26.4 C
Chennai
Monday, Dec 30, 2024
9a00c7d8
கேக் செய்முறை

சுவையான மாம்பழ கேக் செய்வது எப்படி?

குழந்தைகள் விரும்பி உண்ணும் உணவில் முக்கியமான ஒன்று கேக். அந்த வகையில், வீட்டிலேயே எளிய முறையில் மாம்பழ கேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்…

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு – 1 1/2 கப்

சர்க்கரை – 1 கப்

மாம்பழம் – பாதி

பால் – 1/2 கப்

வெனிலா எசன்ஸ் – 4 துளிகள்

பட்டர் -1 கப்

வால்நட் – சிறிது

பேக்கிங் பவுடர் – 1 தேக்கரண்டி

செய்முறை

முதலில் பட்டரை நன்கு நீர் போல் உருக்கிக் கொள்ளவும். அதன் பின்னர் அதனுடன் கோதுமை மாவு, சர்க்கரை, பேக்கிங் பவுடர் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும்.

பின் மாம்பழத்தை தோல் உரித்து, ஒன்றுக்கு இரண்டாக மிக்ஸியில் அடித்துக் கொள்ளவும். கோதுமை கலவையில் மாம்பழ கூழ், பால், வெனிலா எசன்ஸ் மற்றும் பட்டரை ஊற்றவும். சிறிது மாம்பழக் கூழை தனியே எடுத்து வைக்கவும்.

அனைத்து கலவையையும் பீட்டரில் மென்மையாக நன்கு கலக்கவும்.

பின் ஒரு மைக்ரோ ஓவன் ட்ரேயில் 60% மேல் இருக்காதவாறு கலவையை ஊற்றவும். அப்போது தான் கேக் நன்கு வெந்து உப்பி வர தேவையான இடம் கிடைக்கும்.

ஓவனை 325 சூடுக்கு முதலில் சூடு செய்து டிரேயை 45 நிமிடம் வரை வைக்கவும். அவ்வப்போது திறந்து பார்த்து நிறத்தை சோதனை செய்து கொள்ளவும்.

கேக் நன்கு பிரவுன் கலரில் மாறியதும் அதை திருப்பி போட்டு 5 நிமிடம் ஆற விடவும். பின் மீதமுள்ள மாம்பழக் கூழை கேக்கின் மீது தடவி வேண்டிய டிசைனை செய்து கொள்ளவும். சுவையான மாம்பழ கேக் ரெடி.

Related posts

எக்லெஸ் கேரட் கேக்

nathan

முட்டையில்லாத ரிச் கேக்

nathan

மினி பான் கேக்

nathan

ருசியான பேரீச்சம்பழ கேக் வீட்டிலேயே செய்யலாம்….

sangika

முட்டையில்லாத பிளாக் ஃபாரஸ்ட் கேக் (ஜெர்மனி)

nathan

பலாப்பழ கேக்

nathan

ருசியான சாக்லேட் கேக் தயார்…

sangika

தேங்காய் கேக்

nathan

கேரட் கேக் / Whole Wheat Carrot Cake

nathan