28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
ஃபேஷன்அலங்காரம்

அழகுக்கு அழகு சேர்க்கும் ஆடை அலங்காரம்

images (11)வீட்டில் அணியும் உடைகள்:

பெண்கள் வீட்டில் இருக்கும் போது உடை அணியும் விஷயத்தில் அக்கறை செலுத்த வேண்டியது இல்லை என சில பெண்கள் நினைக்கிறார்கள். இது தவறான மனோபாவமாகும். வீட்டில் இருப்பவர்கள் நம்மை சார்ந்தவர்களாகவே இருப்பினும் வீட்டுச் சூழ்நிலைக்கு ஏற்ப உடை அணிவது வீட்டில் உள்ள ஆண்களுக்கு நிறைவாக இருக்கும். வீட்டில் இருக்கும் போது பகட்டாக உடை அணிவது தேவையில்லை என்றாலும் வீட்டிற்கு ஏற்ற மாதிரி பாந்தமாக உடை அணிவது அவசியமே.

அதிக உடையும் குறைந்த உடையும்:

பெண்கள் பொதி சுமப்பது போல உடல் முழுவதும் சுற்றிய நிலையில் அதிகமான அளவில் உடை அணிவது அழகைக் கெடுக்கும். அதற்காக அங்கங்கள் தெரியும் அளவுக்கு மிகவும் குறைவான ஆடைகளை அணியக் கூடாது.

கடைத் தெருவுக்குப் போகும்போது:

கடைத்தெரு, மார்க்கெட் போன்ற இடங்களுக்குச் செல்லும் போது இலேசான நிறம் அமைந்த புடவைகள் அல்லது மெல்லிய பூக்கள் போட்ட புடவை அணிந்து செல்வது சுழ்நிலைக்கு ஏற்ப பாந்தமாக இருக்க வேண்டும்.

புடவைக்குப் பொருத்தமான சோளிகள்:

பெண்கள் அணியக்கூடிய சோளிகளின் கைகளிலும், கழுத்திலும் லேஸ்களை வைத்துத் தைத்துக் கொண்டால் அவை என்ன வண்ணத்தில் புடவை அணிந்தாலும் அதற்கு பொருத்தமாக இருக்கும்.

அலுவலகம் செல்லும் பெண்களுக்கான ஆடை:

அலுவலங்களுக்கோ, பள்ளி, கல்லூரிகளுக்கோ செல்லும் பெண்கள் மிகவும் பகட்டாகவும் கண்களைப் பறிக்கும் விதத்தில் ஆடை அணிவதை தவிர்க்க வேண்டும். ஆனால் ஒரேடியாக மோசமான ஆடைகளைத்தான் அணிய வேண்டும் என கருதிவிடக்கூடாது. கண்ணியமான தோற்றத்தை அளிக்கக்கூடிய சூழ்நிலைக்கு ஏற்ற உடையை அணிந்து செல்வது மிகவும் அவசியம்.

ஒல்லியான பெண்களுக்கான உடைகள்:

மிகவும் ஒல்லியாக தோற்றமளிக்கும் பெண்கள் இறுக்கமாக உடை அணியக் கூடாது. சோளியின் கைகள்கூட மிகவும் பிடிப்பாக இல்லாமல் சற்று தளர்த்தியாக இருப்பது நல்லது.

புடவையின் அமைப்பும் உருவத்தோற்றமும்:

பெண்கள் அணியும், அணியக்கூடிய புடவையின் அமைப்பே அவர்களின் தோற்றத்தையே மாற்றியமைக்கூடிய தன்மையுடன் திகழ்கின்றது. புடவையில் உள்ள டிசைன் வெறும் அழகிற்காக மட்டுமே அமைந்திருப்பதாகக் கருதிவிடக்கூடாது. திட்டமிட்டு புடவையைத் தேர்ந்தெடுத்து உடுத்தினால் பெண்களின் உருவ அமைப்பையே புரட்சிகரமாக மாற்றிவிடக்கூடும்.

உதாரணமாக பெண்கள் அணியக்கூடிய புடவையில் அமைந்த கோடுகள் குறுக்குவாட்டில் அமைந்தால் உயரமான பெண்கள் குள்ளமாக இருப்பது போன்ற பிரமை பார்பவர்களுக்கு தோன்றும். புடவையில் அமைந்த கோடுகள் நேர்வாக்கில் அமைந்தால் குள்ளமானவர்கள் சற்று உயராமாக இருப்பது போல காட்சி தருவார்கள்.

கடற்கரை போன்ற இடங்களுக்கு சென்றால்:

கடற்கரை போன்ற பொது இடங்களுக்கு குடும்பத்துடன் செல்லும் போது மிகவும் நெருக்கமாக கட்டம் போடப்பட்ட மிகவும் அழுத்தமான சாயம் கொண்ட கைத்தறி சேலைகளை உடுத்திச் சென்றால் பாந்தமாக இருக்கும்.

Related posts

நவீன யுவதியர்களுக்கு புதிய டெனிம் பேண்ட்கள்

nathan

இந்தியாவின் ஃபேஷன் ராணி!

nathan

அசர வைக்கும் அணிகலன்கள்

nathan

மணப்பெண்க்கு டிப்ஸ்

nathan

பல விதமான வடிவமைப்பில் உலாவரும் ஹேண்ட்பேக்

nathan

பழைய புடவைகளை மாற்றி புதிதாக அழகாக பயன்படுத்தலாம்

nathan

கண்களை அலங்கரிங்கள்

nathan

அன்பையும் காதலையும் வெளிப்படுத்த அழகான வார்த்தைகள்

sangika

மருதாணி அதிகம் சிவப்பாக பிடிக்க சூப்பர் டிப்ஸ்….

nathan