25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
face scrub
சரும பராமரிப்பு

சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க வேண்டுமா?

சருமத்துளைகளை அடைத்துள்ள அழுக்குகளை நீக்கும் ஒரு சிறப்பான வழி என்றால் அது எக்ஸ்போலியேஷன் தான். பெரும்பாலும் நமது சருமமானது கோடைக்காலம் மற்றும் ஈரப்பதமான மழைக் காலத்தில், பிசுபிசுப்பாகவும், ஆரோக்கியமற்றதாகவும் காணப்படும். நாம் முகத்தை வெறும் நீரால் கழுவுவதால், சருமத்தின் மேல் அடுக்கு வேண்டுமானால் சுத்தமாகுமே தவிர, சருமத்துளைகளின் உள்ளே உள்ள அழுக்குகள் வெளியேறாமல் அப்படியே தான் இருக்கும். எனவே தான் அடிக்கடி முகத்தை ஸ்கரப் பயன்படுத்தி சுத்தம் செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

கடைகளில் ஏராளமான ஸ்கரப்கள் விற்கப்படலாம். ஆனால் அவற்றில் கெமிக்கல்கள் நிறைந்துள்ளதால், அனைவருக்குமே அது சரியாக இருக்கும் என்று கூற முடியாது. சிலருக்கு அப்பொருட்கள் அழற்சியை உண்டாக்கலாம். எனவே எவ்வித அச்சமும் இல்லாமல் ஸ்கரப் பயன்படுத்த வேண்டுமானால், அதற்கு ஒரே வழி இயற்கைப் பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே ஸ்கரப் தயாரித்து பயன்படுத்துவது தான். இதனால் சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேறி, முகம் பளிச்சென்று பொலிவோடு காட்சியளிக்கும்.

 

சரி, இப்போது வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு தயாரிக்கக்கூடிய சில எளிமையான ஸ்கரப்களைக் காண்போம் வாருங்கள்.

காபி ஸ்கரப்

அனைவரது வீட்டிலுமே காபி பவுடர் நிச்சயம் இருக்கும். இந்த காபி பவுடர் ஒரு அற்புதமான ஸ்கரப் போன்று செயல்படும் என்பது தெரியுமா? அதுவும் காபி பவுடரை தேங்காய் எண்ணெய் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மென்மையாக தேய்க்க வேண்டும். பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். சிறந்த பலன் கிடைக்க, வாரத்திற்கு 2 முறை இந்த செயலை மேற்கொள்ள வேண்டும்.

எலுமிச்சை, தேன் மற்றும் சர்க்கரை

இந்த ஸ்கரப்பில் உள்ள எலுமிச்சை பருக்கள், கரும்புள்ளிகள் மற்றும் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க பெரிதும் உதவியாக இருக்கும். இந்த ஸ்கரப் செய்வதற்கு ஒரு பௌலில் சர்க்கரை, ஆலிவ் ஆயில் மற்றும் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதில் எலுமிச்சையின் சாற்றினை சேர்த்து கலந்து, சுத்தமான முகத்தில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

பேக்கிங் சோடா ஸ்கரப்

பேக்கிங் சோடா சருமத்தில் மாயங்களை செய்ய வல்லது. அதற்கு 1 ஸ்பூன் பேக்கிங் சோடாவை, ஏதேனும் ஒரு ஃபேஸ் கிளின்சருடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்ய வேண்டும். பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த ஸ்கரப் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை போக்குவதோடு, பருக்களையும் போக்க வல்லது.

ஓட்ஸ் ஸ்கரப்

ஓட்ஸ் ஸ்கரப் சருமத்தில் உள்ள வலிமிக்க பருக்களை குணமாக்கக்கூடியது. மேலும் இது சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையைப் போக்கி, சருமத்திற்கு பொலிவையும், மென்மைத்தன்மையையும் தரவல்லது. இந்த ஸ்கரப் செய்வதற்கு, 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸில் பால் மற்றும் ஆலிவ் ஆயில் சேர்த்து, ஓட்ஸ் மென்மையாகும் வரை ஊற வைக்க வேண்டும். பின் அதை முகத்தில் தடவி மென்மையாக 2-3 நிமிடம் ஸ்கரப் செய்ய வேண்டும். இறுதியாக குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

கடலை மாவு

ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு போட்டு, அதில் நீர் அல்லது ரோஸ் வாட்டர் அல்லது தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு காய வைக்க வேண்டும். பின் நீர் பயன்படுத்தி மென்மையாக தேய்த்துக் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 1-2 முறை செய்தால், முகத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, முகம் பெலிவோடு இருக்கும்.

பாதாம்

இரவு தூங்கும் முன் 10 பாதாமை நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் தோலுரித்து பேஸ்ட் செய்து, அத்துடன் 2 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 2 நிமிடம் மென்மையாக தேய்க்க வேண்டும். பின் 15 நிமிடம் கழித்து, முகத்தை வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்தால், முகம் எப்போதும் பளிச்சென்று சுத்தமாக இருக்கும்.

Related posts

தெரிஞ்சிக்கங்க…குளிர்காலத்தில் இந்த பொருட்களையெல்லாம் உங்க சருமத்திற்கு பயன்படுத்தாதீங்க…இல்லனா பிரச்சனதான்…!

nathan

பிட்டத்தில் உள்ள அசிங்கமான பருக்களைப் போக்க வேண்டுமா? சூப்பர் டிப்ஸ்

nathan

எந்த வகை சருமத்தினர் எலுமிச்சையை எந்த முறையில் பயன்படுத்தலாம்!!தெரிஞ்சிக்கங்க…

nathan

உள் தொடையில் உள்ள கருமையைப் போக்க சில டிப்ஸ்….

nathan

வயதைச் சொல்லும் கழுத்து

nathan

ரசாயனக் கலப்பற்ற கற்றாழை ஜெல்……

sangika

ஸ்டீம் பாத் எடுக்கலாம்னு இருக்கீங்களா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

வயசானாலும் இளமையா காட்சியளிக்கனுமா? இந்த மூலிகைகள் பயன்படுத்துங்க!!!

nathan

பண்டைய காலத்தில் வாழ்ந்த பெண்கள் அழகுக்காக இதெல்லாமா பயன்படுத்தியிருக்காங்க தெரியுமா?

nathan