25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
baldhead 15948
தலைமுடி சிகிச்சை

ஆண்களை முடி உதிர்வது இருந்து விடுபட உதவும் உணவு வகைகள்!

தினமும் தலைமுடியை சீவும் போது முடி உதிர்வதைப் பார்க்கும் போது பெண்களை போல் ஆண்கள் மனமும் பதட்டமடைய கூடும். இந்த உலகில் யாருமே தங்கள் முடி உதிர்வதைத் தாங்கி கொள்ள மாட்டார்கள். இருப்பினும் இன்றைய காலகட்டத்தில் கையாளப்படும் அதிகரித்த மனஅழுத்தம், தாமதமாக உணவை உண்பது, ஒழுங்கற்ற ஊட்டச்சத்து , மோசமான கூந்தல் பராமரிப்பு போன்றவற்றின் காரணமாக முடி உதிர்வது ஒரு பொதுவான பாதிப்பாக பார்க்கப்படுகிறது.

பொதுவாக ஒருசில முடி உதிர்வது ஒரு மோசமான அறிகுறி இல்லை என்றாலும், ஒரு நாளில் 100 முடிகளுக்கு மேல் உதிரும் பட்சத்தில் அது அன்ட்ரொஜெனிடிக் அலோபீசியா என்னும் ஆண்முறை வழுக்கை என்று அறியப்படுகிறது. பொதுவாக இந்த பாதிப்பு பெண்களை விட ஆண்களை அதிகம் பாதிக்கிறது.

இந்த பாதிப்பைக் கண்டறிய மற்றும் சீரான சிகிச்சை பெற மருத்துவ நிபுணரை கலந்தோசிப்பது நல்லது. ஆனால் இது மட்டும் போதுமானது அல்ல. தலைமுடி முழுவதும் வழுக்கை ஆவதைத் தடுக்கும் விதத்தில் உங்கள் உடலுக்கேற்ற ஊட்டச்சத்துகளை உணவு மூலம் எடுத்துக் கொள்வது கூடுதல் தேவையாகிறது. வழுக்கை பாதிப்பைக் குறைக்க ஆண்கள் தங்கள் உணவில் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவு குறித்து இந்த பதிவில் நாம் தொடர்ந்து பார்க்கலாம்.

முடி இழப்பைத் தடுக்க உதவும் உணவுகள்:

நமது வாழ்க்கை முறையில் உணவு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை நாம் மறுக்க முடியாது. பல்வேறு ஊட்டச்சத்துகள் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வதால் பல்வேறு ஆரோக்கிய பாதிப்புகள் தடுக்கப்படுகின்றன. ஆண்முறை வழுக்கையை தடுக்க உதவும் 5 உணவுகள் குறித்து இப்போது நாம் காணவிருக்கிறோம். முடி உதிர்விற்கான அறிகுறிகளை எதிர்கொள்ளும் ஆண்கள் இந்த உணவுகளை நிச்சயம் தங்கள் உணவில் இணைத்துக் கொள்ளலாம்.

முட்டை

புரதம் மற்றும் பயோட்டின் போன்ற சத்துகளின் மிகப்பெரிய ஆதாரமாக விளங்குவது முட்டை. இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் கூந்தல் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். தலைமுடியின் வேர்க்கால்களை வலிமையாக்க புரதம் உதவுகிறது, அதே நேரத்தில் கூந்தலுக்கான புரதமான கெரட்டின் உற்பத்திக்கு பயோட்டின் உதவுகிறது. இது முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது. பொதுவாக இந்த ஊட்டசத்துகளின் குறைபாடு கூந்தல் பாதிப்பை உண்டாக்குகிறது. ஆகவே ஒரு நாளில் ஒன்று அல்லது இரன்டு முட்டை எடுத்துக் கொள்ளுங்கள்.

