26.2 C
Chennai
Saturday, Dec 21, 2024
2 xchooseyourfoundation 1
சரும பராமரிப்பு

கருப்பு சரும நிறத்திற்கு ஏற்ற மேக்கப் !

அழகு என்றாலே வெள்ளை சருமம் தான் என்ற எண்ணம் தான் எல்லாரிடமும் நிலவி வரும் ஒரு விஷயமாக உள்ளது. அவர்கள் கருமை சருமத்தை ஒரு பொருட்டாகக் கூட மதிப்பதில்லை. முன்னாடி நீங்கள் பார்த்தால் தெரியும் கருமை சருமத்திற்கு என்று எந்த வித க்ரீம்களும் மேக்கப் பொருட்களும் கூட கிடையாது. ஆனால் தற்போது நிறைய பியூட்டி பொருட்கள் எல்லா வகையான சருமத்திற்கும் ஏற்றமாதிரி மார்க்கெட்டில் வலம் வருகிறது.

பியூட்டி பொருட்கள் என்றாலே வெள்ளை சருமத்திற்கு தான் என்ற நிலை மாறி இப்பொழுது கொஞ்சம் கருமை சருமத்தையும் கவனிக்க ஆரம்பித்து உள்ளது அழகுத் தொழில். கருமை சருமத்தையும் பராமரிக்க ஏராளமான பியூட்டி பொருட்கள் வருகின்றன. இது கண்டிப்பாக அழகு சாதன தொழிலின் முன்னேற்றம் என்றே கூறலாம்.

ஆனால் இந்த பொருட்களை உங்கள் கருமை சருமத்திற்கு எப்படி தேர்ந்தெடுப்பது, அதை உங்கள் சருமத்திற்கு ஏற்றவாறு எப்படி பயன்படுத்துவது போன்ற குழப்பங்கள் உங்களுக்கு கண்டிப்பாக இருக்கும். நீண்ட நேரம் மேக்கப் போட்டும் உங்களுக்கு சரியான பலன் கிடைக்காவிட்டால் என்ன செய்வீர்கள். கவலை கொள்வீர்கள் அல்லவா.

இனி அது தேவையில்லை. உங்களுக்காக தமிழ் போல்ட்ஸ்கை உங்கள் சருமத்திற்கு ஏற்ற பியூட்டி பொருட்களை பற்றி பேசப் போகிறது. சரி வாங்க அதைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

சரும நிறத்திற்கு ஏற்ற மேக்கப்

உங்களுக்கு சரியான மேக்கப் அமைய முதலில் உங்கள் சரும நிறத்தை கண்டறிந்து கொள்ள வேண்டும். பிறகு உங்கள் சருமத்திற்கான பவுண்டேஷனை தேர்ந்தெடுக்க வேண்டும். இதில் அடர்த்தியான, கூலான மற்றும் நடுநிலையான சரும நிறங்கள் காணப்படுகின்றன.

அடர்த்தியான: பீச் நிறம், மஞ்சள் நிறம் மற்றும் தங்க நிறம்

கூல்: சிவப்பு, பிங்க் மற்றும் நீல நிறம்

நடுநிலையான: மேலே குறிப்பிட்டுள்ள நிறங்கள் அனைத்தும் கலந்தது

உங்கள் சரியான நிறம் என்னவென்று தெரியவில்லை என்றாலும் நாங்கள் உதவுகிறோம்.

ஒயிட் மற்றும் க்ரீம் டெஸ்ட்:

இந்த டெஸ்ட் செய்வதற்கு நீங்கள் எந்த வித மேக்கப்பும் போட்டு இருக்க கூடாது. முதலில் ஒரு வொயிட் நிற துண்டை எடுத்து கொள்ளுங்கள். அந்த துண்டை உங்கள் முகத்தின் எதிரே வைத்து பார்த்தால் அது உங்களுக்கு காம்ப்ளிமென்ட்ரி நிறமாக இருந்தால் உங்கள் சரும நிறம் அடர்த்தியான நிறம்.

இதே மாதிரி க்ரீம் கலர் துண்டை எடுத்து டெஸ்ட் செய்து அது உங்கள் சருமத்திற்கு பொருத்தமாக அமைந்தால் உங்கள் சருமம் கூலான நிறம் . இரண்டுமே பொருத்தமாக அமைந்தால் உங்கள் சருமம் நடுநிலையான நிறம்.

இரத்த நரம்புகளின் நிறம்

உங்கள் மணிக்கட்டில் உள்ள இரத்த நரம்புகளின் நிறம் பச்சையாக இருந்தால் நீங்கள் அடர்த்தியான சரும நிறம் உடையவர்கள். அதுவே நீல நிறமாக இருந்தால் நீங்கள் கூலான சரும நிறம் உடையவர்கள். இதுவே நரம்புகள் நீல மற்றும் பச்சை கலந்த நிறமாக இருந்தால் உங்கள் சரும நிறம் நடுநிலையான நிறமாகும்.

வெள்ளி அல்லது தங்கம்

நீங்கள் தங்கம் மற்றும் வெள்ளி அணிகலன்களை அணிந்து பாருங்கள். உங்களுக்கு தங்க அணிகலன்கள் அழகாக இருந்தால் நீங்கள் அடர்த்தியான சரும நிறம் உடையவர்கள். அதுவே வெள்ளி அழகாக இருந்தால் நீங்கள் கூலான சரும நிறம் உடையவர்கள்.

