தேவையான பொருட்கள் :
மசூர் தால் – 1 கப்,
தக்காளி – 4,
இஞ்சி – 1 துண்டு,
பூண்டு – 5 பல்,
பச்சை மிளகாய் – 2,
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்,
எலுமிச்சைச் சாறு – 1 டேபிள் ஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
கொத்தமல்லித்தழை – சிறிதளவு,
கடுகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன்,
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்.
செய்முறை:
பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து, மலர வேகவையுங்கள்.
தக்காளியை சற்றுப் பெரிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள்.
இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழையைப் பொடியாக நறுக்குங்கள்.
எண்ணெயைக் காயவைத்து, கடுகு, சீரகம் தாளித்து, அதில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்குங்கள்.
இதனுடன், தக்காளி, மிளகாய்த் தூள் சேர்த்து வதக்கி, இதை அப்படியே பருப்பில் சேருங்கள்.
இதில் தேவையான உப்பு போட்டு, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.
கடைசியாக, எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லித்தழை சேர்த்துப் பரிமாறுங்கள்.
சூப்பரான தக்காளி தால் ரெடி.
குறிப்பு: தாளிக்கும்போது, எண்ணெயைக் குறைத்து ஒரு ஸ்பூன் நெய் சேர்த்தால், ருசியும் மணமும் அதிகரிக்கும்.
Courtesy: MalaiMalar