26.2 C
Chennai
Sunday, Dec 22, 2024
facepack
முகப் பராமரிப்பு

இந்த மாஸ்க் போடுங்க… ஒரே ஃபேஸ் பேக்குல வெள்ளையா தெரியணுமா?

ஒவ்வொருவருக்கும் பொலிவான மற்றும் பிரகாசமான சருமம் வேண்டுமென்ற ஆசை இருக்கும். மாடல்கள் மற்றும் நடிகைகள் தங்களது சருமத்தை திரையில் பளிச்சென்று காட்டுவதற்கு மேக்கப் போடுவார்கள். ஆனால் மேக்கப்பின் உதவியின்றி ஒருசில இயற்கை வழியின் மூலம் சருமத்தை வெள்ளையாகவும் பிரகாசமாகவும் காட்டலாம். அதற்கு நாம் சரியான பொருட்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றைக் கொண்டு ஃபேஸ் பேக்கை போட வேண்டும்.

நீங்கள் கருப்பாகவும், பொலிவிழந்த சருமத்துடனும் காட்சியளிக்கிறீர்களா? அப்படியானால் இக்கட்டுரை மிகவும் உபயோகமாக இருக்கும். ஏனெனில் இக்கட்டுரையில் ஒருவரது சரும நிறத்தை அதிகரித்துக் காட்டும் சில எளிய ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஏதேனும் ஒன்றை ஒருமுறை பயன்படுத்தினாலே, சரும நிறம் அதிகரித்திருப்பதைக் காணலாம்.

சரி, இப்போது ஒரே உபயோகத்தில் சருமத்தின் நிறத்தை அதிகரித்து வெள்ளையாக காட்டும் சில ஃபேஸ் பேக்குகள் குறித்து காண்போம்.

பப்பாளி ஃபேஸ் பேக்

* ஒரு பௌலில் சிறிது பப்பாளியை நன்கு பேஸ்ட் போல் மசித்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதில் 1/2 டீஸ்பூன் சந்தன பவுடர், 1/2 டீஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* பின்பு அந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 20 நிமிடம் நன்கு காய வைக்க வேண்டும்.

* இறுதியில் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

* இந்த மாஸ்க்கை ஒருவர் வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தலாம்.

சிவப்பு களிமண் ஃபேஸ் பேக்

* ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் சிவப்பு களிமண், 1/2 டீஸ்பூன் ஆரஞ்சு தோல் பொடி, 1 சிட்டிகை மஞ்சள், 1/2 டீஸ்பூன் தேன் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

* பின்பு அந்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் தடவி 10-15 நிமிடம் நன்கு ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

* இறுதியில் குளிர்ந்த நீரால் ஒருமுறை முகத்தைக் கழுவ வேண்டும்.

* இந்த மாஸ்க்கை ஒருவர் வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தலாம்.

வாழைப்பழ ஃபேஸ் பேக்

* ஒரு பௌலில் பாதி வாழைப்பழத்தைப் போட்டு நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதில் 1/2 டீஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் தயிர் மற்றும் சில துளிகள் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

* பின்பு அதனை கருமையாக இருக்கும் முகத்தில் தடவி 15 நிமிடம் நன்கு காய வைத்து, வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

* இப்படி வாரத்திற்கு 2 முறை இந்த ஃபேஸ் பேக்கை போட, பொலிவிழந்து அசிங்கமாக காணப்படும் முகம் எப்போதுமே பொலிவாகவும், வெள்ளையாகவும் காட்சியளிக்கும்.

ஓட்ஸ் ஃபேஸ் பேக்

* ஒரு பௌலில் ஓட்ஸை பொடி செய்து 2 டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதில் 1 டீஸ்பூன் சந்தன பவுடர் சேர்த்து, தேவையான அளவு ரோஸ் வாட்டர் ஊற்ற பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

* பின்பு அந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15 நிமிடம் நன்கு காய வைத்து, நீர் பயன்படுத்தி ஸ்கரப் செய்து கழுவ வேண்டும்.

* இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறை போட முகம் பளிச்சென்று பிரகாசமாக காட்சியளிக்கும்.

தக்காளி ஃபேஸ் பேக்

* ஒரு பௌலில் ஒரு சிறிய தக்காளியை அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவ வேண்டும்.

* பின்பு 10 நிமிடம் நன்கு ஊற வைத்து, ஈரமான கைவிரலால் முகத்தை சிறிது நேரம் மென்மையாக மசாஜ் செய்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

* இந்த மாஸ்க்கை ஒருநாள் விட்டு ஒருநாள் பயன்படுத்தலாம். ஆனால் வாரத்திற்கு 2 முறைக்கு மேல் ஸ்கரப் செய்ய வேண்டாம்.

ரோஜாப்பூ இதழ் மற்றும் பால்

* ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் சந்தன பவுடரை எடுத்து 2 டேபிள் ஸ்பூன் பால் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அதில் ரோஜாப்பூ இதழ்களை அரைத்து பேஸ்ட் செய்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின்பு இந்த கலவையை முகத்தில் தடவி 15-20 நிமிடம் நன்கு காய வைத்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

* இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்த நல்ல பலன் கிடைக்கும்.

பாதாம் ஃபேஸ் பேக்

* இரவில் படுக்கும் முன் 5-6 பாதாமை நீரில் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.

* மறுநாள் காலையில் அரைத்து பேஸ்ட் செய்து, அதில் 1-2 டேபிள் ஸ்பூன் பால் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

* பின்பு இந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவுங்கள்.

* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தலாம்.

கடலை மாவு ஃபேஸ் பேக்

* ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 1 டேபிள் ஸ்பூன் மில்க் க்ரீம் அல்லது ரோஸ் வாட்டர், சில துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

* பின் இந்த கலவையை முகத்தில் தடவி 15-20 நிமிடம் நன்கு காய வையுங்கள்.

* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவுங்கள். இப்படி வாரத்திற்கு 2-3 முறை இந்த ஃபேஸ் பேக்கைப் பயன்படுத்தலாம்.

முட்டை ஃபேஸ் பேக்

* ஒரு பௌலில் ஒரு முட்டையின் வெள்ளைக்கரு, 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவு மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அந்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் தடவி 10-15 நிமிடம் நன்கு காய வைக்க வேண்டும்.

* பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவி, அதைத் தொடர்ந்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவுங்கள்.

* இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 1-2 முறை பயன்படுத்தலாம்.

வெள்ளரிக்காய் ஃபேஸ் பேக்

* 1/4 வெள்ளரிக்காயை நன்கு அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

* பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* பின்பு அந்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15-20 நிமிடம் நன்கு காய வைக்க வேண்டும்.

* இறுதியில் நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

* இந்த மாஸ்க்கை தினமும் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

Related posts

முகத்தில் முடி அரும்பி வளருகிறதா

nathan

உங்க முகத்தின் அழகை கெடுக்கும் மங்கை போக்க எளிய நாட்டு மருத்துவம்!முயன்று பாருங்கள்

nathan

உங்களுக்கு இயற்கை முறையில் அதிசய முக அழகை பெற வேண்டுமா ???

nathan

முகத்தை ஜொலிக்க வைக்கும் மஞ்சள் நீராவி

nathan

அழகான கொழுக்கொழு கன்னங்களை பெற சூப்பர் டிப்ஸ்….

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… பிரபலமாகி வரும் லைட்-வெயிட் மேக்கப்

nathan

நீங்கள் வீட்டிலேயே செய்யலாம் வெயிலுக்கு ஏற்ற வெள்ளரிக்காய் பேசியல்..!

nathan

ஒரு நாளைக்கு எத்தனை முறை முகம் கழுவுவது நல்லது எனத் தெரியுமா?

nathan

கரு வளையம், கரும் புள்ளிகளால் அவஸ்தையா?

nathan