28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
pg12
சரும பராமரிப்பு

ப்யூட்டி டிப்ஸ் !

பொடுகுத் தொல்லையால் அவதிப்படுகிறீர்களா?
முதல் நாள் இரவே வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து, தலைக்குத் தேய்த்துக் குளித்துப் பாருங்கள். பொடுகு மறைந்து விடும். அதுமட்டு மல்ல, மயிர்க் கால்கள் வலுவாகி கூந்தலும் பளபளப்பாகி விடும். உங்கள் அழகை அதிகரிக்க ஒரு சிம்பிள் வழி சொல்லட்டுமா?

உணவில் காரத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள். காரமான உணவு முகத்தில் பருக்களை அதிகமாக்கி, முகப் பொலிவையே கெடுத்து விடும். ஜாக்கிரதை!

நீங்கள் முப்பதுகளில் இருக்கிறீர்களா?
கடலைமாவைத் தக்காளி ஜூஸுடன் கலந்து முகத்தில் அப்ளை செய்யுங்கள். அரை மணி நேரத்தில் குளிர்ந்த தண்ணீரால் முகத்தைக் கழுவுங்கள். வாரம் இருமுறை இப்படி செய்து வந்தால் சருமம் சுருக்கமில்லாமல் தேஜஸுடன் ஜொலிக்கும். அப்புறமென்ன, முப்பதும் இருபதாகி விடும்.

`வழுக்’ சருமம் வேண்டுமா?
கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, ரோஜா இதழ்கள், சந்தனம், பாதாம் பருப்பு எல்லாவற்றையும் ஒன்றாகக் காய வைத்து கரகரப்பாக அரைத்து வைத்துக் கொள்ளவும். வாரம் ஒரு முறை தயிரில் இந்தப் பொடியைக் கலந்து உடம்பு முழுவதும் தடவுங்கள். அரைமணி நேரம் கழித்து பீர்க்கம் நாரால் உடம்பை மென்மையாகத் தேய்த்துக் குளியுங்கள். உங்கள் சருமம் பட்டுக்கே சவால் விடும் போங்க!

உறுதியான கூந்தல் வேண்டுமா?
கொப்பரைத் தேங்காயை மெலிதாகச் சீவி மிக்ஸியில் மைய அரைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எப்போதெல்லாம் தலைக்குத் தேய்த்துக் குளிக்கிறீர்களோ? அதற்கு மறுநாள் தலைமுடியின் மயிர்க்கால்களில் இந்த பேஸ்ட்டை அழுந்தத் தடவி அரை மணி நேரம் ஊற வைத்து வெறும் தண்ணீரில் அலசுங்கள். உங்கள் கூந்தல் உறுதியாகவும், ப்ட்டுப் போலவும் இருக்கும்

அழகு முகம் கிடைக்கணுமா?
இரண்டு ஸ்பூன் கொண்டைக் கடலை, 2 ஸ்பூன் பச்சரிசியை இரவில் ஊற வைத்து காலையில் அதை அரைத்து முகத்தில் பூசி வந்தால் முகம் பளிச்சென்று இருக்கும். நல்ல கலர் கிடைக்கும்.

அகலமான பாத்திரத்தில் சூடான தண்ணீரை ஊற்றி அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சம் சாறு சேர்த்து முகத்தில் நீராவி பிடித்து வாருங்களேன். முகத்திலுள்ள அழுக்குகள் மற்றும் பருக்கள் மறைந்து முகத்தின் தேஜஸ் கூடி விடும்.

இளநரைப் பிரச்னை உள்ளவரா நீங்கள்?
சைனஸ் தொல்லையும் கூடவே உங்களுக்கு இருக்கிறதா?
அப்படியென்றால் நீங்கள் ஹென்னா பயன்படுத்த முடியாது. இதற்கு ஒரு மாற்று வழி இருக்கிறது. தேங்காயையும். பீட்ரூட்டையும் நன்கு சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். தலை முழுக்கத் தடவி ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். பிறகு வெறும் தண்ணீரில் அலசுங்கள். அடிக்கடி செய்து வந்தால் இளநரை மாறி விடும்.
pg12

Related posts

சருமம் பார்க்க மிக சொரசொரப்பாக இருந்தால் எளிமையாக சரி செய்ய சில வழி முறைகள்!…

sangika

நச்சுன்னு 4 டிப்ஸ்..! வறண்ட சருமத்திற்கு இப்படியும் செய்யலாமா?

nathan

சருமத்திற்கு பொலிவு தரும் சப்போட்டா

nathan

கருப்பான பெண்கள் எப்படி தங்களை கல்யாணத்திற்கு அழகுபடுத்திக் கொள்ளலாம்?

nathan

இந்த 5 பழங்களும் உங்கள் அழகை அதிகப்படுத்தும்!! எவையென்று தெரிஞ்சுக்கனுமா?

nathan

கற்றாழை ஜெல் எப்படி சரும அழகை அதிகரிக்க உதவுகிறது?

nathan

சருமமே சகலமும்!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…இந்த 7 தவறுகள் உங்கள் சருமத்தில் செய்யவே கூடாது தெரியுமா?

nathan

Beauty tips.. சருமத்தை பளபளப்பாக்கும் பன்னீர் ரோஜா..

nathan