25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
skinpores 15
முகப் பராமரிப்பு

என்ன செஞ்சாலும் முகத்தில் இருக்கும் குழிகள் மறைய மாட்டீங்குதா?

அனைவருக்குமே நல்ல பட்டுப்போன்ற மென்மையான சருமம் வேண்டுமென்ற விருப்பம் இருக்கும். ஆனால் அந்த பாக்கியம் ஒருசிலருக்கே கிடைக்கிறது. உடலினுள் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் சரும பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இதைத் தவிர்க்கவும் முடியாது. அப்படி பலர் தீர்வு எதுவும் கிடைக்காதா என்று தவிக்கும் ஓர் சரும பிரச்சனை தான் முகத்தில் குழிகள் காணப்படுவது. இது திறந்த சருமத் துளைகள் மூடாமல் இருப்பதால் உண்டாவதாகும்.

பொதுவாக இம்மாதிரியான பிரச்சனையைக் கொண்டவர்கள் அதை மறைக்க மேக்கப் போடுவார்கள். மேக்கப் என்பது தற்காலிகமாக அழகை வெளிக்காட்ட உதவும் ஒன்று. எப்போதும் ஒரு பிரச்சனைக்கு தற்காலிக தீர்வைக் காண்பதை விட, அதை எப்படி முழுமையாக சரிசெய்யலாம் என்று யோசிக்க வேண்டும். இந்த கட்டுரையில் நாம் பார்க்கப் போவது முகத்தில் அசிங்கமாக காணப்படும் குழிகளை மறைக்க உதவும் சில இயற்கை வழிகளைப் பற்றி தான். வாருங்கள் பார்ப்போம்.

கற்றாழை

கற்றாழை ஜெல்லை தினமும் முகத்தில் தடவி மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், திறந்துள்ள சருமத் துளைகள் சுருங்க ஆரம்பித்து, நாளடைவில் முகத்தில் உள்ள குழிகள் தானாக மறைந்துவிடும்.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகரை சரியான வழியில் பயன்படுத்துவதன் மூலம் சருமத் துளைகளை சுருக்க முடியும். 1 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை 1 டீஸ்பூன் நீரில் கலந்து, காட்டன் பயன்படுத்தி முகத்தில் தடவி உலர வைக்க வேண்டும். இப்படி தினமும் இரவு படுக்கும் முன் முகத்தில் தடவுங்கள்.

முட்டை வெள்ளைக்கரு

முட்டையின் வெள்ளைக்கரு சருமத்தை இறுக்க உதவுவதோடு, சருமத்தின் நெகிழ்வுத்தன்மையையும் அதிகரிக்கும். அதற்கு ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை ஒரு பௌலில் எடுத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்கு பேஸ்ட்செய்து கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

பப்பாளி

நன்கு கனிந்த பப்பாளியை மசித்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இச்செயலால் பப்பாளியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பாப்பைன் என்னும் நொதி, திறந்துள்ள சருமத் துளைகளை மூட உதவி புரியும்.

வாழைப்பழம்

நன்கு கனிந்த வாழைப்பழத் தோலின் உட்பகுதியால் முகத்தை மென்மையாக தேய்க்க வேண்டும். 10-15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி ஒருநாள் விட்டு ஒரு நாள் செய்தால், வாழைப்பழத் தோலில் உள்ள லுடீன் மற்றும் பொட்டாசியம், சருமத் துளைகளை இறுக்கமடையச் செய்வதோடு, சருமத்திற்கு புத்துணர்ச்சியளிக்கும்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து உள்ளதால், இது சருமத்தை வறட்சி அடையாமல் தடுக்க உதவுவதோடு, இறுக்கமடையச் செய்யும். முக்கியமாக இது திறந்துள்ள சருமத் துளைகளை மூட உதவி புரியும். அதற்கு சிறிது வெள்ளரிக்காய் துண்டுகளை அரைத்து, அத்துடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், ஒரு நல்ல மாற்றத்தை விரைவில் காணலாம்.

கடலை மாவு

கடலை மாவு பஜ்ஜி போண்டா போடுவதற்கு மட்டுமின்றி, அழகு பராமரிப்பு பொருளாகவும் பழங்காலம் முதலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் இதனைக் கொண்டு ஃபேஸ் பேக் போட்டு வந்தால், முகம் பொலிவு பெறும். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 1 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் 2-3 துளிகள் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி 25 நிமிடம் நன்கு காய வைக்க வேண்டும். பின் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி விட்டு, மாய்ஸ்சுரைசர் தடவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா கொண்டு ஸ்கரப் செய்தால், திறந்த சருமத் துளைகள் குறையும். அதற்கு 2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை வெதுவெதுப்பான நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 30 நொடிகள் மென்மையாக மசாஜ் செய்து, குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி மூன்று நாளைக்கு ஒருமுறை செய்தால், முகத்தில் உள்ள குழிகள் விரைவில் மறைவதைக் காணலாம்.

முல்தானி மெட்டி

முல்தானி மெட்டி என்னும் ஒரு வகை களிமண், அனைத்து வகையான சருமத்திலும் மாயங்களை ஏற்படுத்தக்கூடியவை. குறிப்பாக எண்ணெய் பசை சருமத்தினருக்கு மிகவும் நல்லது. ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பொடியுடன் 2-3 டேபிள் ஸ்பூன் பால் அல்லது ரோஸ்வாட்டர் சேர்த்து கலந்து முகத்தில் தடவி நன்கு காய வைக்க வேண்டும். பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், முகம் நன்கு பொலிவோடு இருப்பதுடன், முகத்தில் உள்ள குழிகளும் மறையும்.

தேன்

தேன் ஒரு நேச்சுரல் மாய்ஸ்சுரைசர் மட்டுமின்றி கிளின்சரும் கூட. இது மூக்கு மற்றும் கன்னங்களில் திறந்துள்ள சருமத் துளைகளை மூட உதவக்கூடிய பொருளும் கூட. அதற்கு தேனை தினமும் முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவிய பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்தால், சருமம் ஆரோக்கியமாகவும், இளமையுடனும் காட்சியளிக்கும்.

Related posts

டீன் ஏஜ் பெண்களுக்கான அழகு குறிப்புகள்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…ஈடில்லா அழகை தரும் இந்த குறிப்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் :

nathan

முகம் புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டுமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பளிச்சென்ற முகத்தைப் பெற வீட்டிலேயே ப்ளீச்சிங் செய்வது எப்படி?

nathan

இந்த இரண்டு பொருட்களைக் கொண்டே உங்கள் முகத்தை இயற்கையாக ஜொலிக்க வைக்க முடியும். ….

sangika

இந்த ஜூஸ்களில் ஏதேனும் ஒன்றை தினமும் ஒரு டம்ளர் குடிச்சா.. நீங்க சீக்கிரம் வெள்ளையாவீங்க..!

nathan

முகத்தை பளபளவென மாற்ற இவற்றை தினமும் காலையில் செய்யுங்கள்!…

sangika

சோப்பிற்கு பதிலாக இதை பயன்படுத்தினால் நல்ல பயன் கிடைக்கும்…தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்களுக்கு இரண்டே வாரத்தில் கரும்புள்ளிக்கு குட்-பை சொல்லணுமா?அப்ப இத படிங்க!

nathan