25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
5 15167
முகப் பராமரிப்பு

கொஞ்சம் தடவினாலே கருவளையம் காணாமல் போகும் தெரியுமா?

முகம் பார்ப்பதற்கு எவ்வளவு தான் அழகாக இருந்தாலும் கூட கண்களுக்கு கீழே உள்ள கருவளையங்கள் உங்களது முகத்தின் அழகை குறைத்து காட்டிவிடும்.. கண்களுக்கு கீழே உள்ள கருவளையங்கள் உங்களது முகத்தை மிகவும் சோர்வாக காட்டும்..

கண்களுக்கு கீழே கருவளையங்கள் வர ஊட்டச்சத்து குறைபாடு ஒரு முக்கிய காரணமாக உள்ளது.. கருவளையங்கள் நீங்கள் ஊட்டச்சத்து மிகுதியாக உள்ள உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியமாகும்.

ஓய்வு அவசியம்

அளவுக்கதிகமாக டி.வி பார்ப்பது, புத்தகம் படிப்பது, கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பது, இரவு ஷிஃப்ட் என்கிற பெயரில் தூக்க முறையையே மாற்றிக் கொள்வது போன்றவை கருவளையங்களுக்கு முக்கிய காரணங்கள். எப்போதுமே, அது பகலோ, இரவோ… தூங்கி எழுந்த பிறகு பார்த்தால் எல்லோருடைய முகமுமே அழகாக இருப்பதை உணரலாம். தூக்கத்தின் போதுதான் உறுப்புகள் ஓய்வெடுப்பதுடன், ரத்த ஓட்டமும் சீராக இருக்கும். மேலே சொன்ன விஷயங்களால் ரத்த ஓட்டம் தடைப்படும். ரத்தக் குழாய்கள் சுருங்கும். அதன் வெளிப்பாடு முடி உதிர்வாகவோ, கண்களுக்கடியிலான கரு வளையங்களாகவோ தெரியும்.

ஊட்டச்சத்து

ஆரோக்கியம் என நினைத்துக் கொண்டு, வெறுமனே ஓட்ஸாகவோ, கார்ன்ஃப்ளேக்ஸாகவோ சாப்பிடுகிறார்கள். குறிப்பிட்ட ஒரு உணவையே தொடர்ந்து சாப்பிடு கிற போது, உடலுக்குத் தேவையான எல்லா சத்துகளும் கிடைப்பதில்லை. சருமமோ, கூந்தலோ ஆரோக்கியமாக இருக்க, எல்லா சத்துகளும் அவசியம். முந்தைய காலங்களில் கருவளையப் பிரச்னைகளைப் பற்றியெல்லாம் யாரும் கேள்வியே பட்டிருக்க மாட்டார்கள். காரணம், அவர்களது சரிவிகித, சத்தான சாப்பாடு தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு அல்லது வெள்ளரியில் உள்ள ஸ்டார்ச் கருவளையங்களுக்கு மிக நல்ல மருந்து. அவற்றை நறுக்கிய உடனேயே கண்களின் மேல் வைத்துக் கொண்டால்தான் பலன்.

டீ பைகள்

உபயோகித்த டீ பைகளை கண்களின் மேல் வைப்பது முழுமையான பலன் தராது. திக்கான டீ டிகாக்ஷனை எடுத்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். அதில் பேப்பர் மாதிரி மெலிதாக வெட்டிய பஞ்சை நனைத்து கண்களின் மேல் வைத்துக்கொண்டு 5 முதல் 7 நிமிடங்கள் ஓய்வெடுக்கவும். கிரீன் டீயாக இருந்தால் இன்னும் சிறப்பு.

கார்போக அரிசி

கார்போக அரிசி, கருஞ்சீரகத்தை தலா 2 டீஸ்பூன் எடுத்து அரை டம்ளர் தண்ணீரில் நன்கு வேக வைக்கவும். அது ஆறியதும் அதில் 10 மி.லி. சுத்தமான பன்னீர் கலந்து, அப்படியே 3 மணி நேரம் வைக்கவும். பிறகு வடிகட்டி. பஞ்சில் நனைத்து கண்களின் மேல் வைக்கவும். உடனடியாக ஒரு போட்டோ செஷனுக்கு தயாராக வேண்டும், வெளியே பார்ட்டிக்கு போக வேண்டும், கருவளையங்கள் தெரியக்கூடாது என நினைக்கும் போது இந்த சிகிச்சை இன்ஸ்டன்ட் பலன் தரும்.

