முகத்தை அழகுப்படுத்திக் கொள்ள நினைக்கும் பெண்கள் பாதங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. வசீகர முகம் கொண்ட பெண்கள் கூட பாதத்தை முறையாக பராமரிப்பதில்லை. பாதங்கள்தானே யார் பார்க்கிறார்கள் என்று முகம், கை மட்டும் அழகுப்படுத்திக் கொள்பவர்கள் நிறைய உண்டு.
வாராத்திற்கு ஒரு முறை உங்கள் நகங்களை வெட்டிப் பாதங்களை மிகத் தூய்மையாகவும், நகங்களின் கீழ்ப்பகுதியை அழுக்கு அண்டாமலும் பார்த்து கொள்வது அவசியம். அப்படி செய்யவில்லை என்றால் புண்கள் மற்றும் நகங்கள் சொத்தையாக வழிவகுக்கும்.
நிறையப் பேருக்கு முகம் அழகாக இருக்கும். அவர்களுடைய கால் பாதங்களை பார்க்கும்போது, இந்த முகத்திற்கு சொந்தமான கால் பாதமா இது! என்று கேள்வி கேட்கும் அளவிற்கு கருப்பு நிறமாக தோற்றமளிக்கும்.
குளிர்காலத்தில், தோல் வறண்டு, உயிரற்றதாக மாறி, வெடிப்புகள் விட தொடங்குகிறது. குறிப்பாக குதிகால் பகுதியில் ஏற்படும் வெடிப்பு இந்த காலக்கட்டத்தில் ஏற்படும் மிகப்பெரிய பிரச்சனையாகும்.
மனதுக்கும் பாதத்துக்கும் தொடர்பு உண்டு என்பதையும் இந்த ஆய்வறிக்கை கூறுகிறது. இப்படி நம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தோடு தொடர்புடைய பாதத்தை நாமோ அவ்வளவாக கண்டுகொள்வதில்லை.
நம் பாதங்களை அழகாக்காக என்னென்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம் –
நகங்கள்
வெட்டும் முன் மிக நீண்டதாக வளரும் நகங்கள் உள்நோக்கி வளரலாம் மற்றும் உங்கள் பாதங்களை பதம் பார்த்துக் காயங்களை ஏற்படுத்தும். நகங்களை வெட்டும் முன் கால்களை சிறிது தண்ணிரில் கழுவி விட்டு சிறுது நேரம் கழித்து வெட்டும் போது நகங்கள் காயங்கள் ஏதும் ஏற்படாமல் எளிதாகத் துண்டிக்கலாம்.
படுக்கும் முன்பு
படுக்கைக்கு செல்லும் முன்போ அல்லது காலை படுக்கையில் இருந்து எழுந்ததும் சிறிது நேரம் உங்கள் பாதங்களை மிதமான வெந்நீரில் கழுவி உங்களின் பாதத்திற்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துங்கள்.
எலுமிச்சை பழச்சாறு
வெடிப்பு பாதம் உள்ளவர்கள் வீட்டில் உள்ள மருதாணி இலையை விழுது போல நன்கு அரைத்து வெடிப்பு உள்ள இடங்களில் வாரந்தோறும் தடவி வந்தால் வெடிப்பு நீங்கும். பாதவிரல்கள் பழுதடைந்து விட்டால் எலுமிச்சை பழச்சாறு தடவி வரலாம்.
பீர்க்கங்காய் நார்
பாதங்கள் மிருதுவாக இருக்க வேண்டுமானால் பீர்க்கங்காய் நார் கொண்டு தினமும் குளிக்கும்போது பாதத்தில் நன்றாக 5 நிமிடம் தேய்த்து வந்தால் பாதங்கள் மிருதுவாகி விடும். விட்டமின் ஈ விட்டமின் ஈ சரும சுருக்கங்களைப் போக்கும்.
விட்டமின் ஈ
விட்டமின் ஈ நிறைந்த ஆரஞ்சு எண்ணெயை பாதங்களில் தடவி வந்தால் சுருக்கங்கள் போய், கருமை மறைந்து தங்க நிறத்தில் மினுமினுக்கும்.
பால்
தினமும் காய்ச்சாத பாலை குளிப்பதற்கு முன் பாதங்களில் தடவி, 10 நிமிடம் மசாஜ் செய்து, பின் குளித்தால், பாதங்களில் இருக்கும் கருமைநிறம் போய்விடும்.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கு சாற்றையோ அல்லது அதன் ஒரு துண்டையோ, பாதங்களில் கருமையாக இருக்கும் இடங்களில் தினமும் சிறிது நேரம் தேய்த்து, பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இதனால் பாதங்கள் நன்கு பொலிவோடு காணப்படும்.