25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
ayurveda beauty tips
சரும பராமரிப்பு

குளிர்காலத்தில் ஏற்படக்கூடிய சரும வறட்சியை போக்க உதவும் 5 ஆயுர்வேத குறிப்புகள்! தெரிஞ்சிக்கங்க…

ஆயுர்வேதம் என்பது பல ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்தியாவில் தோன்றிய ஒரு பழமையான இயற்கை சிகிச்சை முறை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். முடி பிரச்சனை தொடங்கி, சருமம் மற்றும் பல்வேறு ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகளுக்கும் ஆயுர்வேதத்தில் தீர்வு உண்டு. சரும பிரச்சனைகள் என்று எடுத்துக் கொண்டால், பிற காலங்களை காட்டிலும் குளிர்காலத்தில் அதிகமாக ஏற்படக்கூடும்.

பெரும்பாலும், குளிர்காலத்தில் அனைவரும் சந்திக்கக்கூடிய சரும பிரச்சனைகளில் ஒன்று வறண்ட சருமம். இதுபோன்ற சூழல்களில், சருமத்தை பாதுகாக்க பெரிதும் உதவுவது ஆயுர்வேத சிகிச்சை முறை தான். வாருங்கள், இப்போது குளிர்காலத்தில் சருமத்தை பாதுகாக்க ஆயுர்வேதம் கூறும் 5 குறிப்புகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்…

ஆரோக்கியமான உணவு

பொதுவாகவே நாம் அனைவரும் உண்ணும் உணவில் கவனமாக இருந்தாலே போதும், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். அதிலும், குளிர்காலத்தில் உங்கள் சருமம் நீரேற்றமாக இருக்க வேண்டுமென்றால், அனைத்து வகையான சத்துக்கள் நிறைந்த உணவுகளையும் நீங்கள் சாப்பிடுவதை உறுதி செய்யவேண்டும். ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது உங்கள் சருமத்திற்கு ஆரோக்கியத்தை அளிப்பதோடு, ஒளிரும், பொலிவாக மற்றும் ஈரப்பதமாக வைத்திருக்க உதவும். உங்கள் உணவில் நட்ஸ், பருப்பு வகைகள், பால் மற்றும் ஆலிவ் உள்ளிட்டவற்றை சேர்த்துக் கொள்ள முயற்சியுங்கள்.

ஆயுர்வேத மசாஜ்

மசாஜ் செய்வது குளிர்ந்த காலங்களுக்கு மிகவும் நல்லது மட்டுமன்றி நம்பிக்கைக்கு உரியதாகவும் திகழ்கிறது. ஆயுர்வேத முறையில் மசாஜ் செய்ய பயன்படுத்தப்படும் அத்தியாவசிய எண்ணெய்கள் மற்றும் மூலிகைகள் உங்களது சரும செல்களை புதுப்பித்து, பொலிவுனை தந்திடும். உங்கள் சருமத்திற்கு கூடுதல் பளபளப்பு மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த, வாரத்திற்கு இரண்டு முறையாவது ஆயுர்வேத முறைகளில் மசாஜ் செய்யவும்.

ஆயுர்வேத ஃபேஸ் பேக்

ரோஜா இதழ்கள், சதாவரி, அம்லா, யஷ்டிமாடு, அனந்தமூல், அஸ்வகந்தா போன்றவை குளிர்காலத்தில் பயன்படுத்த மிகவும் உகந்த பொருட்களாகும். வீட்டில் நீங்களாகவே இந்த பொருட்களை பயன்படுத்தி ஃபேஸ் பேக்குகளை தயாரிக்கலாம். இந்த ஃபேஸ் பேக்குகளை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் சருமம் ஆரோக்கியமாகவும் ஈரப்பதமாகவும் வைத்திருக்க உதவும்.

வைட்டமின் டி நிறைந்த உணவுகள்

முட்டை, தயிர், பால், தக்காளி, டூனா, சால்மன் போன்ற வைட்டமின் டி நிறைந்த உணவுகளை நீங்கள் உங்களது உணவில் தொடர்ந்து சேர்த்து கொள்ளலாம். குளிர்காலங்களில் சூரிய ஒளியின் தீவிரம் குறைவாக இருப்பதால், வைட்டமின் டி குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனவே, இதுபோன்ற காலங்களில், வைட்டமின் டி குறைபாடு ஏற்படாமல் இருக்க, வைட்டமின் டி நிறைந்தத உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ளவேண்டும். வேண்டுமென்றால், நீங்கள் வீட்டிலேயே தயாரிக்கும் ஃபேஸ் பேக்குகளில் கூடு வைட்டமின் டி நிறைந்த பொருட்களை பயன்படுத்தலாம்.

தேங்காய் எண்ணெய் மற்றும் நெய்

தேங்காய் எண்ணெய் மற்றும் நெய் உங்கள் வாத தோஷத்தை சமப்படுத்த உதவுகின்றன. இதனால் உங்கள் சருமத்தில் கறைகள் மற்றும் வறட்சி ஏற்படுவது பெரும்பாலும் குறைகிறது. இவை இரண்டுமே நல்ல கொழுப்புகளால் நிறைந்தவை. அதனால், அவை உங்களது ஆரோக்கியத்திற்கு எவ்வித தீங்கும் விளைவிக்காது. இதுபோன்ற அனைத்து ஆயுர்வேத உதவிக்குறிப்புகளும் உங்கள் சருமத்தை இயற்கையாகவும் ஆரோக்கியமாகவும் உணர உதவும். எனவே உங்கள் அன்றாட வாழ்வில் எண்ணெய்கள் மற்றும் நெய்யை தாராளமாக சேர்த்துக் கொள்ளலாம். இவற்றால் எந்த ஒரு தீங்கும் ஏற்படாது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

Related posts

சரும அழகை கெடுக்கும் நீர் கொப்புளங்களை எளிதில் அகற்றும் மேஜிக் பொருள் இதுதான்!!

nathan

சரும பிரச்சனைகளை தீர்க்கும் வினிகர்

nathan

பாட்டி சொல்லும் மூலிகை வாசனை பொடி- பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

உடற்பயிற்சியின் போது செய்யப்படும் தவறுகளால் வரும் சருமப்பிரச்சனைகள் !!

nathan

அழகான மூக்கிற்கான குறிப்புகள்

nathan

உரோமங்களை அகற்ற ஈஸி வழி

nathan

கைகள் மற்றும் கால்களின் அழகை மேம்படுத்த சூப்பர் டிப்ஸ்…..

nathan

சருமத்தில் உள்ள வெள்ளைத் திட்டுக்களைப் போக்கும் சில சூப்பர் டிப்ஸ்…

nathan

அட்டகாசமான பொலிவை தரும் ரோஸ் வாட்டர் எப்படி வீட்டில் தயாரிக்கலாம்? எளிய முறை!!

nathan