30.3 C
Chennai
Wednesday, Jul 16, 2025
utton Brain Fry SECVPF
அசைவ வகைகள்

காரசாரமான ஆட்டு மூளை மசாலா

ஆட்டு மூளையில் கொழுப்பு ரொம்ப ரொம்ப குறைவு. அதில் உள்ள பாஸ்பரஸ் கிட்னியில் உள்ள கசடுகளை சுத்தம் பண்ணுவதால் உடலுக்கு இது மிகவும் நல்லது.

தேவையான பொருள்கள்

ஆட்டு மூளை – 2
மிளகாய்தூள் – 1-1/2 ஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன்
வெங்காயம் – 1/2 கப்
சோம்பு – 1/2 ஸ்பூன்
எண்ணய் – 3 ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை

பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கி வைக்கவும். கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஆட்டு மூளை மேல் பகுதியை தண்ணீரில் மெதுவாக கழுவி ஒரு கப் தண்ணீர் விட்டு மூடி வேகவிடவும்.

அடிக்கடி மூளையைப் புரட்டி போடவேண்டும்.

இல்லாவிட்டால் அடியில் பிடித்து விடும். மூளை நன்றாக வெந்தபின் இறக்கி ஆறவைத்து துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு அதோடு மிளகாய்தூள், மஞ்சள்தூள், உப்பை கலந்து மெதுவாக குலுக்கி வைக்கவும்.

வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் விட்டு சூடானதும் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் மசாலா கலந்த மூளையை சேர்த்து மிகவும் மெதுவாக கிளறவேண்டும். நன்றாக சிவந்தவுடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பறிமாறலாம்.

சூப்பரான ஆட்டு மூளை மசாலா ரெடி.

Related posts

சிக்கன் – காலிஃப்ளவர் மசாலா: வீடியோ இணைப்பு

nathan

அரைத்துவிட்ட மீன் குழம்பு|Arachu vacha meen kulambu

nathan

ஆந்திரா ஸ்டைல் இறால் ப்ரை

nathan

சுவையான கொங்குநாடு கோழி குழம்பு

nathan

சுவையான சீரக மீன் குழம்பு

nathan

கிராமத்து மீன் குழம்பு

nathan

சுவையான காலிஃபிளவர் முட்டை பொரியல்

nathan

உருளைக்கிழங்கு சாதம் செய்வது எப்படி

nathan

சுவையான வறுத்தரைச்ச சிக்கன் குழம்பு

nathan