23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
5 sandalwoodpaste
சரும பராமரிப்பு

பெண்களே…. அந்தரங்க பகுதி ரொம்ப கருப்பா இருக்கா? எளிய நிவாரணம்

அழகு பராமரிப்பு என்று வரும் போது நம்மில் பெரும்பாலானோர் முகம், கை, கால்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுப்போம். இதனால் பலரது முகம், கை மற்றும் கால்கள் அழகாகவும், இதர பகுதிகள் பராமரிப்பு இல்லாததால் கருமையாகவும் அசிங்கமாகவும் காணப்படும். குறிப்பாக பலரது அழகு பராமரிப்பு பகுதிகளின் பட்டியலில் அந்தரங்க பகுதிகள் இருந்திருக்காது. அப்படியே இருந்தாலும், அது கடைசியாகத் தான் இருக்கும்.

உடலிலேயே அந்தரங்க பகுதியில் உள்ள சருமம் மிகவும் சென்சிடிவ்வானது மற்றும் அடிக்கடி அரிப்புக்கள், அழற்சி ஏற்படும் பகுதியும் கூட. பெரும்பாலானோரது அந்தரங்க பகுதி கருமையானதாக இருக்கும். இந்த பகுதியில் உள்ள கருமையைப் போக்குவதற்கு மார்கெட்டில் விற்கப்படும் க்ரீம்களை வாங்கி பலர் பயன்படுத்துவர். இதனால் அந்த க்ரீம்களில் உள்ள கெமிக்கல்கள் சிலருக்கு அழற்சியை உண்டாக்கும். இப்படி ஏற்படும் அழற்சியைத் தவிர்க்க சிறந்த வழி இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்துவது தான்.

 

இப்போது அந்தரங்க பகுதியில் உள்ள கருமையைப் போக்க உதவும் சில எளிமையான இயற்கை வழிகளைக் காண்போம்.

தேங்காய் எண்ணெய் மற்றும் தேன்

ஒரு வாணலியில் 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை அடுப்பில் வைத்து 20 நொடிகள் சூடேற்ற வேண்டும். பிறகு அந்த கலவையை கருமையாக உள்ள அந்தரங்க பகுதியைச் சுற்றி தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்பு ரோஸ் வாட்டர் பயன்படுத்தி துடைத்து எடுக்க வேண்டும்.

மோர்

ஒரு பௌலில் சிறிது மோர் எடுத்துக் கொண்டு, பஞ்சுருண்டையைப் பயன்படுத்தி கருப்பாக உள்ள அந்தரங்க பகுதியைச் சுற்றி மென்மையாக தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, பிறகு நீரில் நனைத்த பஞ்சுருண்டையால் துடைத்து எடுக்க வேண்டும். இப்படி தினமும் செய்தால், மோரில் உள்ள எக்ஸ்போலியேட்டிங் பொருள், சருமத்தில் உள்ள கருமையை நீக்கும்.

வெள்ளரிக்காய் மற்றும் கற்றாழை

சிறிது வெள்ளரிக்காயை மென்மையாக அரைத்து பேஸ்ட் செய்து செய்து, அத்துடன் சிறிது கற்றாழை ஜெல்லை சேர்த்து கலந்து, கருமையாக உள்ள இடத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்ய விரைவில் சரும கருமை அகலும்.

தயிர்

கருமையாக இருக்கும் அந்தரங்க பகுதியில் தினமும் தயிர் தடவி 5-7 நிமிடம் மசாஜ் செய்து, 15 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும். பிறகு வெதுவெதுப்பான நீரால் அப்பகுதியைக் கழுவ வேண்டும்.

சந்தனம், தக்காளி ஜூஸ், எலுமிச்சை ஜூஸ் மற்றும் வெள்ளரிக்காய் ஜூஸ்
சந்தனம், தக்காளி ஜூஸ், எலுமிச்சை ஜூஸ் மற்றும் வெள்ளரிக்காய் ஜூஸ்
ஒரு பௌலில் சிறிது சந்தன பவுடரை எடுத்து, அதில் சிறிது தக்காளி ஜூஸ், எலுமிச்சை ஜூஸ் மற்றும் வெள்ளரிக்காய் ஜூஸ் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதை கருமையாக உள்ள அந்தரங்க பகுதியில் தடவி சிறிது நேரம் நன்கு காய வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

உருளைக்கிழங்கு

கருப்பாக இருக்கும் அந்தரங்க பகுதியை வெள்ளையாக்க, உருளைக்கிழங்கை வெட்டி அப்பகுதியை சிறிது நேரம் வட்ட சுழற்சியில் தேய்க்க வேண்டும். உருளைக்கிழங்கில் ப்ளீச்சிங் பண்புகள் உள்ளதால், இது சரும கருமையை மறையச் செய்யும். எனவே தினமும் உருளைக்கிழங்கை பயன்படுத்துங்கள்.

ஆலிவ் ஆயில்

தினமும் இரவு தூங்கும் முன் ஆலிவ் ஆயிலைக் கொண்டு அந்தரங்க பகுதியை மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். இதனால் சரும கருமை நீங்குவதோடு, சருமம் மென்மையாகவும், சுருக்கமின்றியும் இருக்கும்.

எலுமிச்சை சாறு

சிறிது எலுமிச்சை சாற்றினை ஒரு பௌலில் எடுத்து, அத்துடன் சிறிது நீர் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, அந்தரங்க பகுதியைச் சுற்றி மென்மையாக தடவி, 3-5 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.

முட்டை வெள்ளைக்கரு

ஒரு பௌலில் ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் உடைத்து எடுத்து, அதை ஒரு கரண்டி பயன்படுத்தி நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின் அதை அந்தரங்க பகுதியில் தடவி, நன்கு காய்ந்த பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

கற்றாழை

ஒரு பௌலில் ஒரு டீஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்து, அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அந்த பேஸ்ட்டை அந்தரங்க பகுதியில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பிறகு வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 3 முறை செய்து வர விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

Related posts

அழகு சிகிச்சை அபாயங்களும் ஆச்சரியங்களும்!

nathan

பப்பாளியில் இருக்கும் அழகு குறிப்பு…

nathan

உங்கள் சருமத்தை பாதிக்கும் மோசமான அழகுப் பொருட்கள்

nathan

beauty tips in tamil ,டல் சருமத்தையும் டாலடிக்கச் செய்யலாம்!

nathan

இளம்பெண்களே! உங்க அழகுக்கு அழகு சேர்க்க, தினமும் நீங்கள் பின்பற்ற‍வேண்டிய வழிமுறைகள்

nathan

இவைகள் இளமையிலேயே சருமத்தை சுருங்கச் செய்யும் என்பது தெரியுமா?

nathan

பெண்களே உங்க முழங்கால் அசிங்கமா கருப்பா இருக்கா?இதோ எளிய நிவாரணம்

nathan

பெண்களே உங்களுக்கு தெரியுமா மருதாணியில் ஒளிந்திருக்கும் தனித்துவமான ரகசியம்!

nathan

சரும அழகிற்கு குளியல் பொடி

nathan