பெண்களை போல் ஆண்களும் முகத்தை அழகாக வைத்து கொள்ள வேண்டும் என்று எண்ணுவதுண்டு. ஆனால் வெயிற்காலங்களில் வேலை நிமிர்த்தம் அதிகம் வெளியில் செல்லுவதனால் தகுந்த பராமரிப்பை முகத்திற்கு வழங்குவதில்லை. இதனால் முகம் எப்போதுமே பொலிவிழந்து காணப்படும்.
பொலிவிழந்து அசிங்கமாக காட்சியளிக்கும் ஆண்கள் தங்கள் அழகை மேம்படுத்த ஓரு சில இயற்கை வழிகள் உள்ளன. இவற்றை தொடர்ந்து பின்பற்றி வந்தால் நல்ல பயனை தரும். தற்போது அவை என்னெ்னன என்பதை பார்ப்போம்.
ஒரு பௌலில் ஒரு டீபூன் தயிர் மற்றும் 3 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை முகம் மற்றும் கருமையாக உள்ள கை மற்றும் பிற பகுதிகளில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்தால், சருமத்தில் வெயிலால் ஏற்பட்ட கருமை நீங்கும்.
ஒரு பௌலில் சிறிது மில்க் க்ரீம் மற்றும் சிறிது ஓட்ஸ் பவுடர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் மென்மையாக தேய்த்துக் கழுவ வேண்டும்.
ஒரு டீஸ்பூன் வேப்பிலை பொடியை ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 3 முறை போட்டு வந்தால், ஆண்களின் முகத்தில் உள்ள பருக்கள் காணாமல் போகும்.
துளசி மற்றும் புதினா பவுடரை பயன்படுத்தலாம் அல்லது துளசி இலைகள் மற்றும் புதினா இலைகளை சம அளவில் எடுத்து சிறிது நீர் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி பத்து நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 3 முறை செய்தால், நல்ல பலன் கிடைக்கும்.
ஒரு டீஸ்பூன் ஆரஞ்சு ஜூஸ் மற்றும் ஒரு டீஸ்பூன் தேன் எடுத்து ஒன்றாக கலந்து முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்து, பதினைந்து நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சரும கருமை நீங்கி, முகம் பளிச்சென்று காணப்படும்.
சரும நிறத்தை அதிகரிக்க ஒரு டீஸ்பூன் கடலை மாவுடன் 3 சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் சிறிது தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி 20 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
அரிசி மாவு மற்றும் தயிரை ஒன்றாக கலந்து, முகத்தில் தடவி பத்து நிமிடம் ஊற வைத்து, பின் நீர் பயன்படுத்தி மென்மையாக முகத்தைத் தேய்த்துக் கழுவ வேண்டும்.