25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
21 6164015
அழகு குறிப்புகள்

விஷப்பாம்பை ஏவி கட்டிலில் படுத்திருந்த மனைவியை கொன்ற கணவன்! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கேரளாவில் மனைவியை கண்ணாடிவிரியன் பாம்பை வைத்து கொலை செய்த வழக்கில் கணவன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கேரள மாநிலம் பத்தணந்திட்டா அருகே அடூரை சேர்ந்தவர் சூரஜ். இவர் மனைவி உத்ரா (25). கடந்தாண்டு பிப்ரவரியில் கணவர் வீட்டில் உத்ராவை பாம்பு கடித்தது.

இதற்கு சிகிச்சை பெற்ற பின்னர் தாய் வீட்டில் இருந்த கட்டிலில் படுத்து ஓய்வு கொண்டிருந்த போது 2020 மே 6ல் மீண்டும் உத்ராவை கொடிய விஷப்பாம்பு கடித்ததில் இறந்தார். அறையில் இருந்த பாம்பை உறவினர்கள் அடித்து கொன்றனர்.

முதலில் சாதாரண பாம்பு கடி என்று கருதப்பட்ட இச்சம்பவம் பின்னர் கொலை வழக்காக மாறியது. உத்ரா சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். சூரஜ் பெற்றோரிடம் இதை சொல்லி மூன்றை ஏக்கர் நிலம், 100 பவுன் நகை, கார், 10 லட்சம் ரூபாய் ஆகியவற்றை வழங்கியுள்ளனர்.

நகை பணத்தை செலவு செய்த சூரஜ் மேலும் பணம் கேட்டு உத்ராவை கொடுமைப்படுத்தினார். உத்ராவை கொன்றுவிட்டு கூடுதல் வரசட்சணை வாங்கி வேறு திருமணம் செய்ய திட்டமிட்ட சூரஜ், பாம்பை வாடகைக்கு வாங்கி கடிக்க வைத்தார். முதல் முயற்சி தோல்வி அடைந்து. இரண்டாவது முயற்சியில் உத்ரா இறந்தது தெரியவந்தது.

இதை தொடர்ந்து சூரஜ் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்போது நாடு முழுவதும் அதிர்வலையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. அவர் மீதான வழக்கு கொல்லம் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து வந்த நிலையில் இன்று பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதன்படி சூரஜ் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது, அவருக்கான தண்டனை விபரம் வரும் புதன்கிழமை அறிவிக்கப்படவுள்ளது.

சூரஜ் குற்றவாளி என தீர்ப்பு வந்துள்ளது மனநிறைவை தருவதாக உத்ராவின் பெற்றோர் கூறியுள்ள நிலையில் அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்கவேண்டும் என கோரியுள்ளனர்.

Related posts

சுவையான தக்காளி ஆலிவ் சாலட்

nathan

பன்னீர் பக்கோடா

nathan

பிக்பாஸ் வீட்டிற்குள் மைனா மகன்.! மகனை பார்த்தவுடன் கதறி அழுத மைனா.!

nathan

அழகு குறிப்புகள்:மென்மையான கைகளை பெறுவதற்கு.

nathan

இல்லத்தரசிகளே உடனே ட்ரை பண்ணுங்க! வீட்டில் உள்ள இந்த 4 பொருள் போதும் பளிச்சுன்னு வெளியே கிளம்ப!!

nathan

சித்ராவின் மரணத்தில் அடுத்த புதிய திருப்பம்.. கழுத்தில் துணிமாட்டியதும் துடிதுடித்தார்..

nathan

சிகப்பாக சில டிப்ஸ்..

nathan

முகப்பருவை போக்கும் துளசி ஃபேஸ் பேக்

nathan

90ஸ் கனவுக்கன்னி நடிகை ஹீரா.. தற்போது எப்படி இருக்கிறார்

nathan