curry leaves
தலைமுடி சிகிச்சை

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் கறிவேப்பிலை சூப்

தினமும் சிறிதளவு கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் அனைத்து விதமான கூந்தல் பிரச்சனைகளும் தீரும். இன்று கறிவேப்பிலையில் சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  1. கறிவேப்பிலை – 2 கப்
  2. மிளகு – 2 ஸ்பூன்
  3. சீரகம் – 2 ஸ்பூன்
  4. வெங்காயம் – 2
  5. தக்காளி – 2
  6. பூண்டு – 4 பல்
  7. சர்க்கரை – 1 டீஸ்பூன்
  8. வெண்ணெய் – 6 டீஸ்பூன்
  9. எண்ணெய் – 2 டீஸ்பூன்
  10. கொத்தமல்லித்தழை – சிறிதளவு
  11. உப்பு – தேவையான அளவு  

செய்முறை

  1. வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  2. வாணலியில் 2 டீஸ்பூன் வெண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகு, சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளித்து ஆறவிடவும்.
  3. நன்கு ஆறியதும் அவற்றை மிக்சியில் போட்டு நைசாக பொடித்து கொள்ளவும். மற்றொரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் வெங்காயம், தக்காளி, பூண்டை போட்டு வதக்கி ஆறியதும் மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்
  4. . அரைத்த விழுது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு அதனுடன் பொடித்த பொடி, சர்க்கரை, மீதமுள்ள வெண்ணெய் ஆகியவற்றை சேர்த்து கொதித்ததும் இறக்கி வடிகட்டி கொத்தமல்லித்தழை தூவி பரிமாறினால் சுவையான கறிவேப்பிலை சூப் ரெடி.

Related posts

தலை முடி உதிர்கின்றது என்ற கவலையா? பாட்டி வைத்தியம்

nathan

முடி உதிர்வதைத் தடுக்க இஞ்சியை எப்படி பயன்படுத்தலாம்?

nathan

கோடைக்காலத்துல மட்டும் முடி அதிகமா கொட்டுதா? இதோ உங்களுக்காக டிப்ஸ்.!

nathan

வெள்ளை முடியால் உங்களுக்கு கவலையா?

nathan

உங்க முடி உடையாம கொட்டாம பளபளன்னு இருக்க நீங்க இத செஞ்சா போதுமாம்…!

nathan

பொடுகு பிரச்னையை திர்க சில டிப்ஸ்!

nathan

இளநரைக்கு எளிய வீட்டு வைத்தியம்

nathan

கூந்தலுக்கு அழகுடன் வைத்துகொள்ள வேண்டுமா? சூப்பர் டிப்ஸ்

nathan

உங்களுக்கு தெரியுமா பொடுகைப் போக்கும் கல் உப்பு!

nathan