27.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
25 moong dal kurma
​பொதுவானவை

காரசாரமாக பாசிப் பருப்பு குருமா

விடுமுறை நாட்களில் நன்கு காரசாரமாக சாப்பிட்டிருப்பீர்கள். அப்படியே சாப்பிட்டால், வயிறானது புண்ணாகிவிடும். எனவே அவ்வப்போது பருப்பு வகைகளை உணவில் சேர்த்து வர வேண்டும். அந்த வகையில் இன்று பாசிப் பருப்பு குருமாவை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம்.

இந்த பாசிப் பருப்பு குருமாவானது இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் போன்றவற்றிற்கு அருமையாக இருக்கும். சரி, இப்போது அந்த பாசிப் பருப்பு குருமாவின் செய்முறையைப் பார்ப்போமா!!!

Moong Dal Kurma
தேவையான பொருட்கள்:

பாசிப் பருப்பு – 1 கப்
வெங்காயம் – 1 (நறுக்கியது)
தக்காளி – 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 1 (நீளமாக கீறியது)
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
பூண்டு – 3-4
எலுமிச்சை – 1
பட்டை – 1/2 இன்ச்
ஏலக்காய் – 1
கிராம்பு – 2
எண்ணெய் – 3 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பாசிப்பருப்பை சேர்த்து வாசனை வர நன்கு வறுக்க வேண்டும்.

பின்னர் அதனை குக்கரில் போட்டு, 1/4 கப் தண்ணீர் ஊற்றி, 1-2 விசில் விட்டு இறக்கி, மசித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும்.

பிறகு அதில் பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கி, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

அடுத்து அதில் தக்காளியை சேர்த்து 2 நிமிடம் வதக்கி, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கிளறி, பின் மசித்து வைத்துள்ள பாசிப்பருப்பு மற்றும் 1/2 கப் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, எலுமிச்சை சாற்றினை ஊற்றினால், பாசிப்பருப்பு குருமா ரெடி!!

Related posts

கோபமாக இருக்கும் கணவரை சமாதானப்படுத்துவதற்கான வழிகள்

nathan

சத்தான சுவையான பனிவரகு கஞ்சி

nathan

வெற்றிலை நெல்லி ரசம்

nathan

ஜவ்வரிசி சுண்டல்

nathan

சின்ன வெங்காய ரசம்|sambar vengaya rasam

nathan

மாங்காய் தொக்கு செய்வது எப்படி

nathan

சீனி சம்பல்

nathan

சீஸ் பை

nathan

கறிவேப்பிலை தொக்கு

nathan