29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
armpit mask 16
சரும பராமரிப்பு

பெண்களே அக்குள் கருப்பா இருக்கு-ன்னு ஃபீல் பண்றீங்களா? அப்போ இதை செய்யுங்கோ..!!

உங்கள் அக்குள் கருமையாக உள்ளதா? இதனால் உங்களால் கை இல்லாத உடையை அணிய வெட்கமாக உள்ளதா? பொதுவாக அக்குள் கருமையாவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அதில் ஒன்று நாம் பயன்படுத்தும் டியோடரண்ட்டுகள். சில டியோடரண்ட்டுகள் அக்குளை வெள்ளையாக்கும் என்று உறுதியளிப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். இருப்பினும், அக்குள் கருமையைப் போக்க முயற்சிக்கும் முன், முதலில் அக்குள் கருமையாவதற்கான காரணங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

ஒருவரது அக்குள் ஷேவிங் செய்வது, தொடர்ச்சியாக டியோடரண்ட்டுகளைப் பயன்படுத்துவது, பரம்பரை, அதிகமாக வியர்ப்பது, அடிக்கடி அக்குள் முடியை நீக்கும் க்ரீம்களைப் பயன்படுத்துவது, இறந்த செல்கள் மற்றும் உடல் பருமன் அல்லது சர்க்கரை நோய் போன்ற ஆரோக்கிய பிரச்சனைகள் ஆகியவற்றின் காரணமாக கருமையாகலாம். உங்களுக்கு மருத்துவ நிலைகளால் அக்குள் கருமையாகி இருந்தால், மருத்துவரை அணுகி அவர்களிடம் கேட்ட பின், இயற்கை வழிகளை முயற்சி செய்யுங்கள். கீழே அக்குள் கருமையைப் போக்க உதவும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

 

வழி #1

ஒரு பௌலில் 1/4 கப் சர்க்கரை, 1 டேபிள் ஸ்பூன் கல் உப்பு, 1 டேபிள் ஸ்பூன் தேன், 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் 3 துளிகள் எலுமிச்சை சாறு ஆகியவற்றை எடுத்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அக்குளில் நீரைத் தடவி, பின்பு தயாரித்து வைத்துள்ள கலவையை அக்குளில் தடவி மென்மையாக 3 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். அதன் பின் வெதுவெதுப்பான நீரால் அக்குளைக் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால், அக்குள் கருமை மறைந்துவிடும்.

வழி #2

உருளைக்கிழங்கு ஒரு இயற்கையான ப்ளீச்சிங் பண்புகள் கொண்ட அற்புதமான பொருள். அந்த உருளைக்கிழங்கை வெட்டி, அதன் ஒரு துண்டை எடுத்து, அக்குளில் தேய்த்து, 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இல்லாவிட்டால், உருளைக்கிழங்கை துருவி அல்லது சாறு எடுத்து, அவற்றை அக்குளில் தடவி ஊற வைக்கலாம். இப்படி தினமும் செய்து வர, ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

வழி #3

ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் அன்னாசி சாறுடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து, அந்த கலவையை அக்குளில் தடவி, 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்பு வெதுவெதுப்பான நீரால் அக்குள் பகுதியைக் கழுவ வேண்டும். இப்படி அடிக்கடி அக்குளில் இந்த கலவையைத் தடவி வந்தால், சீக்கிரம் அக்குள் கருமை மறைவதைக் காண்பீர்கள்.

வழி #4

ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் தயிர், 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அவற்றை நன்கு கலந்து, அவற்றை அக்குளில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அதன் பின் நீரால் அக்குளைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், அக்குளில் உள்ள கருமை காணாமல் போகும்.

வழி #5

தேங்காய் எண்ணெய் அக்குள் கருமையைப் போக்க வல்ல அற்புதமான பொருள். அதற்கு இந்த எண்ணெயை அக்குளில் தடவி 10-20 நிமிடம் மசாஜ் செய்து, பின் மைல்டு சோப்பு பயன்படுத்தி அக்குளைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் குளிக்கும் முன் செய்து வந்தால், டியோடரண்ட் போட வேண்டிய அவசியமே இருக்காது. அதோடு அக்குளும் வெள்ளையாகும்.

வழி #6

ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் 1/2 ஸ்பூன் ஆரஞ்சு தோல் பவுடர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அக்குள் பகுதியில் நீரைத் தடவி, தயாரித்து வைத்துள்ள கலவையை அக்குளில் தடவி 15 நிமிடம் ஊற வைக்கவும். அதன் பின் வெதுவெதுப்பான நீரால் அக்குளைக் கழுவ, ஒரு அற்புதமான மாற்றத்தை நீங்கள் காண்பீர்கள்.

வழி #7
வழி #7
ஒரு பௌலில் 2-3 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ், 2 டீஸ்பூன் தேன், ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், சில துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் சிறிது பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். அதன் பின் அந்த கலவையை கருமையான அக்குள் பகுதியில் தடவி 5 நிமிடம் ஸ்கரப் செய்து, பின் சில நிமிடங்கள் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் அக்குளைக் கழுவ வேண்டும். இப்படி ஒருநாள் விட்டு ஒரு நாள் செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

Related posts

ஆன்ட்டி ஏஜிங் அழகு சாதனங்கள்

nathan

உங்க கழுத்து கருப்பா இருக்கா? அதை நீக்க இதோ சில வழிகள்!

nathan

மருதாணியில் அழகும் ஆரோக்கியமும்

nathan

அழகுக்கலை வல்லுனர்களால் மட்டுமே சில விஷயங்களை சிறப்பாக செய்ய முடியும்

nathan

உங்கள் தோல் பளபளப்பாக இருக்க வேண்டுமா?

nathan

அக்குளில் இருக்கும் கருப்பைப் போக்குவதற்கான சில எளிய வழிகள்!!!

nathan

கலாக்காய் பயன்படுத்துவதால் சருமம் மற்றும் கூந்தலுக்கு கிடைக்கும் நன்மைகள்!….

sangika

ஒரே வாரத்தில் முகத்தில் உள்ள சுருக்கங்கள் எல்லாம் காணாமல் போய் விடும்!…அற்புதமான எளிய தீர்வு

nathan

சரும பராமரிப்பில் விளக்கெண்ணை

nathan