29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
face2
முகப் பராமரிப்பு

உங்களுக்கு தெரியுமா சரும பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் உருளைக்கிழங்கு!

பொதுவாக தினமும் அன்றாட சமையலுக்கு அதிகளவு பயன்படுத்த கூடிய கிழங்குகளில் முதன்மையானது உருளைகிழங்கு தான்.

இது ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி சரும பராமரிப்புக்கும், கூந்தல் பராமரிப்புக்கும் அதிகளவு பயன்படுகிறது.

குறிப்பாக சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகள் கருவளையம், வெயிலினால் ஏற்படும் சரும பிரச்சனைகளுக்கு, வறண்ட சருமத்திற்கு, கரும்புள்ளிகளுக்கு, கண்களில் ஏற்படும் வீக்கத்திற்கு, ஆயில் சருமத்திற்கு என அனைத்து பிரச்சனைகளுக்கும் உருளைக்கிழங்கு தீர்வாகிறது.

அந்தவகையில் தற்போது சரும பிரச்சினைக்கு எப்படி எல்லாம் உருளைக்கிழங்கை பயன்படுத்தலாம் என்பதை இங்கே பார்ப்போம்.

  • இரண்டு டேபிள்ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறுடன் தலா இரண்டு டீஸ்பூன் பாதாம் எண்ணெய், பால் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இந்த கலவையை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி, கால் மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். தொடர்ந்து இவ்வாறு செய்துவந்தால் சருமம் பொலிவு பெறும்.
  • முகப்பரு மற்றும் அதனால் உண்டாகும் புள்ளிகள், வீக்கம் போன்ற பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் ஒரு டேபிள்ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தக்காளி சாறுவை கலந்து முகத்தில் தடவிவிட்டு ஒரு மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வரலாம். இரவில் தூங்க செல்லும் முன்பாகவோ அல்லது காலையில் எழுந்த பின்போ இவ்வாறு செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
  • மிருதுவான, மென்மையான சரும பொலிவை தக்கவைத்துக்கொள்வதற்கு 2 டேபிள்ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறுடன், அரை டேபிள்ஸ்பூன் தேன் சேர்த்து முகம், கழுத்து பகுதியில் பூசி வரலாம். 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிட வேண்டும்.
  •  கண்களுக்கு அடியில் கருவளையம் பாதிப்புக்கு 2 டேபிள்ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறுடன் சம அளவு வெள்ளரிக்காய் சாறுவை கலந்து தூங்குவதற்கு முன்பு கண்களுக்கு அடியில் தடவி மசாஜ் செய்யலாம். காலையில் எழுந்ததும் குளிர்ந்த நீரில் கழுவி வர, கருவளையங்கள் மறையத் தொடங்கும்.
  • முகத்தில் படியும் எண்ணெய் பிசுபிசுப்பு தன்மையை கட்டுப்படுத்த 2 டேபிள்ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறுவுடன் ஒரு டேபிள்ஸ்பூன் முல்தானி மெட்டியை பசை போல் குழப்பி முகத்தில் பூச வேண்டும். அரை மணி நேரம் உலர வைத்துவிட்டு குளிர்ந்த நீரில் கழுவிவிட வேண்டும்.

Related posts

ஸ்டிக்கர் பொட்டு வைப்பதால் வரும் அலர்ஜியை போக்க டிப்ஸ்

nathan

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க

nathan

அடர்த்தியான புருவம் வேண்டுமா? இதை எல்லாம் ட்ரை பண்ணுங்க

nathan

சில அழகு டிப்ஸ் !! அழகை பேணிக்காப்பதில் முக்கிய பங்கு வகிப்பது கடலைமாவு..

nathan

முகத்தில் சீழ் நிறைந்த பருக்களா? இதோ எளிய நிவாரணம்….

nathan

உங்க முகப்புத்துணர்ச்சிக்கு ஏற்ற “மேங்கோ ஃபேசியல்” சூப்பர் டிப்ஸ்!!!

nathan

சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு சருமத்தைப் பராமரித்து வந்தாலே சரும அழகை மேம்படுத்தலாம்.

nathan

முகத்தை மசாஜ் செய்வது எப்படி

nathan

முயன்று பாருங்கள், முகம் பளிச் ஆக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?

nathan