ஒவ்வொரு வருடமும் ட்ரெண்ட் மாறிக் கொண்டே வருகிறது. சில வருடங்களுக்கு முன் மெல்லிய புருவங்கள் தான் ட்ரெண்ட்டாக இருந்தது. இதற்காக பெரும்பாலான பெண்கள் தங்களது புருவங்களை அழகாக வில் போன்று காட்டுவதற்கு த்ரெட்டிங் செய்தார்கள். ஆனால் தற்போது சற்று அடர்த்தியான புருவங்கள் தான் ஃபேஷன். த்ரெட்டிங் செய்ததால், பிடுங்கிய இடத்தில் முடி வேகமாக வளர்வதில்லையா? கவலையை விடுங்கள். இக்கட்டுரையில் அதற்கான சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
Remedies You Can Use To Grow Back Your Eyebrows
சிலருக்கு புருவங்களே சரியாக தெரியாது. அத்தகையவர்கள் ஐ-ப்ரோ பென்சிலைப் பயன்படுத்துவார்கள். ஆனால் எத்தனை நாட்கள் தான் இந்த ஐ-ப்ரோ பென்சிலைப் பயன்படுத்துவீர்கள். இதற்கு தீர்வு வேண்டாமா? இந்த கட்டுரையில் புருவங்களின் வளர்ச்சியைத் தூண்டும் வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த பொருட்களைக் கொண்டு எப்படி புருவங்களுக்கு பராமரிப்பு கொடுப்பது என்று கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த பொருட்களில் உள்ள சத்துக்கள் மயிர்கால்களுக்கு ஊட்டமளித்து, நல்ல அழகிய வடிவமைப்பில் புருவங்கள் வளர உதவும். அதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளை அன்றாடம் தவறாமல் பின்பற்ற வேண்டும். சரி, இப்போது புருவங்களை நன்கு அடர்த்தியாக வளர உதவும் சில எளிய வழிகள் குறித்துக் காண்போமா…!
விளக்கெண்ணெய்
* விளக்கெண்ணெயை விரலால் தொட்டுக் கொள்ளவும்.
* பின் அதனை புருவங்களின் மீது தடவ வேண்டும்.
* பின்பு 40-45 நிமிடம் நன்கு ஊற வைக்கவும்.
* அதன் பின் ஈரமான துணியால் புருவங்களைத் துடைத்து எடுக்கவும்.
* இந்த செயலை தினமும் ஒரு முறை செய்து வந்தால், புருவங்கள் நன்கு அடர்த்தியாக வளரும்.
வெந்தய விதைகள்
* ஒரு பௌலில் 1/2 டீஸ்பூன் வெந்தய விதைப் பொடியை எடுத்து, அத்துடன் 2 டீஸ்பூன் நீர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதனை புருவங்களின் மீது தடவ வேண்டும்.
* இந்த கலவையை 40-45 நிமிடம் நன்கு ஊற வைக்கவும்.
* இறுதியில் கிளின்சர் பயன்படுத்தி வெதுவெதுப்பான நீரால் புருவங்களைக் கழுவுங்கள்.
* இந்த செயலை வாரத்திற்கு 3-4 முறை பயன்படுத்த நல்ல பலன் கிடைக்கும்.
வைட்டமின் ஈ ஆயில்
* வைட்டமின் ஈ கேப்ஸ்யூலில் உள்ள எண்ணெயை துளையிட்டு எடுத்துக் கொள்ளுங்கள்.
* பின் அந்த எண்ணெயை இரவில் படுக்கும் போது புருவங்களின் மீது தடவி, இரவு முழுவதும் ஊற வையுங்கள்.
* மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள்.
* இந்த செயலை தினமும் ஒருமுறை செய்து வர நல்ல பலனைக் காணலாம்.
கற்றாழை
* கற்றாழையின் ஜெல்லை இரண்டு புருவங்களின் மீதும் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்யுங்கள்.
* இரவு முழுவதும் நன்கு ஊற வையுங்கள்.
* மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவுங்கள்.
* இந்த செயலை தினமும் செய்து வர, புருவங்கள் அடர்த்தியாக வளர்வதைக் காணலாம்.
பெட்ரோலியம் ஜெல்லி
* பெட்ரோலியம் ஜெல்லியை புருவங்களின் மீது தடவ வேண்டும்.
* பின் இதனை 15-20 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.
* பின்பு கிளின்சர் பயன்படுத்தி, வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த முறையை ஒரு நாளைக்கு 2-3 முறை என தினமும் செய்து வருவது நல்லது.
பால்
* பாலை பஞ்சுருண்டையில் நனைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதனை புருவங்களின் மீது தடவ வேண்டும்.
* பின்பு 20-25 நிமிடம் நன்கு ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த செயலை தினமும் 2-3 முறை என தினமும் செய்ய புருவங்களில் ஒரு நல்ல மாற்றத்தைக் காண முடியும்.
தேங்காய் எண்ணெய்
* தேங்காய் எண்ணெயை புருவங்களின் மீது தடவி, மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.
* அதன்பின் 1 மணிநேரம் நன்கு ஊற வையுங்கள்.
* இறுதியில் கிளின்சர் பயன்படுத்தி, புருவங்களை நன்கு கழுவுங்கள்
வெங்காய சாறு
* சிறிது வெங்காயத்தை எடுத்து அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.
* பின் அதன புருவங்களின் மீது தடவ வேண்டும்
* பின்பு 20 நிமிடம் நன்கு ஊற வைத்து, கிளின்சர் பயன்படுத்தி, வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவுங்கள்.
* இந்த செயலை வாரத்திற்கு 4-5 முறை பின்பற்ற, புருவங்கள் நன்கு அடர்த்தியாக வளரும்.
ஆலிவ் ஆயில்
* ஆலிவ் ஆயிலை வெதுவெதுப்பாக சூடேற்றி, புருவங்களின் மீது தடவி மசாஜ் செய்ய வேண்டும்.
* பின் 40-45 நிமிடம் நன்கு ஊற வைத்து, மேக்கப் ரிமூவர் கொண்டு எண்ணெயை துடைத்து எடுங்கள்.
* அதன் பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவுங்கள்.
* இப்படி ஒரு நாளைக்கு பல முறை செய்தால், எதிர்பார்த்த பலனைப் பெறலாம்.