என்னென்ன தேவை?
மீன் – 300 கிராம்
எண்ணெய் – 1/2 கப்
கடுகு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
வெந்தயம் – 1/4 தேக்கரண்டி
பெருங்காயம் – 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
தக்காளி – 1
கொத்தமல்லி தூள் / மல்லி பொடி – 2 டீஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள் – 3 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
புளி – 1 சிறிய எலுமிச்சை அளவு
தண்ணீர் – 2 கப்
உப்பு
எப்படி செய்வது?
புளியை 1 கப் தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், வெந்தயம் சேர்த்து பொடித்து, பெருங்காயத்தூள் சேர்த்து கிளறி நறுக்கிய தக்காளி, சிறிது உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். மல்லிதூள், மஞ்சள் தூள் சேர்த்து கிளறிய பின் காஷ்மீரி மிளகாய் தூளை சேர்க்கவும். கிரேவி பதத்திற்கு வரும் வரை கிளறவும். அதனுடன் சுத்தம் செய்து வைத்துள்ள மீனை சேர்த்து மீனுடன் மசாலா கலக்கும் வரை கிளறி கரைத்து வைத்துள்ள புளி தண்ணீரை சேர்க்கவும். சிறிது கறிவேப்பிலையை தூவி உப்பு சரி பார்த்து சில நிமிடங்கள் கழித்து மூடி வைத்து மீனை வேகவிட்டு இறக்கினால் ஆந்திரா சாப்பல புலுசு ரெடி.