28.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
c9f8353b
அழகு குறிப்புகள்

சுவையான நூடுல்ஸ் பக்கோடா செய்வது எப்படி?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் விரும்பி உண்ணும் ஒரு உணவு என்றால் அது நூடுல்ஸ் தான். நூடுல்ஸை வைத்து எப்படி சூப்பரான பக்கோடா செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

நூடுல்ஸ் பாக்கெட் – 1

மேகி மசாலா – 1

வெங்காயம் – 1

குடைமிளகாய் – பாதி

முட்டை கோஸ் – தேவைக்கு ஏற்ப

பச்சை மிளகாய் – 1

கொத்தமல்லி – தேவையான அளவு

கடலை மாவு – 4 டேபிள் ஸ்பூன்

சீரகப் பொடி, மிளகாய் பொடி, ரவை, உப்பு – தேவையான அளவு

செய்முறை விளக்கம்

முதலில், வெங்காயம், குடைமிளகாய், முட்டை கோஸ், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அடுத்து, ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி சூடானதும், மேகி மசாலா சேர்க்கவும். அத்துடன், நூடுல்ஸ் சேர்த்து வேக வைத்து தனியாக வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய், பச்சை மிளகாய், கொத்தமல்லி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், இரண்டு டீஸ்பூன் ரவை, உப்பு போட்டு இதனுடன், வேக வைத்த நூடுல்ஸ் சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.

மேலும், கலவையுடன் கடலை மாவை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். அதன் பிறகு, ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்றாக சூடானதும், கலவையை உருண்டை பிடித்து அதில் போட்டு வறுத்து எடுத்தால் சுவையான நூடுல்ஸ் பக்கோடா ரெடி..!. ஒரு முறை வீட்டில் நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க….

Related posts

முட்டைகோஸ் பேஷியல்(home facial)

nathan

இந்துப்பு சரும பராமரிப்பில் அழகை மேம்படுத்த பயன்படும்!

nathan

அற்புதமான அழகு குறிப்புகள்…!!

nathan

குழந்தைக்கான உணவூட்டல் தொடர்பான அறிவு கட்டாயம் அனைவருக்கும் வேண்டியதே…

sangika

கண்களுக்கு கீழ் சுருக்கங்கள் வராமல் எவ்வாறு தடுக்கலாம்

nathan

கோடையிலும் முகம் பளபளப்பா இருக்கணுமா?

nathan

அடிக்கடி செய்து வருவதன் மூலம், அக்குளில் உள்ள மயிர்கால்கள் தளர்ந்து, உதிர்ந்துவிடும்.

nathan

கற்றாழையின் சரும பராமரிப்பு

nathan

உச்சத்திற்கு செல்லும் அதிர்ஷ்ட ராசி யார்?

nathan