25.3 C
Chennai
Sunday, Dec 29, 2024
hair fall5
அழகு குறிப்புகள்

தெரிஞ்சிக்கங்க…முடி பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வை தர ஒரே எண்ணெய்!…

மக்கள் தொகை பெருக்கத்தால் சுற்றுசூழலில் அதிக மாசுபாடு ஏற்பட்டுள்ளது. அதிக படியான மாசுக்கள் தான் முடியின் பாதிப்பிற்கு முக்கிய காரணமே. முடி உதிர்வு, வழுக்கை, பொடுகு, வெள்ளை முடி, அதிக அழுக்கு சேர்த்தல்… இப்படி எண்ணற்ற பிரச்சினைகள் சுற்று சூழலில் உள்ள மாசுபாடுகளால் உருவாகிறது.

நாளுக்கு நாள் இந்த பாதிப்புகள் அதிகமாகிறதே தவிர, குறைந்த பாடில்லை. இதனை தடுக்க என்னதான் தலைக்கு குளித்தாலும் மீண்டும் மீண்டும் அழுக்குகள் சேர்ந்து, முடி கொட்ட தொடங்கும். இதை போலவே தண்ணீராலும் அதிக பாதிப்புகள் முடிக்கு ஏற்படுகிறது.

இந்த பிரச்சினைகளில் இருந்து உங்களை காக்க வெங்காயம் ஒன்றே போதும். வழுக்கை முதல் முடி கொட்டும் பிரச்சினை வரை எளிதில் தீர்வு கொண்டு வர முடியும். இனி இதை தயாரித்து, பயன்படுத்துவது என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

 

 

வெங்காய எண்ணெய்

பல்வேறு எண்ணெய் வகைகள் உள்ளன. அவற்றில் சில தலை முடியின் ஆரோக்கியத்திற்கு உதவும், சில சமையல் எண்ணெய்யாக பயன்படும். அந்த வகையில் முடி பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வை தர ஒரே எண்ணெய் போதும். இதற்கு மூல காரணம் இதன் தன்மை தான்.

ஊட்டச்சத்துக்கள்

தலை முடி பிரச்சினைகளை தடுக்க வேண்டுமென்றால் அதற்கு மிக சிறந்த எண்ணெய் அவசியம் தேவை. இதை தேர்வு செய்ய அதில் உள்ள ஊட்டச்சத்துக்களே போதும்.

வெங்காய எண்ணெய்யில் வைட்டமின் சி, எ, ஈ, பி போன்றவை நிறைந்துள்ளன. அத்துடன் இது சிறந்த நிருமி நாசினியாகவும் செயல்படும்.

முடி கொட்டுதல்

வெங்காய எண்ணெய்யை பயன்படுத்தினால் தலை முடி உதிர்வை தடுத்து விடலாம். இதற்கு வாரத்திற்கு 2 முறை வெங்காய எண்ணெய்யை பயன்படுத்தி தலைக்கு குளித்து வந்தாலே போதும். இது நேரடியாக முடியின் வேரை குணப்படுத்தி முடி உதிர்வை தடுக்கும்.

பொடுகு தொல்லை

பொதுவாக முடி கொட்டுகிறதென்றால் அதற்கு மூல காரணமாக இருப்பது பொடுகு தான். தலையில் உள்ள பொடுகை போக்க மிக சிறந்த வழி வெங்காய எண்ணெய் தான். வெங்காய எண்ணெய்யை தலைக்கு தடவி வந்தால் பொடுகு தொல்லையில் இருந்து விடுபட்டு விடலாம்.

முடியின் அடர்த்தி

முடி கொத்து கொத்தாக கொட்டி முடியின் அடர்த்தி குறைந்து விட்டதா? இனி இந்த கவலையை விட்டு தள்ளுங்க. வெங்காய எண்ணெய்யை தலைக்கு தடவி வந்தால் மிக எளிதாக முடியின் அடர்த்தியை அதிகரித்து விடலாம். அத்துடன் முடியின் நீளமும் அதிகரிக்கும்.

வெள்ளை முடி

வெங்காய எண்ணெய்யை தலைக்கு நன்றாக மசாஜ் செய்து தலைக்கு குளித்தால் வெள்ளை முடி பிரச்சினை குறையும். வெள்ளை முடியை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க இந்த வெங்காய எண்ணெய் உதவுகிறது. அத்துடன் பேன் தொல்லையும் நீங்கி விடும்.

தேவையான பொருட்கள்

இந்த வெங்காய எண்ணெய்யை வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே தயார் செய்யலாம்.

தேங்காய் எண்ணெய் 250 மி.லி.
வெங்காயம் 3
கருவேப்பில்லை 1 கப்
ஆமணக்கு எண்ணெய்
ஆலிவ் எண்ணெய்

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெயை ஊற்றி மிதமான சூட்டில் கொதிக்க விடவும். எண்ணெய் காய்ந்த பின் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கொண்டு வதக்கவும். பின் இவற்றுடன் கருவேப்பில்லை இலைகளையும் சேர்த்து வதக்கவும்.

10 நிமிடம் கழித்து இவற்றுடன் சிறிது ஆமணக்கு எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கி கொள்ள வேண்டும். பிறகு இதனை ஆறவிட்டு வடிக்கட்டி கொண்டு தலைக்கு பயன்படுத்தலாம். வாரத்திற்கு 2-3 முறை இந்த எண்ணெய்யை பயன்படுத்தி தலைக்கு குளித்து வந்தால் நல்ல பலனை அடையாளம்.

Related posts

உங்களுக்கு தெரியுமா செவ்வாழையில் உள்ள சத்துக்கள் என்ன?

nathan

சூப்பர் டிப்ஸ்..பொலிவான சருமத்திற்கு தர்பூசணி

nathan

அழகு நிலையத்திற்கு அலையணுமா

nathan

தங்கை மோனலை குறித்து சிம்ரன் உருக்கமான பதிவு – ரசிகர்கள் சோகம்

nathan

அழகை பாதுகாக்கும் சித்த மருத்துவ குறிப்புகளை பார்க்கலாம்….

nathan

கடலில் புதைந்துள்ள திமிங்கலத்தை அற்புதமாக படம்பிடித்த கலைஞர்

nathan

அழகுக் கட்டுரைகள் – அழகு உள்ளப் பயிற்சி & உடற்பயிற்சி & அழகு ஒப்பனை முறைகள்

nathan

அனிதாவின் வைரல் வீடியோ! பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்படாத காட்சிகள்:

nathan

தோல் அரிக்க அரிக்க, நாம் நம்மை அறியாமல் தொடர்ந்து சொரியத் துவங்குவோம்

nathan