28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
208609xcitefun manicure 792748 15783501 std
நகங்கள்

நகங்கள் உடைந்து போகுதா?

முகத்திற்கு ஏற்ப நகங்களை வளர்க்க பெரும்பாலான பெண்ககள் ஆசைபடுவார்கள் ஆனால் முகத்திற்கு தரும் பராமரிப்பை நகங்களுக்கு தருவதில்லை . நகங்கள் அழகாக, நக பராமரிப்பிற்கான சில டிப்ஸ் தரமான நெயில் பாலிஷ்களை மட்டுமே உபயோகிக்க வேண்டும். அப்போது தான் நகத்திற்கு எவ்வித பாதிப்பும் வராது.

நெயில் பாலீஷ் வாங்கும் போது உங்கள் நிறத்திற்கு ஏற்ற கலராக பார்த்து தேர்ந்தெடுங்கள். சிலருக்கு நகம் கடினத்தன்மையுடன் இருப்பதால், நகத்தை வெட்டுவதற்கு கஷ்டமாக இருக்கும்.

அப்படிப்பட்டவர்கள் குளித்தவுடன் நகம் வெட்டினால், நகம் ஈரத்தன்மையுடன் இருப்பதால், எளிதாக வெட்ட வரும். அதே போல், தேங்காய் எண்ணெய் தடவி சிறிது நேரம் கழித்து வெட்டினாலும் எளிதாக வெட்டலாம்.

சிலப்பெண்கள் ஆசை ஆசையாக வளர்க்கும் நகங்கள் உடைந்து விடுகின்றது. நகங்கள் அடிக்கடி உடைந்து போகிறவர்கள், சிறிதளவு பேபி ஆயிலில் நகங்களை மூழ்கும் படி வைத்தால், நகங்கள் உறுதியாகும்.

நெயில் பாலீஷ் ரிமூவரை அடிக்கடி பயன்படுத்துவது நகத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே, அவற்றை அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். நெயில் பாலீஷ் ரிமூவருடன், சிறிது கிளிசரின் கலந்து பயன்படுத்துவது நல்லது.

தண்ணீரை மிதமாக சூடுபடுத்தி, சிறிது உப்பு கலந்து, அதில் விரல்களை சிறிது நேரம் வைத்திருந்தால், விரல்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படும் தினமும் நெயில் பாலீஷ் உபயோகிப்பதால் நகங்களின் நிறம் மங்கி காணப்படும். எனவே வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் நெயில் பாலீஷ் உபயோகிக்காமல், இருப்பது நல்லது.

ஈரமாக இருக்கும் போது ஷேப் செய்தால், நகங்கள் உடைவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, நகங்கள் ஈரமாக இருக்கும்போது ஷேப் செய்வதை தவிருங்கள். கிளிசரின் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து, அதை நகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், நகங்கள் பளபளப்பாக இருக்கும்.

அதே போல், பாதாம் எண்ணெயை நகங்களில் பூசி சிறிது நேரம் கழித்து, கடலை மாவினால் கழுவினாலும் நகம் பளபளப்படையும். மாத்திற்கு ஒரு முறை இப்படி செய்ய நல்ல பலன் கிடைக்கும்.

ஆலிவ் எண்ணெயை மிதமாக சூடுபடுத்தி அதை விரல்களில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் நகங்கள் நன்றாக வளரும். மிதமான சூடுள்ள பாலில் பஞ்சை நனைத்து அதை வைத்து நகங்களை தேய்த்து சுத்தப்படுத்தினால், நகங்களில், காணப்படும் அழுக்குகள் நீங்கி நகங்கள் பளபளப்பாகும்.

நகங்கள் உறுதியற்று உடைவதற்கு இரும்பு மற்றும் கல்சியம் போன்ற சத்துக்குறைபாடுகளே காரணம். எனவே நகங்கள் ஆரோக்கியமாக வளர ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் உணவு வகைகளை சாப்பிட வேண்டும்.

நெயில் பாலீஷ் போடும் போது, பிரஷ் ஷினால், நகத்தின் அடிப்பகுதியில் நுனி வரை ஒரே தடவையாக போட வேண்டும். அப்போது தான் அவை பளபளப்பாக எவ்வித திட்டுக்களும் இன்றி அழகாக காட்சியளிக்கும்.
208609,xcitefun manicure 792748 15783501 std

Related posts

ஆரோக்கியமான நகங்களை பெற, நகங்களை மென்மையானதாக்க

nathan

நகம் பராமரிப்பு

nathan

உடையாத நீளமான நகம் பெற வேண்டுமா? இப்போ இந்த சாய்ஸ் ட்ரை பண்ணுங்க!!

nathan

நகங்களை அழகாக்கும் நெயில் ஸ்பா

nathan

கைவிரல்களுக்கு அழகு சேர்ப்ப‍து நகங்கள்தான். ….

sangika

நகங்களின் பளபளப்பிற்கும் வளர்ச்சிக்கும்

nathan

நகங்களை சீக்கிரமாக வளர செய்யவும், அழகாக்கவும் இதை முயன்று பாருங்கள்!

nathan

நகத்தை சுத்தம் செய்வது எப்படி?…

nathan

நகங்கள் அழகாக எளிய வீட்டுக் குறிப்பு!….

sangika