தேவையான பொருட்கள்
பச்சரிசி / மைதா – 1 கப்
பட்டர் – 100 கிராம்
சர்க்கரை – ¾ கப்
பேக்கிங் பவுடர் – 1 தேக்கரண்டி
உப்பு – ஒரு சிட்டிகை
வெண்ணிலா – 1 தேக்கரண்டி
பால் – ½ கப்
அன்னாசி துண்டுகள் – பானின் அளவை பொறுத்து
செர்ரி – தேவையான அளவு
வெல்லம் சாஸ் செய்ய:
வெல்லம் / சர்க்கரை – ¼ கப்
வெண்ணெய் – 2 மேஜைக்கரண்டி
நீர் – தேவையான அளவு
செய்முறை:
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்
மாவு, பேக்கிங் பவுடர் மற்றும் உப்பு சேர்த்து சலித்துக் கொள்ளவும்
தனியே வைக்கவும்
கேக் பானை எடுத்து சுற்றிலும் வெண்ணெய் தடவிக் கொள்ளவும்
கடாயில் வெண்ணெய், வெல்லம், நீர் சேர்த்து சூடாக்கவும்
குமிழிகள் வரும் வரை சூடாக்கவும்
வெண்ணெய் தடவப் பட்ட பேனில் ஊற்றவும்
அதன் மேல் அன்னாசி துண்டுகள் மற்றும் செர்ரிகளை போடவும்
ஒரு கிண்ணத்தில் வெண்ணெய், சர்க்கரை மற்றும் வெண்ணிலா போன்றவற்றை எடுத்துக் கொள்ளவும்
பஞ்சு போன்று மென்மையாகும் வரை அவற்றை கலக்கவும்
முட்டை சேர்த்து நன்கு கலக்கவும்
பின்பு அதனுடன் பாதியளவு மாவு கலவையை சேர்க்கவும்
பால் சேர்க்கவும்
இப்போது மீதியுள்ள மாவு கல்வையை சேர்க்கவும்
நன்றாக கலக்கவும்
இதனை அன்னாசி பழ துண்டுகள் மேல் ஊற்றவும்
பின்பு மைக்ரோவேவ் அவனில் வைக்கவும்
பொன்னிறமாகும் வரை சுட்டெடுக்கவும்
அதனை ஒரு தட்டில் தலைகீழாக வைத்து பரிமாறவும்