கற்றாழையின் இலையிலிருந்து எடுக்கப்படும் ஜெல் சருமத்திற்கு பாதுகாப்பதாக கருதப்படுகிறது. சூரிய ஒளியுடன் கலந்து வரும் கடும் வெப்பத்தை ஏற்படுத்தும் காமா மற்றும் எக்ஸ்ரே கதிர் வீச்சுகளின் தீய விளைவுகளிலிருந்து சருமத்தை பாதுகாக்கின்றது.
மேலும் சருமத்தின் ஈரத்தன்மையை காத்து சருமத்தின் நிறத்தையும் மேம்படுத்துகிறது.
இது ஒரு கசப்பு தன்மையைக் கொண்டதால் கூடுதல் பலன் அளிக்கும் இயற்கை மருந்துப் பொருளாக உள்ளது. இது சருமத்திற்கு பலவகையில் உதவுகின்றது.
அந்தவயைில் கற்றாழை ஜெல்லை எப்படி எல்லாம் முகத்திற்கு பயன்படுத்தலாம் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.
கருவளையங்களைப் போக்க கற்றாழை ஜெல்லை தினமும் இரவு படுக்கும் முன் கண்களைச் சுற்றி தடவி, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இதனால் கருவளையங்கள் மறைவதோடு, முகமும் பொலிவோடு காணப்படும்.
கற்றாழை ஜெல்லை கருமையாக இருக்கும் பகுதியில் தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு மூன்று முறை செய்து வந்தால், கருமையானது விரைவில் குறைந்துவிடும்.
ஒரு டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன் பால் மற்றும் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதில் சில துளிகள் ரோ வாட்டர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
கற்றாழை ஜெல்லை தினமும் முகத்தில் காலை மற்றும் மாலையில் தடவி பத்து நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி அன்றாடம் செய்து வந்தால், முகமானது பருக்களின்றி காணப்படும்.
ஒரு டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன் ஒரு டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதைக் கொண்டு தினமும் இரவு தூங்கும் முன் பஞ்சுருண்டையில் அந்த கலவையை நனைத்து முகத்தைத் துடைக்க வேண்டும். இதனால் முகத்திற்கு மேக்கப் போட்டிருந்தால், அது எளிதில் வெளியேறி, முகம் பளிச்சென்று இருப்பதோடு, நீரேற்றத்துடனும் இருக்கும்.