30.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
21 615ae
தலைமுடி சிகிச்சை

உங்களுக்கு தெரியுமா வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை சாப்பிடுவதால் நிகழும் அற்புதம்!

பொதுவாகவே கறிவேப்பிலையினை உணவில் வசனைக்காக சேர்ப்பார்கள். எனினும் சாப்பிடும்போது அதனை எடுத்து ஓரமாக வைத்துவிடுவோம். ஆனால் கறிவேப்பிலை பச்சையாக அதுவும் காலை வேளையில் வெறும் வயிற்றில் உண்பதனால் நமக்கும் அழகு மட்டுமல்லாது ஆரோக்கியமும் கிடைக்கும்.

 

கறிவேப்பிலையின் பயன்கள்

காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம் என கூறப்படுகின்றது.

இரத்த சோகை உள்ளவர்கள், காலையில் ஒரு பேரிச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த சோகை நீங்கும்.

 

சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.

கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைப்பதோடு, நல்ல கொழுப்புக்களை அதிகரித்து, இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனையில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும்.

நீண்ட நாட்கள் செரிமான பிரச்சனையை சந்தித்து வருபவராயின், அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும்.

கறிவேப்பிலையை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு கருமையாகவும் இருப்பதை உணர்வீர்கள்.

 

சளித் தேக்கத்தில் இருந்து நிவாரணம் பெற, ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியிருந்த சளி முறிந்து வெளியேறிவிடும்.

அதோடு கறிவேப்பிலை உட்கொண்டு வந்தால், கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்கள் வெளியேறிவிடும் என்பதுடன் கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி கல்லீரலைப் பாதுகாப்பதோடு, சீராக செயல்படவும் தூண்டுமாம்.

 

Related posts

கண்டிஷ்னர் எப்படி அப்ளை பண்றது கரெக்ட்?

nathan

இந்த உணவுகள் எல்லாம் நிச்சயமாக உங்களுக்கு வழுக்கை ஏட்படுத்தும்…

nathan

தலையில் அதிக பொடுகு இருக்கிறதா? அசர வைக்கும் பாட்டி வைத்தியங்கள்!!

nathan

பூண்டை இப்படி யூஸ் பண்ணுனீங்கனா… முடி கொட்டுறது நின்னு…

nathan

திருமணத்திற்கு முன் உங்கள் முடியை பராமரிப்பதற்கான எளிய வழிகள்!!!

nathan

பொடுகு தொல்லையை நீக்கி கூந்தல் வளர்ச்சியை தூண்டும் கடுகு எண்ணெய்

nathan

பொடுகால் அவதியா! அப்ப இத படிங்க!

nathan

உங்க முடி நீளமா அடர்த்தியா பளபளன்னு கருகருன்னு வளர…

nathan

முடி பராமரிப்புக்கும், பாதுகாப்புக்கும் சில டிப்ஸ்… !

nathan