28.9 C
Chennai
Monday, Feb 17, 2025
06 muttonsalna
அசைவ வகைகள்

சுவையான மதுரை ஸ்டைல் மட்டன் சால்னா

வீடுகளில் செய்யப்படுவது பிரியாணி. சரி, அந்த பிரியாணிக்கு என்ன சைடு டிஷ் செய்ய போறீங்க..? தெரியவில்லையா..

அப்படியென்றால் நம்ம மதுரை ஸ்டைல் மட்டன் சால்னா செய்யுங்கள். இது மிகவும் ஈஸியான ரெசிபி மட்டுமின்றி, ருசியுடனும் இருக்கும். சரி, இப்போது அந்த மதுரை ஸ்டைல் மட்டன் சால்னாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா…

Madurai Style Mutton Salna Recipe: Bakrid Recipe
தேவையான பொருட்கள்:

மட்டன் – 200 கிராம்
துவரம் பருப்பு – 3 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மல்லி தூள் – 1 1/2 டீஸ்பூன்
தண்ணீர் – 1 கப்
உப்பு – தேவையான அளவு

அரைப்பதற்கு…

தேங்காய் – 3 டேபிள் ஸ்பூன் (துருவியது)
சோம்பு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/4 டீஸ்பூன்
மிளகு – 1/4 டீஸ்பூன்

தாளிப்பதற்கு…

எண்ணெய் – 2 டீஸ்பூன்
பட்டை – 1/4 இன்ச்
கல்பாசி – 1/4 டீஸ்பூன்
கிராம்பு – 2
ஏலக்காய் – 2
பிரியாணி இலை – 1

செய்முறை:

முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு தாளிக்க வேண்டும்.

பின்பு அதில் வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பின் தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு மசாலாக்கள் ஒன்று சேர வதக்க வேண்டும்.

பின் துவரம் பருப்பை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதில் கழுவி வைத்துள்ள மட்டனை சேர்த்து 2 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.

அடுத்து அதில் துவரம் பருப்பை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி 8 விசில் விட்டு இறக்கி, குக்கரை திறந்து, மீண்டும் குக்கரை அடுப்பில் வைத்து, 2 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட் சேர்த்து, பச்சை வாசனை போக குழம்பை நன்கு கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், மதுரை ஸ்டைல் மட்டன் சால்னா ரெடி!!!

Related posts

ரமலான் ஸ்பெஷல்: காஷ்மீரி ரோகன் ஜோஷ்

nathan

ருசியான… பன்னீர் 65

nathan

இறால் கறி

nathan

உருளைகிழங்கு ஃப்ரெஞ்ச் ஆம்லெட்

nathan

இறால் குடமிளகாய் வறுவல்

nathan

சூப்பரான சைடிஷ் சிக்கன் சுக்கா வறுவல்

nathan

கத்தரிக்காய் புளிக்குழம்பு

nathan

ஆந்திரா ஸ்டைல் இறால் ப்ரை ரெடி!!!

sangika

மட்டன் கபாப் : செய்முறைகளுடன்…!​

nathan