உங்களுக்கு பொருத்தமான நிறங்கள்:

நீலம், ஊதா, பச்சை மற்றும் மரகத பச்சை நிற ஆடைகளை அணியும் போது உங்களுக்கு அவைகள் பொருத்தமானதாக இருந்தால் நீங்கள் கூலான சரும நிறம் உடையவர்கள். அதுவே சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் மற்றும் ஆலிவ் பச்சை நிற ஆடைகள் பொருத்தமாக அமைந்தால் நீங்கள் அடர்த்தியான சரும நிறம் உடையவர்கள். இதுவே எல்லா நிற ஆடைகளும் பொருத்தமாக இருந்தால் நீங்கள் நடுநிலையான சரும நிறம் உடையவர்கள்.

பவுண்டேஷனை எப்படி தேர்ந்தெடுப்பது?

உங்கள் சரும நிறத்தை கண்டறிந்த பிறகு பவுண்டேஷனை தேர்ந்தெடுப்பது மிகவும் சுலபமான ஒன்றாகும். கொஞ்சம் பவுண்டேஷனை உங்கள் முகத்தில் தடவி அது உங்கள் உடம்பின் நிறத்திற்கும் பொருத்தமாக அமைகிறதா என்பதை பார்த்து தேர்ந்தெடுங்கள். கண்டிப்பாக சரியான பவுண்டேஷனை தேர்ந்தெடுக்க முடியும்.

ப்ளஷ்ஷை தேர்ந்தெடுக்கும் முறை

நீங்கள் கருமை சருமத்தை பெற்று இருந்தால் லேசான ஊதா நிறம், ஆரஞ்சு மற்றும் க்ரான்பெர்ரி நிற ப்ளஷ்ஷை தேர்ந்தெடுக்கலாம். அதுவே உங்கள் சருமம் அடர்ந்த நிறமாக இருந்தால் நல்ல பளிச்சென்ற பிங்க் நிறங்களை தேர்ந்தெடுக்கலாம். நீங்கள் கூலான சரும நிறத்தை பெற்று இருந்தால் ஆரஞ்சு பழ நிறத்தை தேர்ந்தெடுக்கலாம்.

ஐ-ஷேடோவை தேர்ந்தெடுப்பது எப்படி?

நல்ல ஆடம்பர நிறங்கள் அனைத்தும் உங்கள் சருமத்திற்கு பொருந்தும். பளிச்சென்ற நீல நிறம், ஊதா, மரகத பச்சை, பர்குன்டி நிறம் போன்றவை உங்கள் கண்களுக்கு பொருத்தமாக இருக்கும். பிரோன்ஸ் நிறம், தங்க நிறம் போன்றவை உங்கள் கண்களை அடர்த்தியாக பளிச்சென்று காட்டும். வெள்ளை நிறம், பழுப்பு போன்ற லேசான நிறங்களை தேர்ந்தெடுக்காதீர்கள். இது உங்கள் கண்களை வறட்சியாக பொலிவிழந்து காட்டும்.

ப்ரோன்ஸர் பயன்படுத்துதல்

ப்ரோன்ஸர் நிறங்கள் நடுநிலையாக இருந்தால் நன்றாக அமையும். உங்கள் நெற்றி, மேல் கன்னெலும்பு பகுதிகள் போன்றவற்றில் ப்ரோன்ஸரை அப்ளே செய்யவும். இது உங்களுக்கு ஒரு ராயல் லுக்கை கொடுக்கும்.

லிப்ஸ்டிக் நிறங்கள்

க்ளாஸி பிங்க் நிறங்கள் அல்லது ஊதா நிறங்கள், அடர்த்தியான மேட்டி நிறங்கள் போன்றவை உங்கள் உதடுகளுக்கு அழகை கொடுக்கும். நீங்கள் அடர்த்தியான சரும நிறத்தை பெற்று இருந்தால் பீச் நிறம், ஆரஞ்சு – சிவப்பு நிறம், ப்ரவுன் நிறங்கள் போன்றவை பொருந்தும். அதுவே கூலான சரும நிறத்தை பெற்று இருந்தால் ஊதா, பிங்க் மற்றும் சிவப்புடன் நீல நிறம் போன்றவை நல்ல நிறமாக அமையும். உங்கள் உதடுகளும் அழகாக காட்சியளிக்கும்.

Related posts

உள்ளே…வெளியே.. பால்! அழகு குறிப்புகள்!!

nathan

மாநிறத் தோற்றம் வர என்ன செய்ய வேண்டும்?

nathan

தினமும் 10 நிமிடம் செலவழித்தாலே போதும், சருமமானது அழகாகவும், ஆரோக்கியமாகவும் காணப்படும்……

sangika

இதோ டிப்ஸ்.!!முகம் அழகாகவும், உடல் பளபளப்பாகவும் வீட்டிலேயே பெற.!

nathan

சிலருக்கு முகம் ஒரு நிறமாகவும், கழுத்து உடல் ஒரு நிறமாகவும் இருக்கும். சருமம் சீரான நிறம் பெற

nathan

பெண்களே நகத்தை அழகாக வெச்சிக்க ஆசையா?…

nathan

உங்களுக்கு தெரியுமா வாஸ்லின் இருந்தா போதும்… ஒரே கல்லுல 17 மாங்கா அடிக்கலாம்…

nathan

இயற்கையான முறையில் முகத்தை பிரகாசமாக்க வேண்டும் என்றால் இத செய்யுங்கள்!…

nathan

உங்கள் தலைமுடி வறட்சியுடனும், பாதிக்கப்பட்டும் காணப்படுகிறதா?

sangika