28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
hairgrowth 16
தலைமுடி சிகிச்சை

கூந்தல் கருமையான நிறத்துடன் செழித்து வளர வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

முடிக்கு அழகே கருப்பு நிறம் தான். அத்தகைய கருமையான முடி தற்போது பலருக்கு கிடையாது, ஏனெனில் நமது வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்கள் ஆரோக்கியமற்றதாக இருப்பதால், உடலுக்கே போதிய சக்துக்கள் கிடைக்காத நிலையில், முடிக்கு மட்டும் எப்படி சத்துக்கள் கிடைக்கும்.

அதுமட்டுமின்றி அதிக நேரம் வெயிலில் சுற்றுவதால், முடியின் நிறம் மாறாமல் இருப்பதற்கு தடவிய எண்ணெய் சூரியனால் உறிஞ்சப்பட்டு, கருமை நிறமானது மங்கிவிடுகிறது.

சிலருக்கு இளமையிலேயே நரை முடியானது வர ஆரம்பிக்கிறது. அதற்கு பரம்பரை அல்லது ஊட்டச்சத்தின்மை தான் காரணமாக இருக்கும். எனவே கூந்தலின் நிறம் மாறாமல் கருமையாக இருப்பதற்கு, நல்ல ஆரோக்கியமான உணவுகளையும், கூந்தலுக்கு அவ்வப்போது போதிய பராமரிப்புக்களையும் கொடுக்க வேண்டும்.

அந்தவகையில் தற்போது கூந்தலை கருமையுடன் வைத்து கொள்ள என்ன பண்ணலாம் என்பதை பார்ப்போம்.

கறிவேப்பிலை, சின்ன வெங்காயம்-4, இரண்டையும் நன்றாக அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து தலைக்கு தேய்த்து முழுகினால் கூந்தல் நல்ல கருமையான நிறத்துடன் வளரும்.

வெந்தயத்தை ஊறவைத்து நன்கு அரைத்து தலையில் பேக் போல போட்டு ஊறிய பிறகு தலைக்கு குளித்தால் தலை முடி செழித்து வளரும்.

தேங்காய் பாலைத் தலையில் அரை மணி நேரம் ஊற வைத்துக் குளித்தால் முடி உதிர்வது நிற்கும். வாரம் ஒரு முறை இப்படியாக முடி உதிர்வது நிற்கிற வரை செய்ய வேண்டும்

மருதாணி, செம்பருத்தி, கருவேப்பிலை, வேப்பிலை, ரோஜா இதழ்கள் இவற்றை அரைத்து தலையில் பூசி குளிக்கவும்.

புளித்த தயிரில் மருதாணி இலை, செம்பருத்திப்பூ மூன்றையுமே அரைத்து கலக்கி தலையில் பூசி 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு சிகைக்காய் தூள் போட்டு குளிர்ந்த நீரில் குளித்து வந்தால் முடி கொட்டாது. பொடுகும் வராது. கூந்தல் பட்டுப்போல் காட்சியளிக்கும்.

வாரம் ஒருமுறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாதகாலம் செய்து வந்தால், எந்த காரணத்தால் முடி கொட்டினாலும் நின்றுவிடும். அதோடு, இக்கீரை நரை விழுவதையும் தடுக்கும். முடியும் கருகருவென வளரும்.

இரவில் நெல்லிக்காய்களை தண்ணீரில் ஊறப்போட்டு, காலையில் அந்நீரில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது நிற்கும். செம்பட்டை முடியும் நிறம் மாறும்.

இஞ்சியைத் துருவி சாறு பிழிந்து, தேங்காய் பால் சேர்த்து பேஸ்ட் செய்து, அதனை நரை முடியின் மீது தடவி, 10 நிமிடம் ஊறவைத்து குளித்தால் அருமையாக இருக்கும்.

கசகசாவும், அதிமதுரமும் சம அளவு எடுத்து, பொடி செய்து, தேங்காய்ப்பாலில் குழைத்து, தலையில் தடவி ஊறியபின் குளித்தால், விரைவில் அருமை தெரியும்.

Related posts

நரை முடியை கறுப்பாக்க – grey hair a thing the past after

nathan

செம்பருத்தி பூவின் மகத்தான பலன்கள்…..

nathan

இளநரையை தடுக்கும் புளி – கருமையாக வைத்துக்கொள்வது எப்படி?தெரிந்துகொள்வோமா?

nathan

பொடுகு! தவிர்க்கலாம். தடுக்கலாம்!

nathan

தலைக்கு எண்ணெய் மசாஜ் செய்வதனால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!!!

nathan

கூந்தல் உதிர்வை தடுக்க இரவில் செய்ய வேண்டியவை

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…ஆயில் மசாஜ் செய்தால் கூந்தல் வளருமா?

nathan

பலவீனமான தலைமுடியை வலிமையாக்க சூப்பர் டிப்ஸ் !

nathan

பொடுகு தொல்லை நீங்க வேண்டுமா?

nathan