black rings
முகப் பராமரிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கருவளையம் உருவாகக் காரணம் என்ன தெரியுமா?

பெண்களின் முகத்தில் முகப்பருவிற்கு அடுத்தப்படியான பிரச்சனையாக இருப்பது கருவளையம் தான். கண்களுக்கு அடியில் வரும் கருவளையம் பெண்களின் மொத்த அழகையும் கெடுத்து விடுகின்றது.

பொதுவாகவே கண்களுக்கு கீழ் கருவளையம் ஏற்பட பல காரணங்கள் கூறப்படுகிறது. அவற்றை தெரிந்து கொண்டால் எளியமுறையில் இதிலிருந்து விடுதலை பெறலாம். தற்போது அவை என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

காரணம் என்ன? 

  • சிலருக்கு மரபியல் காரணங்களால் பெற்றோரிடம் இருந்து பிள்ளைகளுக்கு ஏற்படலாம்.
  • சத்துக்குறைவினால் சிலருக்கு கண் கருவளையம் தோன்றும். சத்தான உணவு பழக்கவழக்க முறைக்கு மாறுவதே இதற்கு தீர்வு.
  • பெண்கள் அன்றாடம் முகத்தில் பல கிரீம்களை உபயோகிக்கின்றனர். இது சிலருக்கு ஒத்துக்கொள்வதில்லை. இதனால் மிகவும் மெல்லிய தோலான கண்களுக்கு அடியில் கருமையாக மாறுகிறது.
  • அதிக நேரம் வெயிலில் அலைவதால் உடலில் மிகவும் மென்மையான தோலான கண்களுக்கு அடியில் உள்ள தோலும் பாதிப்படைகிறது. இதனால் கருவளையம் ஏற்படுகிறது.

இயற்கை முறையில் தீர்வு

  • வெயில் காலங்களில் கருவளையம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வாரம் ஒரு முறையாவது கண்ணை குளிர்ச்சிபடுத்தும் விதமாக கேரட் அல்லது வெள்ளரிப் பிஞ்சை மெல்லிதாய் நறுக்கி கண்ணின் மேல் வைத்தால் நலம் பயக்கும்.
  • உருளைக்கிழங்கை அரைத்து, கண்களைச்சுற்றி பூசி வந்தால், கருவளையம் மறையும்.
  • தக்காளி சாறு மற்றும் எலுமிச்சைச்சாறைக் கலந்து கருவளையத்தின் மீது பூசி வர வேண்டும். பூசிய 10-15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவி வந்தால், கருவளையம் நீங்கி அழகு பெறலாம்.
  • இரவில் கண்களைச் சுற்றி, பாதாம் எண்ணெய்ப் பூசிக்கொண்டு மறுநாள் காலையில் எழுந்தவுடன் குளிர்ந்த நீரினால் கண்களைக் கழுவி வந்தால், கரு வளையத்திலிருந்து விடுதலை பெறலாம்.
  • நல்ல தூக்கமும், கண்களுக்கு தேவையான அளவு ஓய்வும் கொடுத்தால், கருவளையத்திற்கு சீக்கிரமே விடை கொடுத்து அனுப்பிவிடலாம்.

Related posts

தெரிஞ்சிக்கங்க…பெண்கள் விரும்பும் 5 விதமான பிங்க் ஷேடட் லிப்ஸ்டிக்குகள்!!!

nathan

முகத்தில் எண்ணெய் அதிகம் வழிந்து கருமையாக காணப்படுகிறதா? அதைத் தடுக்க இதோ சில வழிகள்!

nathan

முகப்பரு வர காரணம் – தடுக்கும் வழிமுறைகள்

nathan

சருமத்திற்கு ஏற்ற ஃபேஸ் மாஸ்க்

nathan

மில்க் கிரீம் மூலம் நாம் நமது சருமத்தை ஜொலிக்கச் செய்யலாம். இதன் பயன்பாடு இயற்கையான பிரகாசத்தை அளிக்கிறது.

nathan

உங்கள் முகம் இயற்கையாகவே ஜொலிக்கனும் என்று ஆசைப்படுகிறீர்களா? அப்போ இத ப்லோ பண்ணுங்க!…

sangika

இதோ எளிய நிவாரணம்! சருமத்தை பாதுகாத்து ஈரப்பதத்துடன் வைக்க வேண்டுமா?

nathan

என்றும் நீங்க இளமையா இருக்கணுமா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

எளிமையான வழி…முகப்பருக்களை சரிசெய்ய…

nathan