சால்மன்

சால்மன் என்பது கொழுப்பு மீனாகும். இதில் ஒமேகா 3 கொழுப்பு சத்து, புரதம் மற்றும் வைட்டமின் டி சத்துகள் உள்ளன. இவை அனைத்தும் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் ஊட்டச்சத்துகளாகும் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்தை அதிகரிப்பதாகும். சால்மன் மீன் உட்கொள்வதால் முடி வளர்ச்சி ஊக்குவிக்கப்படுகிறது. நீங்கள் சைவ உணவு உட்கொள்பவர் என்றால் கீழ் உள்ள உணவுகள் உங்களுக்கு சிறப்பான தீர்வைத் தரும். இந்த பதிவில் உள்ள அதிகபட்ச உணவுகளை உட்கொள்வதால் உங்களுக்கு சிறந்த தீர்வுகள் கிடைக்கும்.

கேரட்

கேரட் கண்பார்வைக்கு சிறந்தது மட்டுமில்லாமல் தலைமுடி ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது. கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் முடி ஆரோக்கியத்திற்கு மிகச் சிறந்ததாக உள்ளது. முடியின் வேர்கால்களுக்கு வலிமைத் தந்து, முடி இழப்பைத் தடுக்க உதவுகிறது. கேரட்டில் வைட்டமின் ஏ, சி, கே, பி காம்ப்ளெக்ஸ் போன்ற சத்துகள் மற்றும் பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்து போன்றவை உள்ளன. இவை அனைத்தும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் ஏற்றது.

பசலை கீரை

உடல் ஆரோக்கியத்திற்கு பச்சை இலையுடைய காய்கறிகள் மிகவும் நன்மை அளிக்கிறது. இவற்றில் கூந்தல் பராமரிப்பிற்கான ரகசியமும் அடங்கியுள்ளது. பசலைக்கீரை என்னும் ஒரு வகை கீரை பல்வேறு முக்கிய ஊட்டச்சத்துகள் நிரம்பிய உணவாகும். இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் பி ,சி, ஈ, கால்சியம் , பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை உள்ளன. பசலைக் கீரையை சாலட் , ஸ்மூத்தி, பாலக் பன்னீர் போன்றவற்றில் சேர்த்து உட்கொள்ளலாம்.

நட்ஸ் மற்றும் விதைகள்

பொதுவாக நட்ஸ் மற்றும் விதைகள் உட்கொள்வதில் உடலின் ஆரோக்கியம் அதிகரிக்கிறது, அதே நேரத்தில் இதனால் கூந்தல் வளர்ச்சி ஊக்குவிக்கப்படுகிறது. குறிப்பாக வால்நட்ஸ் மற்றும் ஆளி விதைகள் போன்றவற்றில் ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் இருப்பதால் வழுக்கை பாதிப்பிற்கு சிறந்த தீர்வைத் தருகிறது. இந்த நட்ஸ் மற்றும் விதைகளை உட்கொள்வதால் கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கிறது என்று ‘காஸ்மெட்டிக் டெர்மடோலோஜி’ பத்திரிகை ஒரு ஆய்வை வெளியிட்டுள்ளது.

Related posts

தினமும் தலையில் எண்ணெய் தடவி நன்றாக வாரி, நுனி வரை பின்னல் போட்டு ரிப்பன் கட்டிக் கொள்வதால் முடி ஒரே…

nathan

அழகான மற்றும் ஆரோக்கியமான கூந்தலைப் பெற மேற்கொள்ள வேண்டியவைகள்!!!

nathan

முடியின் அடர்த்தியை அதிகரிக்க வேண்டுமா? அப்ப இதெல்லாம் ட்ரை பண்ணி பாருங்க…

nathan

பிசுபிசுப்பான கூந்தலுக்கான காரணமும் தீர்வுகளையும் தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா?

nathan

வெறும் 30 நாட்களில் தலைமுடி அடர்த்தியாக வளரணுமா?இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

பொடுகு என்றால் என்ன? எதனால் வருகிறது?

nathan

அடர்த்தியான கூந்தல் வேண்டுமா?

nathan

வறண்ட கூந்தல் பட்டுப்போல பளபளக்க பத்து டிப்ஸ்

nathan

உங்களுக்கு காலையில் தலைக்கு குளிக்க நேரமில்லையா? இதோ சில டிப்ஸ்…

nathan