4 15
முகப் பராமரிப்பு

கண்ணுக்கு கீழ் உள்ள கருவளையங்கள் உடனே மறைய

ரோஜா நீரில் காணப்படும் ஆன்டி- பாக்டீரியல் மற்றும் அதன் நன்மைகள் பல நிறைந்துள்ளது. இது தூசு, மாசு, கண் சிவத்தல், கண் அழற்சி, மேக் அப் மற்றும் அழகு சாதன பொருட்களினால் ஏற்படும் தீங்கில் இருந்து கண்களை பாதுகாக்கிறது.

மேலும், சிறிதளவு பஞ்சு எடுத்து அதில் ரோஸ் வாட்டரை நன்றாக நனைத்து அதனை கண்களில் மேல் 15 நிமிடம் வைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் கண்களுக்கு ஏற்படும் சோர்வு நீங்கும்.

இதன் பின்னர், கணினி மற்றும் தொலைக்காட்சி முன்னால் அதிக நேரம் வேலை செய்பவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் சோர்வை போக்கும் வல்லமை பெற்றது ரோஸ் வாட்டர். இதற்கு சிறிதளவு தண்ணீரில் சில துளிகள் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து அதில் பஞ்சை நன்றாக நனைத்து கண்களை துடைக்கவும். ஓய்வாக படுத்துக்கொண்டு கண்களில் 2 முதல் 3 துளிகள் ரோஸ் வாட்டரை கண்ணில் விட்டு 10 நிமிடம் கண்களை திறக்காமல் அப்படியே படுத்திருக்கவும்.

இப்படி செய்வதால் கண்களில் கூடுதல் அழுக்குகள் சேராமல் தடுப்பதோடு கண்களுக்கு தேவையான ஓய்வினையும் தருகிறது. ரோஸ் வாட்டரில் பஞ்சினை நன்றாக நனைத்து அதனை கண்களில் மேல் போட்டு 10 நிமிடம் கழித்து எடுத்து விடவும். இவ்வாறு 3 முதல் 4 வாரங்கள் தொடர்ந்து செய்து வந்தால் கண்களில் கீழ் உள்ள கருவளையம் படிப்படியாக மறையும்.

அதிகப்படியான பணிகளுக்கு பிறகு கண்களுக்கு ஓய்வு தேவைப்படுகிறது. ரோஜா இதழ்களின் மணம் ஒரு இனிமையான விளைவை கொண்டுள்ளது. இது நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தும் என்று ஆய்வு கண்டறியப்பட்டுள்ளது.

பரபரப்பான பணிகளுக்கு இடையில் ரோஸ் வாட்டரில் சுத்தமான காட்டனை நனைத்து கண்களின் மீது வைத்து சில நிமிடங்கள் கண்களை முடியபடி இருந்தாலே கண்களுக்கு வேண்டிய ரிலாக்ஸ் கிடைத்துவிடும்.

Related posts

சூப்பர் டிப்ஸ்! முகப்பரு வர ஆரம்பிச்சுடுச்சா? உடனே சமையலறைக்கு போங்க…

nathan

முகப்பருவிற்கு நல்ல தீர்வை வழங்கும் யுனானி மருத்துவம் !….

sangika

சரும ஆரோக்கியம் மற்றும் சருமப் பொலிவுக்கு குங்குமப் பூ!….

sangika

முகம் கருப்பாக இருந்தால் வீட்டில் இருந்தே வெள்ளையாக இயற்கை வழியில் சில பியூட்டி டிப்ஸ்.!

nathan

மூக்கின் மேல் இருக்கும் கரும்புள்ளிகளைப் போக்க உதவும் ஓர் அற்புத வழி!

nathan

அத்திப்பழத்தை வைத்து எல்லா முக பிரச்சினைகளையும் சரி செய்ய இத படிங்க!…

sangika

பெண்களே உங்க கன்னங்கள் அழகாக ஜொலிக்க இத ட்ரை பண்ணுங்க

nathan

வீட்டில் செய்யக்கூடிய டான் சருமத்திற்கான‌ 2 எளிய ஃபேஸ் பேக்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…இரவு தூங்குவதற்கு முன்னால் உங்க முகத்தை கழுவினால் என்ன அற்புதம் நடக்கும் தெரியுமா?

nathan