26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
How to wear pearls and stay modern 1400x.progressive .png
சரும பராமரிப்பு

தெரிந்துகொள்வோமா? பெண்கள் விரும்பும் முத்து நகைகள்

தங்கம், வெள்ளி, வைரம், பிளாட்டினம் என எத்தனையோ வகையான நகைகள் இருந்தாலும் முத்துக்களால் செய்யப்பட்ட நகைகளுக்கு எப்பொழுதுமே தனி மவுசு இருக்கத்தான் செய்கின்றது. பொதுவாக முத்துக்கள் வெள்ளை, சந்தன நிறம் மற்றும் சாம்பல் வண்ணத்தில் இருக்கும். ஆனால் முத்துக்களில் ஊதா, கருப்பு, இளஞ்சிவப்பு, பச்சை, ஷாம்பெயின், சாக்லேட், நீலம் மற்றும் லாவென்டர் நிறங்களும் உள்ளன.

நீர்வாழ் உயிரினமான மெல்லுடலி (மொலுஸ்க்)யிலிருந்தே இயற்கை முத்தானது உருவாகின்றது. ஊதா நிற முத்துக்களே அரிய வகையான முத்தாகக் கருதப்படுகின்றது.

முத்துக்களால் செய்த நகைகள் என்று எடுத்துக் கொண்டால் முத்து மூக்குத்தி, முத்து வளையல், முத்து நெக்லஸ், முத்துமாலை, முத்து ஆரம், முத்து கம்மல், முத்து ஜிமிக்கி என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

அளவில் பெரியதாக இருக்கும் முத்துக்களை ஒவ்வொன்றாகக் கோர்த்து அதற்கு தங்கத்தினால் செய்த மயில், சந்திரன், லட்சுமி போன்ற டாலர்களில் கற்கள் பதித்து அவற்றின் கீழ்ப்புறத்தில் சிறிய முத்துச்சலங்கைகள் தொங்குவதுபோல் வடிவமைக்கப்பட்டிருப்பது எந்தவித விழாக்களுக்கும் அணிந்து செல்ல ஏற்றவையாக இருக்கும்.

நடுத்தர அளவிலிருக்கும் முத்துக்கள் அல்லது சிறிய முத்துக்களை இரண்டு மூன்று சரங்களாகக் கோர்த்து அவற்றிற்கு தங்கத்தினால் செய்த பெரிய டாலர்கள் இருப்பதுபோல் இருக்கும் முத்து மாலைகளை அணியும் பொழுது கம்பீரமான தோற்றத்தைத் தருவதாகவே உள்ளன. இந்த முத்துச்சரங்களை இணைத்து இடையில் வரும் தங்க முகப்புகள் சிறிய அளவாக இருந்தால் அதே டிசைனில் டாலரானது பெரிய அளவில் இருப்பது போன்று வருபவை பிளெயின் பட்டுச் சேலைகளுடன் அணியும் பொழுது பாராட்ட வார்த்தைகளே இல்லை என்று சொல்லலாம்.

முத்துக்கள் தங்கக் கம்பிகளில் கோர்க்கப்பட்டு இரண்டு சரங்களாக வர இவற்றின் இடையில் தங்கக் குண்டுகளைக் கோர்த்த மிளகுச் சரமானது வர அவற்றிற்கு பக்கவாட்டில் யானைகள் தும்பிக்கையை தூக்கி இருக்க தாமரையில் அமர்ந்திருக்கும் லட்சுமி டாலரின் கீழே முத்துக்கள் இரண்டு அடுக்குகளாகத் தொங்குவதுபோல் இருக்கும் முத்து ஆரங்களை முத்து ஜிமிக்கிகளுடன் அணிந்தால் அவற்றின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை என்று சொல்லலாம்.

மிகச்சிறிய முத்துக்களைக் கொத்துக் கொத்தாகக் கோர்த்து செய்யப்படும் மாலைகளுக்கு இரட்டை டாலர்களுடன், அதற்கு ஏற்ற ஜிமிக்கிகளும் அணியும் பொழுது ஒரு மிரட்டலான, அழகான தோற்றத்தைத் தருகின்றன. இதுபோன்ற சிறிய முத்துக்களை கோர்த்து வருபவற்றை லோரியல்கள் என்றும் அழைக்கிறார்கள்.

