27 C
Chennai
Thursday, Nov 14, 2024
Crab Masala jpg 1124
அசைவ வகைகள்

ஸ்பைசி நண்டு மசாலா

தேவையான பொருள்கள்

நண்டு – 1 கிலோ
எண்ணெய் – 1 குழி கரண்டி
இஞ்சி பூண்டு – 2 டீஸ்பூன்
கரம் மசாலா – அரை ஸ்பூன்
வெங்காயம் – 2
தக்காளி – 2
காய்ங்த மிளகாய் – 4
மஞ்சள் பொடி – அரை ஸ்பூன்
மிளகு – 2 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
மல்லி – 2 ஸ்பூன்
சோம்பு – அரை ஸ்பூன்
தேங்காய் – 4 டேபிள் ஸ்பூன்
முங்திரி பருப்பு – 4
உப்பு – தேவைக்கு
கறிவேப்பிலை – மல்லி – சிறிதளவு

செய்முறை்

முதலில் நண்டை சுத்தம் செய்து கழுவி தண்ணீர் வடிகட்டி நண்டு மூழ்கும் அளவு தண்ணீர் வைத்து மஞ்சள் பொடி சேர்த்து கொதிவந்ததும் தண்ணீரை வடிகட்டிவிடவும்

வெங்காயம், தக்காளி, மல்லி இலை கட் செய்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை போடவும். வெங்காயம் சேர்த்து வதக்கி, இஞ்சி பூண்டு, கரம் மசாலா, தக்காளி, உப்பு சேர்த்து மூடி அடுப்பை சிம்மில் வைக்கவும்.

மிளகு, மல்லி, சீரகம், சோம்பு லேசாக வறுத்துகொள்ளவும். மிக்ஸியில் மிளகு, சீரகம், மல்லி, சோம்பு தூள் செய்து அத்துடன் தேங்காய், முந்திரி, பச்சை மிளகாய், மல்லி இலை சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்.

கடாயில் வெங்காயம், தக்காளி கிரேவி மசிந்து வந்தவுடன் நண்டை சேர்க்கவும். மூடி போட்டு 10 நிமிடம் வேகவிடவும். பின்பு தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

பின்பு அத்துடன் அரைத்தமசாலா, தேங்காய் கலவை சேர்த்து 15 நிமிடம் வைத்து மசாலா வாசனை போனவுடன் எண்ணெய் மேலே மிதந்து வரும்போது இறக்கவும்.
சூப்பர் நண்டு மசாலா ரெடி.
Crab%20Masala jpg 1124

Related posts

மட்டன் குருமா செய்ய வேண்டுமா…!

nathan

சுவையான கேரளா ஸ்டைல்: இறால் பெப்பர் ப்ரை

nathan

இறால் தொக்கு

nathan

சுவையான…. மட்டன் சுக்கா

nathan

ருசியான… சிக்கன் பக்கோடா

nathan

ஸ்பைசியான நண்டு வறுவல் செய்வது எப்படி

nathan

சில்லி பன்னீர் எவ்வாறு செய்வது?

nathan

சைனீஸ் சிக்கன் பக்கோடா….

nathan

சூப்பரான பைனாப்பிள் தாய் சிக்கன்

nathan