26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
skimbumps
சரும பராமரிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பல வகையான சரும புடைப்புக்களும்.. அதை சரிசெய்யும் வழிகளும்…

சருமத்தில் புடைப்புகள் ஏற்படுவது ஒரு சாதாரண விஷயம் தான். ஆனால் சில நேரங்களில் இதை கண்டு கொள்ளாமல் விடும் போது அது நாள்பட்ட அழற்சியாக மாறக் கூடும். முகப்பரு, கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகள் போன்றவை பொதுவாக ஏற்படுகின்ற சரும புடைப்புகள் ஆகும்.

Different Types of Skin Bumps And Tips To Treat Them Naturally
இதே மாதிரி தோலில் இன்னும் நிறைய வகை புடைப்புகள் ஏற்படுகின்றன. அவற்றை கவனிக்காமல் விடும் போது தான் தீவிர பிரச்சினை எழுகிறது. எனவே இந்த புடைப்புகளுக்கு உடனே சிகிச்சை அளிப்பது நல்லது. இந்த புடைப்புகள் சிறிய புடைப்புகளாக இருந்தாலும் அவை வளர்ந்து உங்களுக்கு பெரிய தொல்லைகளை ஏற்படுத்தக் கூடும்.

கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகள்

பொதுவாக கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகள் சருமத்தில் பரவலாக காணப்படும் பிரச்சினை ஆகும். இந்த இரண்டு புள்ளிகளுக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடு என்பது கரும்புள்ளிகள் மெலனின் திறந்த துளைகள், அவை கருப்பு தோற்றத்தை தரக் கூடியது. அதே நேரத்தில் வெள்ளை புள்ளிகள் என்பது மூடிய சரும துளைகள். இவை சருமத்திற்கு தீங்கு விளைவிக்கா விட்டாலும் பார்ப்பதற்கு அசிங்கமாக தென்படும்.

இந்த சரும பிரச்சனைகளை களைய சாலிசிலிக் அமிலம் சார்ந்த பேஷ் வாஷ்களைக் கொண்டு சரும துளைகளை சுத்தப்படுத்தி வாருங்கள். இது கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகள் ஏற்படுவதை தடுக்கும்.

பால் பருக்கள்

இவை பார்ப்பதற்கு வெள்ளை புள்ளிகள் போன்று இருக்கும். ஆனால் இது தோற்றத்தில் அதிகமாகவும் சமதளமாகவும் காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் கண்கள், கன்னங்கள் மற்றும் மூக்கைச் சுற்றி காணப்படுகின்றன. இறந்த சரும செல்கள் சருமம் தோல் அடுக்கில் சிக்கும்போது இந்த மாதிரியான பால் பருக்கள் உண்டாகிறது. இவற்றை சிறிது நாட்கள் விட்டால் தானாகவே சரி ஆகி விடும். ஆனால் அவற்றை விரைவாக அகற்ற ஒரு சரும நிபுணரை சந்திப்பது அவசியம்.

கெரடோஸிஸ் பிலாரிஸ் (தோல் சொர சொரப்பு)

உங்க கைகளிலும் கால்களிலும் புல்லரிப்பதை போன்ற புடைப்புகள் காணப்பட்டால் அவை கெரடோஸிஸ் பிலாரிஸ் ஆகும். இவை பார்ப்பதற்கு தோலை சொர சொரப்பாக மாற்றுகிறது. கெராட்டின் அதிக உற்பத்தி காரணமாக இவை ஏற்படுகிறது. இவைகள் மயிர்க்கால்கள் வளர தடுக்கின்றன. இவைகள் பொதுவாக வேக்சிங் செய்த பிறகு தோன்றும். எனவே சருமத்தில் உள்ள முடிகளை ஷேவிங் செய்வதற்கு பதிலாக வேக்சிங் செய்யலாம். இது அந்த பகுதியில் உள்ள முடிகளையும் இறந்த செல்களையும் நீக்குவதற்கு உதவி செய்யும்.

