24.7 C
Chennai
Saturday, Dec 13, 2025
11 bhindi buttermilk
சைவம்

சூப்பரான வெண்டைக்காய் மோர் குழம்பு

மதியம் என்ன செய்வதென்று தெரியாமல் திணறிக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் வெண்டைக்காய் மோர் குழம்பு செய்து சாப்பிடுங்கள். இது 20 நிமிடங்களில் செய்து முடிக்கக்கூடிய சுவையான ஒரு குழம்பு. அதிலும் மோர் குழம்பு பிடித்தவர்களுக்கு, இந்த குழம்பு மிகவும் பிடிக்கும்.

சரி, இப்போது அந்த வெண்டைக்காய் மோர் குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Mouthwatering Bhindi Buttermilk Curry
தேவையான பொருட்கள்:

வேக வைத்த துவரம் பருப்பு – 1 கப்
புளித்த மோர் – 1 பௌல்
வெண்டைக்காய் – 1/4 கிலோ (நறுக்கியது மற்றும் எண்ணெயில் வறுத்தது)
கடலைப்பருப்பு – 4-5 டேபிள் ஸ்பூன் (நீரில் ஊற வைத்தது)
துருவிய தேங்காய் – 1 பௌல்
சீரகம் – 2 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
இஞ்சி – 1 இன்ச்
கொத்தமல்லி – சிறிது
பச்சை மிளகாய் – 2-3
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் கடலைப் பருப்பு, தேங்காய், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்பு அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி, 10 நிமிடம் பச்சை வாசனை போக கொதிக்க விட வேண்டும்.

பிறகு அதில் வறுத்த வெண்டைக்காய், துவரம் பருப்பு மற்றும் உப்பு சேர்த்து 10-15 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

இறுதியில், குழம்பானது சற்று கெட்டியானதும் அதில் புளித்த மோர் ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், வெண்டைக்காய் மோர் குழம்பு ரெடி!!!

Related posts

மணத்தக்காளி விதை காரக்குழம்பு

nathan

கொத்தமல்லி புலாவ்

nathan

அசத்தலான சுவையில் இஞ்சி குழம்பு

nathan

வெண்டைக்காய் பொரியலை ஒரு முறை இப்படி செய்து பாருங்க…

nathan

முட்டைகோஸ் – பட்டாணி சாதம்

nathan

தேங்காய்ப்பால் குழம்பு,சமையல்,TamilCook, Indian Cooking Recipes in Tamil and English

nathan

கத்தரிக்காய் வதக்கல்

nathan

சீரக குழம்பு

nathan

தேங்காய்ப்பால் புளியோதரை

nathan