25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
mensfacepack 15
சரும பராமரிப்பு

ஆண்களே தெரிஞ்சிக்கங்க… கோடை வெயிலால் சருமம் கருமையாகாமல் இருக்கணுமா?

தற்போது என்ன தான் லாக்டவுனாக இருந்தாலும், சில அலுவலகங்களில் குறைவான பணியாட்களுடன் வேலை நடந்து கொண்டு தான் உள்ளது. ஒரு பக்கம் கொரோனா அச்சுறுத்தி வந்தாலும், மறுபக்கம் கோடை வெயில் கொளுத்த ஆரம்பித்துவிட்டது. குறிப்பாக அக்னி நட்சத்திரம் ஆரம்பித்துவிட்டது. இந்த காலத்தில் வெயிலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருக்கும். சருமத்தை சுட்டெரிக்கும் அளவில் வெயில் கொளுத்திக் கொண்டிருக்கும்.

இரவு நேரத்தில் தூங்க முடியாத அளவு அனல் காற்று வீசும். இப்படி ஒரு நிலையில், அலுவலகத்திற்கு செல்வோரின் சருமம் வெயிலால் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகும். கோடையில் கொளுத்தும் வெயிலின் புற ஊதாக்கதிர்களுடன் தூசிகளும், அழுக்குகளும் சேர்ந்து சருமத்தில் பல்வேறு பிரச்சனைகளை உண்டாக்கும். அதில் சரும வறட்சி, பருக்கள், சரும கருமை, சரும வறட்சியால் முதுமைத் தோற்றம், எண்ணெய் பசை சருமம், சரும எரிச்சல் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

பெண்கள் மட்டும் தான் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்க ஃபேஸ் பேக் போட வேண்டும் என்பதில்லை. ஆண்களும் நிச்சயம் போடலாம். இக்கட்டுரையில் கோடை வெயிலால் ஆண்களின் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளைப் போக்க கற்றாழையை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்றும், அப்படி பயன்படுத்துவதால் என்ன பலன் கிடைக்கும் என்றும் கொடுக்கப்பட்டுள்ளது.

சரும கருமையைப் போக்க…

பெண்களைப் போன்றே ஆண்களின் சரும நிறமும் வெயிலால் மாற்றமடையும். அப்படி கருமையாக மாறும் சருமத்தை வெள்ளையாக்க விரும்பினால், கற்றாழையுடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்துப் பயன்படுத்துங்கள்.

அதுவும், ஒரு பௌலில் சிறிது கற்றாழை ஜெல்லுடன் சில துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும். பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கால் சருமத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் பொலிவோடு மின்னும்.

பிரகாசமான சருமத்தைப் பெற…

ஒருவரது சருமம் பிரகாசமாக ஜொலிக்க வேண்டுமானால், சரியாக எக்ஸ்போலியேட் செய்ய வேண்டும். எக்ஸ்போலியேட் செய்வதன் மூலம், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் சுத்தமாகும்.

அதற்கு, கற்றாழை ஜெல்லை பிளெண்டரில் போட்டு, அத்துடன் சிறிது மாம்பழக் கூழ் மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை முகம் முழுவதும் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்பு முகத்தை நீரால் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கால் முகம் புத்துணர்ச்சியுடன் இருப்பதோடு, பிரகாசமாகவும் இருக்கும்.

முதுமைத் தோற்றத்தைத் தடுக்க..

இந்த ஃபேஸ் பேக்கை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், சருமத்தின் நிறம் அதிகரிப்பதோடு, சருமத்தில் உள்ள சுருக்கம் நீங்கி இறுக்கமடையும். அதற்கு கற்றாழை ஜெல்லுடன் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தினந்தோறும் செய்வதன் மூலம், சருமத்தில் முதுமைத் தோற்றத்தைத் தரும் சுருக்கங்கள் மறையும்.

அதிகப்படியான எண்ணெய் பசை நீங்க…

வெயில் காலத்தில் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியும். சருமத்தில் எண்ணெய் அதிகம் இருந்தால், அது அழுக்குகளை அதிகம் உறிஞ்சி பல சரும பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். ஆனால் கற்றாழை இலைகளை எடுத்து, நீரில் போட்டு சிறிது நேரம் வேக வைத்து, பின் அதை அரைத்து பேஸ்ட் செய்து, சிறிது தேன் கலந்து கொள்ள வேண்டும். பின்பு அந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். கோடைக்காலத்தில் இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போட்டால், சருமம் பளிச்சென்று காணப்படும்.

சரும எரிச்சலைப் போக்க…

ஆண்களின் சருமத்தில் ஏற்படும் எரிச்சல் மற்றும் அரிப்பைப் போக்க, இந்த ஃபேஸ் பேக் உதவும். அதற்கு கற்றாழை ஜெல்லுடன், சிறிது வெள்ளரிக்காய் ஜூஸ் மற்றும் தயிர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி நன்கு காய வைக்க வேண்டும். அதன் பின்பு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தினந்தோறும் செய்து வந்தால், சருமம் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.

Related posts

குளிர்காலத்தில் சருமத்தில் தோல் உரிவதைத் தடுக்கும் ஃபேஸ் மாஸ்க்குகள்

nathan

முகத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்குவது எப்படி?

nathan

வேப்பிலை தயிர் கலந்த மாஸ்க் உங்கள் சருமத்தில் போட்டால் என்னாகும்?

nathan

உப்பைக் கொண்டு கரும்புள்ளிகளை நீக்குவது எப்படி?

nathan

பெண்களுக்கு இளமையை தக்கவைக்க எளிய டிப்ஸ்!…

sangika

உங்கள் வரட்சியான சருமத்தைப் பராமரிப்பது எப்படி?

nathan

சருமம் காப்பது சிரமம் அல்ல!

nathan

சரும பிரச்சனைகளை தீர்க்கும் வெந்தயம் ஃபேஸ் பேக்

nathan

எவ்ளோ பெரிய தழும்பா இருந்தாலும் மறைஞ்சிடும்… ஒரு ஸ்பூன் காபி பொடி இருந்தா போதும்…

nathan