29.6 C
Chennai
Thursday, Mar 12, 2026
Foxtail Millet rava dosa SECVPF
சிற்றுண்டி வகைகள்

சுவையான பாலக்கீரை ரவா தோசை

பாலக்கீரை நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இரத்ததில் உள்ள சர்க்கரையின் அளவை நிலையாக வைத்திருக்க இந்த கீரை உதவுகிறது.

தேவையான பொருட்கள்

  1. பாலக்கீரை – 1 கப்
  2. தோசை மாவு – 1 கப்
  3. வெங்காயம் – 2
  4. ரவை – அரை கப்
  5. இஞ்சி – 1 அங்குல துண்டு
  6. பச்சை மிளகாய் – 2
  7. உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை  

வெங்காயம், பாலக்கீரையை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தோசை மாவை போட்டு அதனுடன், ரவை, உப்பு சேர்த்து நன்றாக கரைத்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.

மிச்சியில் பாலக்கீரை, இஞ்சி, ப.மிளகாய் சேர்த்து விழுது போல் அரைத்து மாவில் கலந்து கொள்ளவும்.

தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் முதலில் வெங்காயத்தை பரப்பியபடி கல்லில் போட்டு மாவை சுற்றி ஊற்ற வேண்டும்.

பின்னர் சுற்றி எண்ணெய் ஊற்றவும். வெந்ததும் திருப்பி போட்டு எடுத்து பரிமாறவும். சூப்பரான பாலக்கீரை ரவா தோசை ரெடி.

Related posts

சுவையான சத்தான பாசிப்பயிறு இட்லி

nathan

மினி வெஜ் ஊத்தப்பம்

nathan

சூப்பரான காளான் பஜ்ஜி

nathan

வெந்தய களி

nathan

ராஜஸ்தான் ஸ்பெஷல் தால் டோக்ளி

nathan

சுவையான தட்டு வடை

nathan

சத்து நிறைந்த மணத்தக்காளிக்கீரைத் துவையல்

nathan

சுவையான… ஆலு ஸ்டஃப்டு கேப்சிகம்

nathan

ஃபிஷ் ரோல்

nathan