கருமை நிறம் மறைய டிப்ஸ்

nathan

ஒரே வாரத்தில் பொலிவிழந்த சருமத்தை வெண்மையாக்க வேண்டுமா?

nathan

நமக்கு எளிதில் கிடைக்கக்கூடிய இலைகளைக் கொண்டே எளிதில் முகப்பருக்களை மாயமாய் மறைய வைக்கலாம்….

nathan

முகம் பிரகாசமாக ஜொலிக்க முல்தானி மெட்டியை பயன்படுத்தி செய்யக்கூடிய 4 வகையான ஃபேஸ் பேக்கினை தயார் செய்வது எப்படி என்று இந்த பதிவில் நாம் படித்தறிவோம் வாங்க…

nathan

சருமம் பளபளக்க, காண்போரை வசீகரிக்க‍ சில எளிய மருத்துவ முறை!…

sangika