29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
அழகு குறிப்புகள்

இந்தியாவில் 70 வயதில் குழந்தை பெற்றெடுத்த மனைவி! 75 வயது கணவர்

இந்தியாவில் 70 வயதில் பெண் ஒருவர் குழந்தை பெற்றெடுத்துள்ளதால், உலகின் வயதான குழந்தை பெற்ற அம்மாக்களின் வரிசையில், தற்போது அவரும் இணைந்துள்ளார்.

குஜராத் மாநிலத்தின், Mora கிராமத்தை சேர்ந்த தம்பதி Givunben Rabari(70)-Maldhari(75).

இந்த தம்பதிக்கு திருமணம் ஆகி 45 ஆண்டுகள் ஆன நிலையில், குழந்தை இல்லை.

இதனால் இவர்கள் மிகுந்த வேதனையில் இருந்து வந்துள்ளனர். அதன் பின் தங்களுடைய உறவினர்கள் IVF மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதை அறிந்து, அதன் மூலம் குழந்தை பெற்றெடுத்துள்ளனர்.

இது குறித்து இந்த தம்பதிக்கு உதவிய மருத்துவர் நரேஷ் கூறுகையில், அவர்கள் முதலில் தன்னிடம் வந்த போது, வயதாகிவிட்டதே, குழந்தைகள் இல்லை என்று சொல்கிறீர்களே என்ற போது, அவர்கள் குழந்தை வேண்டும் என்று வலியுறுத்தினர்.

அவர்கள் தங்கள் உறவினர்கள் பலர் IVF மூலம் குழந்தை பெற்றுக் கொண்டதை கூறினர். இது நான் பார்த்த வழக்குகளிலே மிகவும் அரிதான ஒன்றாக அமைந்தது என்று கூறினார்.

தற்போது இந்த தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. Givunben Rabari தன்னுடைய வயதை நிரூபிக்க தன்னிடம் அடையாள அட்டை எதுவும் இல்லை. ஆனால் தனக்கு 70 வயது, இது தான் உண்மை என்று உள்ளூர் ஊடக அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.

 

கடந்த 2019-ஆம் ஆண்டு இதே இந்தியாவைச் சேர்ந்த மங்கையம்மா யாராமதி என்ற பெண், தன்னுடைய 74 வயதில் IVF மூலம் இரட்டை குழந்தை பெற்றெடுத்தார்.

அது தான் உலகிலே அதிக வயதில் குழந்தை பெற்றெடுத்த பெண்மணியாக நம்பப்படுவது குறிப்பிடத்தக்கது.

 

Related posts

முக அழகை பொலிவாக வைத்து கொள்ள…..

sangika

சூப்பர் டிப்ஸ் உதட்டை சுற்றியுள்ள கருமையை போக்க வேண்டுமா?

nathan

உடல் புத்துணர்ச்சி பெற என்ன செய்யலாம்

nathan

இதோ எளிய நிவாரணம் கருப்பா இருந்தாலும் களையாக இருக்கணுமா?

nathan

கருப்பாக இருக்கிறோமே என சோர்ந்து போயிருக்கும் பெண்களுக்கு ஒரு விஷயம்..

nathan

மூக்கும் முழியுமாக ஜொலிக்க,

nathan

உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க இவற்றை செய்யுங்கள்…..

sangika

நகங்கள் விரைவாகவும் நீளமாகவும் வளர சில எளிய வழிமுறைகள் !…

sangika

இத செய்யுங்க… முகத்தில் உள்ள கருமையை நீக்கி வெள்ளையாகணுமா?

nathan