29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
தலைமுடி சிகிச்சை

பெண்களே தெரிஞ்சிக்கங்க… தலைமுடியை தினமும் கழுவலாமா?

தினமும் தலைமுடியை கழுவினால் பக்க விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று ஒரு ஆய்வு முடிவு எச்சரிக்கிறது. சருமத்தைப்போலவே தலை முடியும் மென்மையான உணர் திறன் கொண்டது. அதனை அளவுக்கு அதிகமாக கழுவினால் அதன் ஆரோக்கியம் பாதிப்புக்குள்ளாகும். சுற்றுச்சூழல் மாசு, தூசு போன்றவை கூந்தலை நேரடியாக பாதிக்கும். உலர்தன்மை கொண்டதாகவும் மாற்றிவிடும்.

தினமும் தலைமுடியை கழுவுவது அதன் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கருதி, பெண்கள் பலரும் தலைமுடியை கழுவும் பழக்கத்தை பின்பற்றுகிறார்கள். அத்துடன் ஷாம்பு பயன்படுத்துவது உச்சந்தலை சுகாதாரத்தை பராமரிக்க ஏதுவாக அமைந்திருப்பதாக கருதுகிறார்கள். ஆனால் தினமும் ஷாம்பு பயன்படுத்துவது கூந்தல் ஆரோக்கியத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தக்கூடும். தினமும் கூந்தலை கழுவுவது சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும் என்று கருதலாம். ஆனால் பெண்களை பொறுத்தவரை அது ஏற்புடையதல்ல. கூந்தலுக்கு கெடுதலே நேரும். தலைமுடியை அடிக்கடி கழுவுவது முடியின் இயற்கையான அமைப்பையும், பளபளப்பையும் பாதிக்கும். முடியும் பொலிவிழந்து மந்தமாகிவிடும்.

குறிப்பாக உலர்ந்த கூந்தல் முடி கொண்டவர்கள் தினமும் தலைமுடியை கழுவ தேவையில்லை. அவ்வாறு செய்வது தலைமுடி வறண்டு, வெளிர்தன்மை அடைந்து சேதமடைய வாய்ப்பிருக்கிறது. அத்துடன் தலைமுடியில் சிக்கலும் ஏற்படக்கூடும். அதனை அகற்றுவதற்கு கடினமாக இருக்கும். தலை முடியை சீப்பு கொண்டு சீவும்போது முடி உதிர்வு பிரச்சினையும் உண்டாகும்.

தலைமுடியை கழுவுவது உச்சந்தலை ஆரோக்கியத்தை பேண உதவும். தலை முடி உதிர்வு, அரிப்பு பிரச்சினையை தடுக்கும். ஆனால் இதை அடிக்கடி செய்துவந்தால் உச்சந்தலையில் ஈரப் பதம் இல்லாத நிலை ஏற்படும். தலைமுடிக்கு ஷாம்பு பயன்படுத்துவது பொடுகு பிரச்சினைக்கு நிவாரணம் தரும். அதற்காக தலைமுடியை அளவுக்கு அதிகமாக ஷாம்பு கொண்டு கழுவக்கூடாது. அடிக்கடி கழுவுவதால் பொடுகு பலவீனமடைந்தாலும், தலைமுடி மெல்லியதாக மாறக்கூடும். முடி உடைந்து போகும் வாய்ப்பும் அதிகம். தலைமுடியை சீவும்போது சீப்பில் முடிகள் படிந்தால் முடி உதிர்வு பிரச்சினையை எதிர்கொள்வதை உணரலாம்.

ஈரமான தலைமுடியில் சீப்பு பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் கூந்தல் முடி சேதம் அடைவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. எந்த அளவுக்கு அதிகமாக தலைமுடியை கழுவுகிறீர்களோ, அந்தளவுக்கு முடி உடைந்து சேதமடையும். எனவே தலைமுடியின் ஆரோக்கியத்தை பேணுவதற்கு அடிக்கடி கழுவுவதை தவிருங்கள்.

Related posts

முடிகளை கருமை நிறமாக மாற்ற உதவும் எளிய டிப்ஸ்!

nathan

பளபளப்பான மற்றும் அடர்த்தியான தலைமுடியை பெற சூப்பர் டிப்ஸ்

nathan

பொடுகு பிரச்சனையால் றொம்ப அவதி படுகிறீங்களா;அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

எவ்வளவு தான் தலைக்கு குளித்தாலும் முடி எண்ணெய் பசையாக இருக்கா..? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

பொடுகை அகற்ற

nathan

பேன்களை போக்கும் வீட்டு சிகிச்சை -பெண்களே தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

பட்டுப்போன்ற கூந்தலுக்கு…

nathan

பட்டுப் போன்ற முடி வேண்டுமா.. பளபளப்பான சருமம் வேண்டுமா?ஒரு வாழைப்பழம் போதும்

nathan

நீங்கள் எந்த வயதிலும் கூந்தல் அழகியாக ஜொலிக்க சூப்பர் டிப்ஸ்..

nathan