28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
24 vegetable pasta soup
சூப் வகைகள்

வெஜிடேபிள் பாஸ்தா சூப்

மாலையில் டீ, காபி குடித்து போர் அடித்துவிட்டதா? அப்படியானால் சூப் செய்து சாப்பிடுங்கள். அதிலும் வித்தியாசமாக, குழந்தைகளுக்கு பிடித்த வகையில் சூப் செய்தால், பெரியவர்கள் மட்டுமின்றி, குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். அதுவும் அனைத்து குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் பாஸ்தாவைக் கொண்டு சூப் செய்தால், இன்னும் சூப்பராக இருக்கும் தானே!

ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை பாஸ்தாவுடன், ஒருசில காய்கறிகளை சேர்த்து எப்படி சூப் செய்வதென்று கொடுத்துள்ளது. அதைப் படித்து அதன் படி செய்து சாப்பிட்டு என்ஜாய் செய்யுங்கள்.

24 vegetable pasta soup

பாஸ்தா – 1/2 கப்
வெஜிடேபிள் – 1/4 கப் (பட்டாணி மற்றும் கேரட்)
கொண்டைக்கடலை – 2 1/2 டேபிள் ஸ்பூன் (நீரில் 8 மணிநேரம் ஊற வைத்தது)
பாஸ்தா சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி சாஸ் – 1 டீஸ்பூன்
உலர்ந்த கற்பூரவள்ளி இலை/ஓரிகானோ – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – 1/4 கப்
சோள மாவு – 1 டீஸ்பூன்

தாளிப்பதற்கு…

வெங்காயம் – 1/2 (பொடியாக நறுக்கியது)
பூண்டு – 3 பற்கள் (பொடியாக நறுங்ககியது)
ஆலிவ் ஆயில் – 2 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் கேரட் மற்றும் பட்டாணியை குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி 1 விசில் விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் கொண்டைக்கடலையை குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி 6 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும், பாஸ்தா மற்றும் உப்பு சேர்த்து, பாஸ்தா வெந்ததும், இறக்கி நீரை வடித்துவிட்டு, குளிர்ந்த நீரில் ஒருமுறை அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் கொண்டைக்கடலை, கேரட் மற்றும் பட்டாணி சேர்த்து, தண்ணீர் வற்றும் வரை வதக்கி, பிறகு அதில் பாஸ்தா சாஸ், தக்காளி சாஸ் மற்றும் ஓரிகானோ சேர்த்து, கலவை நன்கு ஒன்று சேர வதக்க வேண்டும்.

பின் அதில் சூப்பிற்கு வேண்டிய அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு, பிறகு பாஸ்தாவை சேர்த்து 2 நிமிடம் வேக வைத்ததும், சோள மாவு சேர்த்து கிளறி விட வேண்டும்.

இப்போது வாணலியில் உள்ள கலவையானது சூப் பதத்திற்கு வந்ததும் இறக்கி, மேலே மிளகுத் தூள் தூவி பரிமாறினால், வெஜிடேபிள் பாஸ்தா சூப் ரெடி!!!

Related posts

கேரட், சோயா சூப்

nathan

முருங்கை கீரை சூப் செய்ய…

nathan

சத்து நிறைந்த ராகி நூடுல்ஸ் வெஜிடபிள் சூப்

nathan

சத்து நிறைந்த வேர்க்கடலைக் கூழ்

nathan

மனத்தக்காளி கீரை தேங்காய்பால் சூப்

nathan

தேங்காய் – வேர்க்கடலை சூப்

nathan

பீட்ரூட் சூப்

nathan

ப்ரோக்கலி சூப்

nathan

முருங்கை கீரை சூப்/murungai keerai soup

nathan