25.8 C
Chennai
Sunday, Nov 24, 2024
ld926
தலைமுடி சிகிச்சை

முடி அடர்த்தியாக வளர……இய‌ற்கை வைத்தியம்

முடி அடர்த்தியாக வளர…. பெண்களின் அழகில் முக்கிய பங்கு வகிப்பது கூந்தல். கூந்தல் நீளமாக அடர்த்தியாக இருந்தால் எப்படிப்பட்ட பெண்ணும் அழகு தேவதைதான். ஆனால் என்ன செய்வது அன்றைய நாட்களில் உள்ள பெண்களை போன்று இன்றைய நவநாகரிக நங்கைகளுக்கு கூந்தலை பராமரிக்க போதிய நேரம் கிடைப்பதில்லை. அதன் விளைவு பிளவுபட்ட அடர்த்தி குறைந்த கூந்தல்.

அதுமட்டுமல்லாது இன்றைய பெண்கள் தமது கூந்தலை பல்வேறு விதமான அலங்காரங்களுக்கு உட்படுத்துகின்றனர். முடியை கலர் செய்வது, ரீபொன்டிங், கேர்லிங் என பல வகைகளில் தமது முடியை அலங்கரித்துக் கொள்கின்றனர். அவற்றின் போது சக்திவாய்ந்த இரசாயனங்களை தலைமுடிகளுக்கு பயன்படுத்துவதால் கூந்தல் விரைவாக சேதமடைகிறது.

மேலும் எமது சுழலில் உள்ள தூசு துணிக்கைகள் மற்றும் வளியில் கலந்துள்ள நச்சு வாயுக்கள் போன்றவற்றாலும் கூந்தல் பாதிப்படைகின்றது. அது போன்ற பாதிப்பை வேலைக்குச் செல்லும் பெண்களே அதிகளவில் சந்திக்க நேரிடுகிறது. தலை முடி அடர்த்தி குறைவாக இருக்கிறதே என இனி கவலைப்பட தேவையில்லை. தலையில் முடி அடர்த்தியாக வளர உங்களுக்கு சில குறிப்புக்கள்….

1.ஐந்து இதழ்கள் உள்ள செம்பருத்தி / செம்பரத்தை பூவை அரைத்து நல்லெண்ணையில் காய்ச்சி, வடிகட்டிய பின் தலைக்குத் தேய்த்தால் தலை முடி அடர்த்தியாக வளரும்.

2. முடி செழித்து வளர வாரம் ஒருமுறை வெண்ணெய் தலைக்குத் தடவி ஒருமணி நேரம் கழித்து கழுவி வந்தால் முடி நன்றாக வளரும்.

3.செம்வரத்தம் இலையை அரைத்து தலையில் தடவி அரைமணி நேரம் ஊறிய பின் தலையை சீயக்காய் அல்லது ஷாம்பூ போட்டு அலசவும். கூந்தல் அடர்த்தியாக வளரும்.

4.கறிவேப்பிலை, சின்ன வெங்காயம்-4, இரண்டையும் நன்றாக அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து தலைக்கு தேய்த்து முழுகினால் கூந்தல் நல்ல கருமையான நிறத்துடன் வளரும்.

5. கடுக்காய், செவ்வரத்தம் பூ, நெல்லிக்காய் ஆகியவைகளை சம அளவு எடுத்து தேங்காய் எண்ணெயில் காச்சி கூந்தலில் தடவினால் முடி நன்றாக வளரும்.

6.வெந்தயத்தை ஊறவைத்து நன்கு அரைத்து தலையில் பேக் போல போட்டு ஊறிய பிறகு தலைக்கு குளித்தால் தலை முடி செழித்து வளரும்.

7.ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தன பொடி ஆகியவை தலா 10 கிராம் சேர்த்து, எண்ணெயில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கலவையை நாலு நாள் வெயிலில் வைக்க வேண்டும். சூரிய கதிர்கள் பட்டு எண்ணெயில் எசன்ஸ் இறங்கும். பின் வெள்ளைத் துணியில், அதை வடிகட்டவும். குளிக்கும் முன் இதை தலையில், தேய்த்து வந்தால், முடி கருமையாகும்,அத்துடன் தலை முடி அடர்த்தியாக வளரும்.

8.மருதாணி, செம்பருத்தி, கருவேப்பிலை, வேப்பிலை, ரோஜா இதழ்கள் இவற்றை நன்கு நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்து கொண்டு காய்ச்சிய தேங்காய் எண்ணையில் கலந்து ஊறவிட்டு பின்பு தலைக்கு தேய்க்கவும். இப்படி செய்தால் தலைமுடி உதிர்வது குறையும். எப்பொழுதுமே ஒரு செய்முறை செய்தால் அதை தொடர்ந்து செய்யவேண்டும். மாற்றிக் கொண்டே இருந்தால் முடி உதிர்வதை தடுக்க முடியாது. ஷாம்புக்கள் பயன்படுத்தும் போதும் இதே போல் செய்ய வேண்டும்.அடிக்கடி ஷாம்புக்களை மாற்றினால் முடி உதிரும்.
9.செம்பருத்தி இலையை அரைத்து தலையில் தடவி அரைமணி ஊறிய பின் தலையை சீயக்காய் அல்லது ஷாம்பூ போட்டு அலசவும். கூந்தல் அடர்த்தியாக வளரும்.

10.கருவேப்பிலை, சின்ன வெங்காயம் -4, இரண்டையும் நன்றாக அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து தலைக்கு தேய்த்து குளித்தால் கூந்தல் நல்ல கருமையான நிறத்துடன் வளரும்.
ld926

Related posts

தெரிஞ்சிக்கங்க…முடி கொட்டுவதைத் தடுக்கும் சூப்பர் உணவுகள்!!!

nathan

முடி உதிர்தலை அறவே நிறுத்தும் அற்புத உபயோகமான குறிப்புகள்!! இதோ உங்களுக்காக !!!

nathan

சூப்பர் டிப்ஸ்! முடியின் அடர்த்தி குறைவதை தடுக்க வேண்டுமா?

nathan

பொடுகுத் தொல்லை பெரும் தொல்லை…பொடுகைக் காலி பண்ண சில டிப்ஸ்!

nathan

நீங்கள் Hair style செய்து கொள்வதற்கு முன் இதைப் படியுங்கள்..

nathan

எண்ணெய் வைத்துவிட்டுப் படுக்கலாமா, தலைக்குத் தினமும் குளிக்கலாமா?

nathan

பொடுகை நீக்கி, மேனியை பலபலக்கவைக்கும் ஆலிவ் ஆயில்!

nathan

கேசத்தின் வேர் முதல் நுனி வரை அப்ளை செய்து அரை மணி நேரம் கழித்து அலசுங்கள்.

nathan

இரு மடங்கு அடர்த்தியான கூந்தல் கிடைக்கனுமா? இதை ட்ரை பண்ணுங்க!!

nathan