மாலையில் காபி அல்லது டீ குடிக்கும் போது, ஏதேனும் சாப்பிட தோன்றுகிறதா? அப்படியானால் ஜவ்வரிசி வடை செய்து சாப்பிடுங்கள். இது மிகவும் அருமையான சுவையில் இருப்பதுடன், செய்வதற்கு ஈஸியாகவும் இருக்கும். மேலும் குழந்தைகள் இதை விரும்பி சாப்பிடுவார்கள்.
சரி, இப்போது அந்த ஜவ்வரிசி வடையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
Spicy Sabudana Vada Recipe
தேவையான பொருட்கள்:
ஜவ்வரிசி – 1 1/2 கப் (3-4 மணிநேரம் நீரில் ஊற வைத்தது)
அரிசி மாவு – 1 டீஸ்பூன்
பிரட் – 2 துண்டுகள் (பொடி செய்தது)
பெரிய உருளைக்கிழங்கு – 1 (வேக வைத்து தோலுரித்து மசித்தது)
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
உப்பு – தேவையன அளவு
பச்சை மிளகாய் – 2-3 (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி – சிறிது (பொடியாக நறுக்கியது)
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
கரம் மசாலா – 1 சிட்டிகை
செய்முறை:
முதலில் ஒரு பௌலில் எண்ணெயைத் தவிர, மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் போட்டு பிரட்டி, 15 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.
பின்னர் அதனை சிறு உருண்டைகளாக பிடித்து, தட்டையாக தட்ட வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தட்டி வைத்துள்ளதை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், ஜவ்வரிசி வடை ரெடி!!!