மருக்கள்

பழுப்பு நிறத்தில் தோல் வளர்ச்சி அல்லது மருக்கள் போன்றவை மரபணு அல்லது வைரஸ் தொற்றுக்கு பிறகு ஏற்படுகின்றன. இந்த பாலுண்ணிகளை கழுத்து மற்றும் தோள்களில் அதிகளவு பார்க்க முடியும். இந்த பாலுண்ணிகள் அல்லது மருக்களை விரட்ட பொதுவான சிகிச்சை முறைகள் கிரையோதெரபி அல்லது காடரைஷேசன் போன்ற சிகிச்சை முறைகள் தேவைப்படுகிறது. இருப்பினும் இது மரபணு ரீதியாகவும் வர வாய்ப்புள்ளது.

ரோசாசியா

இது உங்க சருமத்தின் ஒரு பகுதி மட்டும் அதிகமாக சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும். தோலில் ஏற்படும் இந்த சிறிய புடைப்புகள் உங்களுக்கு இளஞ்சிவப்பு நிறத்தை தரும். இந்த நிலைக்கு இன்னும் சிகிச்சை இல்லை. ஆனால் இந்த புடைப்புகளை நீங்கள் கட்டுப்படுத்த முடியும். சருமத்தில் நேரடியாக கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து லேசான தோல் தயாரிப்புகளை பயன்படுத்துவது நல்லது. இது செபோரிக் எக்ஸிமா போன்ற அரிக்கும் தோல் அழற்சியில் இருந்து வேறுபட்டவை.

உள்வளர்ந்த முடிகள்

சருமத்தில் உள்ள முடியை ஷேவிங் செய்யும் போது, வேக்ஸ் செய்யும் போது முடியின் ஒரு பகுதி சிக்கி வெளியே வராது. இது சில நேரங்களில் சீழ் நிறைந்த சிறிய புடைப்புகளை உண்டாக்கும். இந்த பிரச்சினை உங்களுக்கு அடிக்கடி ஏற்பட்டால் தோலில் உள்ள இறந்த செல்களை நீக்க ஸ்க்ரப் செய்வது அவசியம் ஆகும். சரும முடிகள் வெளியே வர இறந்த செல்களை நீக்குவது அவசியம்.

அழற்சி பருக்கள்

அழற்சி முகப்பருக்கள் சிவந்து போய் சீழ் பிடித்து புடைத்து காணப்படும். இவை பாக்டீரியா தொற்று காரணமாக செயல்படுகிறது. சிவப்பு பருக்கள், கொப்புளங்கள், நீர்க்கட்டிகள் மற்றும் முடிச்சுகள் போன்ற பல்வேறு வகையான வீக்கங்கள் உள்ளன. இவற்றை எதிர்த்துப் போராட சாலிசிலிக் அமிலம் மற்றும் பென்சாயில் பெராக்சைடுடன் எண்ணெய் இல்லாத தயாரிப்புகளைப் பயன்படுத்துவது சிறந்த தீர்வாகும். அவைகள் உங்களுக்கு கடினமாக இருந்தால் சரியான பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக சரும மருத்துவரை அணுகுவது நல்லது.

Related posts

ஹெர்பல் மாய்சரைஸர்

nathan

வாழைப் பழத் தோல் இருந்தா போதும் அன்பர்களே!

nathan

பனிக்காலத்தில் சரும வறட்சியை போக்கும் வீட்டு வைத்தியம்

nathan

சருமம் ஆரோக்கியமாக இருக்க அன்றாடம் பின்பற்ற வேண்டியவைகள்!!!

nathan

சூப்பர் டிப்ஸ்… தீபாவளிக்கு நல்லெண்ணெய் குளியல் !

nathan

எண்ணெய் சருமத்திற்கான இதோ எளிய தீர்வுகள்!

nathan

பெண்களே உங்க கை வயசானவங்க கை மாதிரி இருக்கா? இத ட்ரை பண்ணுங்க…

nathan

அக்குளில் இருக்கும் கருமையைப் போக்க உதவும் சமையலறைப் பொருட்கள்!!!

nathan

ஒருநாள் விட்டு ஒருநாள் இதைச் செய்தால் முகத்தில் தோன்றும் சுருக்கங்கள் மறையும்.

nathan