முத்துக்களோடு தங்கம், பவளம், மரகதம், வெள்ளை மற்றும் சிகப்புக் கற்களும் சேர்த்து மிகவும் அருமையான மாடல்களில் மாலைகள், நெக்லஸ்கள், பதக்கங்கள், காதணிகள், வளையல்கள் போன்றவை செய்யப்படுவது பிரமிப்பான தோற்றத்தைத் தருகின்றன.

முத்துக்களை ஆங்கில எழுத்துக்களில் பதித்து செய்யப்படும் நெக்லஸ்கள் இன்றைய இளைய தலைமுறையினரிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. முத்துக்களால் செய்யப்படும் ஒற்றை, இரட்டை மற்றும் மூன்று அடுக்கு மாடல்களும், முத்தினால் செய்யப்பட்ட சோக்கர் செட்டுகளும், முத்து பிரேஸ்லெட்டுகளும் அப்பப்பா என்று புருவத்தை உயர்த்தும் அளவிற்கு எண்ணற்ற டிசைன்களில் வந்துள்ளன.

தங்கக் குண்டும், முத்தும் குறிப்பிட்ட இடைவெளியில் கோர்க்கப்பட்டு இருக்கும் தங்கச் செயினில் பச்சைக் கல்லை நடுவே பதித்து சுற்றியும் சிறிய வெள்ளைக் கற்கள் பதித்த முகப்பு. அந்த முகப்பில் முதல் சரமும், மூன்றாவது சரமும் தங்கக் குண்டுகளும் முத்துக் குண்டுகளும் கோர்த்து மேலே கூறிய செயினைப் போலவே இருக்க நடுவில் முகப்பிலிருந்து வரும் சரத்தில் முகப்பைப் போன்றே சிறிய அளவிலான கற்கள் பதித்த டிசைன்கள் கோர்க்கப்பட்டு அதற்கு கொடுக்கப்பட்டிருக்கும் பதக்கம் முகப்பு டிசைனிலேயே அதே அளவில் இருப்பது புதுமையாகவும், அட்டகாசமாகவும் இருக்கின்றது.

முத்துக்கள் பதித்த ஸ்டைலிஷான பென்டெண்டுகள் சிறிய அளவிலிருந்து பெரிய அளவு வரை தனியாக விற்கப்படுகின்றன. அவற்றை நம் விருப்பத்திற்கேற்ப தங்கச் செயினிலோ அல்லது வெள்ளிச் செயினிலோ அணிந்து கொள்வதும் இன்றைய இளம் பெண்களிடையே பிரபலமாகி வருகின்றது.

ஒரே ஒரு பெரிய முத்தை மெல்லிய செயினில், கழுத்தை ஒட்டி அணிந்து கொள்வதும், பேஷனாகவே உள்ளது. முத்துக்களை வைத்து செய்யப்படும் ஃபேஷன் நகைகளுக்கு இளம் பெண்கள் மட்டுமல்லாமல் நடுத்தர வயதுப் பெண்களும் அதிக ஆதரவைத் தருவதோடு அணிந்து கொள்ளவும் ஆர்வம் காட்டுகிறார்கள்.

வெள்ளை முத்துக்களை மட்டுமல்லாமல் வண்ண முத்துக்களையும் நகைகளாகச் செய்து அணிந்து கொள்ளும் ஆடைகளுக்கு ஏற்றவாறு அணிந்து கொள்வதும் பிரபலமாகி வருகின்றது என்றே சொல்லலாம்.

Courtesy: MalaiMalar

Related posts

கற்றாழையுடன் எதை சேர்த்தால் அட்டகாசமான சருமப் பொலிவை தரும்?

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க… கோடை வெயிலால் சருமம் கருமையாகாமல் இருக்கணுமா?

nathan

ஆயில் சருமத்திற்கான அழகு குறிப்புகள்

nathan

எண்ணெய் பசை சருமத்தை அழகாக வைத்துக் கொள்ள என்ன செய்யலாம்…

nathan

beauty tips in tamil ,டல் சருமத்தையும் டாலடிக்கச் செய்யலாம்!

nathan

அவசியம் படிக்க..உடலில் அதிகமாக அரிப்பு ஏற்பட்டால் எந்த நோயின் அறிகுறியாக இருக்கும் தெரியுமா?

nathan

பெண்களே தேவதையாக ஜொலிக்க வேண்டுமா?

nathan

வெயிலால் கருமையா? எண்ணெய் சருமமா? இதை ட்ரை பண்ணுங்க!!

nathan

உங்களுக்கு தெரியுமா தேனைக் கொண்டு சருமத்தை எப்படியெல்லாம் பராமரிக்கலாம்?

nathan