சாமந்திப்பூ

2 கைப்பிடி சாமந்திப்பூவின் இதழ்களை மட்டும் எடுத்துக் கொள்ளவும். 100 மி.லி. தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து, அதில் இந்தப் பூக்களைப் போட்டு, உடனே மூடி வைக்கவும். 24 மணி நேரம் அப்படியே ஊறட்டும். பிறகு அந்தத் தண்ணீரை ஃப்ரிட்ஜில் வைத்துக்கொண்டு, அவ்வப்போது பஞ்சில் நனைத்து கண்களின் மேல் வைத்துக் கொள்ளலாம். இது முகத்தில் உள்ள கரும்புள்ளிகளைக் கூட விரட்டும். அதிக எண்ணெய் பசையை நீக்கும்.

தாமரை இதழ்கள்

பிங்க் நிற தாமரைப்பூ இதழ்களை மிக்சியில் தண்ணீர் விடாமல் அரைக்கவும். அதில் 10 மி.லி. விளக்கெண்ணெயும், 10 மி.லி. தேனும் கலந்து 7 மணி நேரம் வெளியே வைக்கவும். பிறகு ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டு, கண்களைச் சுற்றி பேக் போலத் தடவி, 1 மணி நேரம் கழித்துக் கழுவவும்.

முள்ளங்கி சாறு

முள்ளங்கிச் சாறு, கேரட் சாறு, பீட்ரூட் சாறு (தண்ணீர் விடாமல் அரைத்துப் பிழிந்தது) இந்த மூன்றையும் கலந்து, 5 மி.லி. கிளிசரினும் 5 மி.லி. எலுமிச்சைச் சாறும் சேர்த்து ஃப்ரிட்ஜில் வைத்து தேவைப்படும் போது பஞ்சில் நனைத்துக் கண்களின் மேல் வைத்துக் கொள்ளலாம்.

பாதாம்

பாதாமை பொடி செய்து, அதில் சிறிது பால் சேர்த்து பேஸ்ட் செய்து கண்களைச் சுற்றி தடவி 10 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனாலும் கருவளையங்கள் மறையும்.

வெள்ளரிக்காய்

இது அனைவருக்குமே தெரிந்த செயல் தான். அது வேறொன்றும் இல்லை வெள்ளரிக்காய் துண்டுகளை கண்களின் மேல் வைத்து 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

எலுமிச்சை சாறு

1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறுடன், 1 டீஸ்பூன் தக்காளி சாறு மற்றும் 1 டீஸ்பூன் மைசூர் பருப்பு மாவு சேர்த்து பேஸ்ட் செய்து, கண்களைச் சுற்றி தடவி 15 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

மஞ்சள் தூள்

2 டீஸ்பூன் மஞ்சள் தூளில் சிறிது கரும்புச்சாறு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து 5 நிமிடம் ஊற வைத்து, பின் கண்களைச் சுற்றி தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனாலும் கருவளையங்களைப் போக்கலாம்.

புதினா

புதினா இலைகளை அரைத்து, அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, கண்களைச் சுற்றி தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இதன் மூலமும் கருவளையங்கள் நீங்கும்.

Related posts

உங்களுக்கு மூக்கில் முள் போன்று உள்ளதா?இதை முயன்று பாருங்கள்..

nathan

முகம் ஹீரோயின் மாதிரி ஜொலிக்குமாம்!தக்காளியை இந்த 6 பொருட்களோடு சேர்த்து யூஸ் பண்ணுனீங்கனா…

nathan

உங்கள் முகத்தில் வைக்கக் கூடாத 11 விஷயங்கள்

nathan

உங்க முகத்தில் அசிங்கமாக மேடு பள்ளங்கள் உள்ளதா? அப்ப இத படியுங்க…………

nathan

முகத்தில் எண்ணெய் வடியுதா? இந்த ஃபேஸியல் செய்யலாம். !

nathan

வெயிலில் சரும நிறத்தை பாதுகாக்கும் ஸ்ட்ராபெர்ரி ஃபேஸ் பேக்

nathan

எந்த பழம் எந்த சரும பிரச்சனைக்கு மருந்தாகிறது தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

முகத்தில் உள்ள கருமையான படலத்தை ரோஸ் வாட்டரைக் கொண்டு நீக்குவது எப்படி?

nathan

கோல்டன் பேஷியல் செய்வது எப்படி

nathan