28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
21 615fc 1
Other News

கவனத்திற்கு! பிரியாணி அடிக்கடி சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

அதிகம் பேர் விரும்பி சாப்பிடும் உணவில் பிரியாணிக்கு என்றுமே முதல் இடம் உண்டு! அந்த அளவிற்கு பிரியாணி கோடிக்கணக்கானோரை தன் வசப்படுத்தியுள்ளது.

பிரியாணியில் பல ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும், சில தீமைகளும் இருக்கத்தான் செய்கிறது.

பிரியாணியில் உள்ள நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்து காண்போம்.

ஊட்டச்சத்துக்கள்

பிரியாணியில் கிட்டதட்ட அனைத்து ஊட்டச்சத்துக்களும் இருக்கிறது. ஒரு பிளேட் பிரியாணியில் புரோட்டின்களும், கார்போஹைடிரேட்டுகளும் மற்றும் சில உடலுக்கு நன்மை தரக்கூடிய கொழுப்புகளும் இருக்கிறது. புரோட்டின்கள் உபயோகிக்கும் இறைச்சியில் இருந்தும், கார்போஹைட்ரட் அரிசியில் இருந்தும், கொழுப்புகள் எண்ணெய் மற்றும் நெய்யில் இருந்து கிடைக்கிறது. வெஜிடபிள் பிரியாணியாக இருந்தால் வைட்டமின்கள் காய்கறிகளில் இருந்து கிடைக்கும். எந்த பிரியாணியாக இருந்தாலும் அதில் சத்துக்கள் இருப்பது மட்டும் உறுதி.

வைட்டமின் பி3

சிக்கன் பிரியாணியாக இருந்தால் அதில் வைட்டமின் பி3 அதிகம் இருக்கும். மேலும் இதில் நியாசின் என்னும் பொருள் உள்ளது. இது உங்களுக்கு போதுமான ஆற்றலை வழங்கக்கூடியது. மேலும் நரம்பியல் கோளாறுகளான மனஅழுத்தம், அல்சைமர், நியாபக மறதி போன்ற குறைபாடுகளை சரி செய்கிறது.

உறுப்புகளை பாதுகாத்தல்

பிரியாணியில் உள்ள மசாலா பொருட்கள் பெரும்பாலும் உடல் உள்ளுறுப்புகளை பாதுகாக்கிறது. பிரியாணியில் உள்ள மசாலாப்பொருட்கள் என்னவென்று பார்த்தால் இஞ்சி, மஞ்சள், மிளகு, குங்குமப்பூ, பூண்டு., இவை ஒவ்வொன்றும் தனித்தனி மருத்துவ குணங்கள் கொண்டது. இவை நமது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க போதுமானது. பூண்டு வாயுக்கோளாறுகளை தடுக்கும், குங்குமப்பூ கல்லீரலை பாதுகாக்கும்.

தீமைகள் என்ன?

பிரியாணி எந்த அளவிற்கு ஆரோக்கியமான உணவோ அதே அளவிற்கு ஆரோக்கியத்தை கெடுக்கவும் கூடியது. எல்லாம் நாம் சாப்பிடும் அளவை பொறுத்துதான் இருக்கிறது. தினமும் பிரியாணி சாப்பிடுவது பல ஆரோக்கிய சீர்கேடுகளை உண்டாக்கும்.

நல்ல கொழுக்களை போல சில தீய கொழுப்புகளும் பிரியாணியில் இருக்கத்தான் செய்கிறது. பிரியாணி சாப்பிட்டவுடன் மூலிகை தேநீர் அல்லது எலுமிச்சை தேநீர் குடிப்பது நல்லது. இது பிரியாணியில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கிறது. மேலும் செரிமானத்தையும் அதிகரிக்கிறது.

முடிந்தளவு வீட்டிலியே பிரியாணி சமைத்து சாப்பிட முயற்சி செய்யுங்கள். தரமற்ற பிரியாணி உங்கள் ஆரோக்கியத்தை பதம் பார்த்துவிடும். கூடுதல் சுவைக்காக வெளியே சாப்பிடுவதாக இருந்தாலும் தரமான கடைகளில் மட்டும் சாப்பிடவும்.

Related posts

ஓடும் ரயிலில் தடபுடலாய் திருமணம் செய்த ஜோடி

nathan

நடிகை ராதாவின் மகளுக்கு நிச்சயதார்த்தம்;ஃபோட்டோ!

nathan

திக் திக் நிமிடங்கள்! உடைந்து சிதறிய சந்திரயான்- 2! (வீடியோ)

nathan

இந்தியாவின் மிகப்பெரிய சக்கரை ஆலைக்கு சொந்தக்காரி!

nathan

கணவரிடம் தகாத உறவு – கொல்ல முயன்ற அக்கா!

nathan

இந்தியா பொண்ணு, பிரித்தானிய பையன், இந்து பாரம்பரியத்தில்

nathan

கலெக்டர் ஆன பின் 22 தொகுப்பு வீடு கட்டிக்கொடுக்கும் நடிகர் சின்னி ஜெயந்த் மகன்…

nathan

நயன்தாரா SCV ஜட்டியா போட்டிருக்காங்க..?

nathan

நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்?

nathan