25.4 C
Chennai
Saturday, Jan 4, 2025
sl2182
அசைவ வகைகள்

தேங்காய்ப் பால்- ஆட்டுக்கால் குழம்பு- செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

1 1/2 கி. இளசான ஆட்டுக்கால் துண்டுகளாக்கியது;
500 மிலி. தேங்காய்ப் பால்;
150 கிராம் பொடிக்கப்பட்ட முந்திரி பருப்பு;
4 பொடியாக நறுக்கப்பட்ட வெங்காயம்;
; 4 சிவப்பு மிளகாய்; 1
டேபிள் ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது;
1 டேபிள் ஸ்பூன் சிவப்பு மிளகாய் விழுது;
3 லவங்கப் பட்டை;
8 கிராம்பு;
2 ஏலக்காய்; உப்பு;
3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் அல்லது நெய்;
3 உருளைக் கிழங்கு
பெரிய துண்டுகளாக்கி பொறித்தது.

செய்முறை:
முதல் நாள் இரவு 3 மணி நேரம் ஆட்டுக் காலில் இஞ்சி பூண்டு விழுது, சிவப்பு மிளகாய் விழுது, ஆகியவற்றைத் தடவி வைக்கவும். தேங்காய்ப் பாலில் முந்திரி பருப்பு விழுதைச் சேர்த்து தனியே வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, லேசான தீயில் வெங்காயம், ஏலக்காய், லவங்கப்பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து வதக்கவும். அத்துடன் ஆட்டுக்கால் சேர்த்து ஒரு கப் தண்ணீர் சேர்த்து ப்ரஷர் குக்கரில் வேக வைக்கவும். கடைசியாக தேங்காய்ப் பால்- முந்திரி விழுதை சேர்த்தால், திக்கான க்ரேவி கிடைக்கும். வறுத்த உருளைக் கிழங்கையும் சேர்த்து சூடாகப் பறிமாறவும்.
sl2182

Related posts

சிக்கன் பிரியாணி

nathan

முட்டை மசாலா டோஸ்ட்

nathan

பஞ்சாபி சிக்கன்

nathan

மீன் வறுவலில் பெரும்பாலானோர் செய்யும் தவறு என்ன தெரியுமா?….

sangika

அவித்த முட்டை பிரை

nathan

வீட்டிலேயே செய்யலாம் சூப்பரான தந்தூரி சிக்கன்

nathan

இப்தார் விருந்துக்கு சிக்கன் நகட்ஸ் தயாரிப்பது எப்படி? சிம்பிள் விளக்கம்!!

nathan

சில்லி இறால் -கொஞ்சம் வித்தியாசமாக செய்து பாருங்கள்.

nathan

அரேபியன் மட்டன் மந்தி பிரியாணி

nathan